Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Thursday, 1 July 2021

வேலம்மாள் பள்ளி சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக நடத்தும்

 வேலம்மாள் பள்ளி சர்வதேச அளவில்  இரண்டாவது முறையாக நடத்தும் இணையவழி ஓவியப் போட்டிக்குப் போட்டியாளர்களை அழைக்கின்றது.

"கோ கரோனா" எனும் தலைப்பில் வேலம்மாள் பள்ளி நடத்தவிருக்கும் இரண்டாவது சர்வதேச அளவிலான இணைய வழி ஓவியப் போட்டிக்கு
5 வயது முதல் 15 வயது உடைய மாணவர்கள் பங்கேற்கும் வகையில் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதனையொட்டி உலகெங்கிலும் உள்ள இளம் கலைஞர்கள்  2021 ஜூலை 12 -க்குள்  இப்போட்டியில் பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

உங்கள் கலைப்படைப்புகளை 2021 ஜூலை 26-க்கு முன் சமர்ப்பிக்கவும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதி முடிவுகள், எங்கள் வலைத்தளமான

www.velamalnexus.com -இல் 600 க்கும் மேற்பட்ட அற்புதமான பரிசுகளுடன் வெளியிடப்படும் .

முதல் பரிசு -
(இந்திய மதிப்பு) 25000
இரண்டாம் பரிசு - (இந்திய மதிப்பு)  15000
மூன்றாம் பரிசு -
(இந்திய மதிப்பு) ரூ .10000,
மற்றும் தகுதியான பங்கேற்பாளர்களுக்கு உரிய சிறப்புகளும் அளிக்கப்படும்.

* இந்தப் போட்டிக்கான பதிவு முற்றிலும் இலவசம் !!!*

இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகுங்கள்!!!

மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளமான www.velamalnexus.com -ஐப் பார்வையிடவும்
மற்றும் மேலதிகமான விவரங்களுக்கு
+91 7358390402 -ஐத் தொடர்பு கொள்ளவும்.

இளம் கலைஞர்களுக்கு உலகளவிலான போட்டிகளில் தங்கள் திறனை வெளிப்படுத்தக் களம் அமைத்துத் தரும் முயற்சியில் எப்போதும் ஈடுபட்டுள்ள வேலம்மாள் பள்ளி  , இளம் கலைஞர்களைக் கண்டறிந்து பெருமைப்படுத்தும் பாரம்பரியத்தைத்  தொடர்வது மகிழ்ச்சிக்குரிய செயலாகும்.


No comments:

Post a Comment