Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Wednesday, 7 July 2021

தெலுங்கு திரை முன்னணி நாயகன் ராம் பொதினேனி நடிக்கும்

 தெலுங்கு திரை முன்னணி நாயகன் ராம் பொதினேனி  நடிக்கும்  #RAPO19 படபிடிப்பு  ஜூலை 12 முதல் துவங்குகிறது !


தெலுங்கு திரை உலகின்  முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் தமிழின் முக்கிய இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் புதிய படம் உருவாவது அனைவரும் அறிந்த செய்தி. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் துவங்கப்பட்ட இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் துவங்கவுள்ளது. 


நடிகர் ராம் வரும் ஜூலை 12 முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளது. பெரும் இடைவேளைக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வதில்  மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் ராம். 





ரசிகர்கள் குதூகலித்து கொண்டாடும் படியிலான கமர்ஷியல் படங்களை தருவதில் வல்லவர் இயக்குநர் லிங்குசாமி.  அவர் உருவாக்கத்தில் இப்படத்தின் திரைக்கதையை கேட்டவுடன் ராம் ஆனந்த்தில் திளைத்து மகிழ்ந்து இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 


மலையாளத்தில் பெரு வெற்றி பெற்ற Drishyam மற்றும்  Lucifer படங்களின் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ்  RAPO19  படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். KGF படத்திற்கு ஆக்சன் காட்சிகளை வடிவமைத்த, அன்புமணி, அறிவுமணி  சுருக்கமாக அன்பறிவு எனப் பெயர் பெற்ற கூட்டணி இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கின்றனர். சமீபத்தில் பெரு வெற்றி பெற்ற தெலுங்கு படமான Krack  படத்தில் வசனத்தில் கலக்கிய  Sai Madhav Burra இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். தமிழ் பதிப்பிற்கு எழுத்தாளர் பிருந்தா சாரதி வசனம் எழுதுகிறார். Jersey  படத்திற்காக தெசிய விருதை வென்ற  Naveen Nooli  இப்படத்திற்கு படத்தொகுப்புசெய்கிறார். DY சத்யநாரயணா கலை இயக்கம் செய்கிறார். இந்திய அளவில் புகழ்பெற்ற மிகப்பெரும் தொழில் நுட்ப குழு இப்படத்தில் பணியாற்றுகின்றனர். 



 முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் RAPO19 படத்தில் ராம் பொதினேனி, கீர்த்தி ஷெட்டி முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி  Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில்  இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.  பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். 


பன்மொழியில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்படுகிறது.

No comments:

Post a Comment