Featured post

பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25வது நாளை நோக்கி வெற்றிநடை

 *பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’* *மக்கள் நாயகன் ராமராஜனின் ஆலோசனைப்படி பெண்களுக்கு 50 ...

Monday 1 May 2023

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு !!!*

*சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு !!!* 


*20க்கும் மேற்பட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்*

*2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும்: சரத்குமார் பரபரப்பு பேட்டி*


தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார். 

இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது. 


மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், ருத்ரன் திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நடிகர் சரத்குமார். இந்நிகழ்வினில் 

நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்டதாவது…


நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில். 


பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு லைகா புரடக்சன் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி. இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்து சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன் ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள். அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி.  


தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சரத்குமார் பதிலளித்தார். 


***


*Supreme Star Sarath Kumar Press Meet* 


*Actor Sarath Kumar is currently acting in more than 20 films* 


*"There will be a massive announcement in the year 2026" – Actor Sarath Kumar’s sensational statement* 


 

Actor Sarath Kumar acclaimed as ‘Supreme Star’ has made a strong comeback in various roles among which his characterizations as Pazhaya Pazhuvettaraiyar in Ponniyin Selvan and antagonist Bhoomi in Rudhran have earned him acclamations. 

Especially his performance as Pazhaya Pazhuvettaraiyar in Ponniyin Selvan has been appreciated with lots of positive talks. 


Currently, he is busy acting in more than 20 projects including films and web series as protagonist and antagonist. He met, greeted, and interacted with the press and media fraternity thanking them for the positive reviews of his performance in Ponniyin Selvan and Rudhran. 


Here are some excerpts from the occasion. 


Actor Sarath Kumar said, “Many have been consistently stating my linguistic style is almost like Periya Pazhuvettaraiyar, and I am glad about it. I have always spoken good Tamil. I was a little away from the film industry for a while, and I have now continued to act in many movies. Cinema is my profession. 


The Press and Media Fraternity have always been so encouraging, and have been open in sharing their views and opinions about me. I earnestly thank them for their support. I believe this current generation must know about me. There are a few allegations stating that I didn’t take part in the Ponniyin Selvan promotions. I was invited, but couldn’t be a part of it as I was out of Chennai during that time. I am so happy to get such a prominent role from Mani Ratnam. I am glad to see that the film is getting celebrated by everyone. I thank both Mani Ratnam and Lyca Productions Subaskaran for giving me this opportunity to me. Thanks to actor Vijay and director Vamsi for making me popular among the current generation of audiences with Varisu. I was initially negligent to play the negative role in Rudhran but realized that audiences aren’t the same in perceiving the antagonist as it was before. They have become more rational in observing how the role is performed. This encouraged me to perform this character. I will not act in villain charecters that get bashed and have no scope to perform. I have started doing more movies than before when I used to act in hero characters. I have been simultaneously acting in web series and movies. Many have been asking about my political domain, and I will individually meet the press to reveal some interesting facts, and I would like to mention that a mass announcement will be made in 2026. I have always enjoyed the privilege of having your support."


Actor Sarath Kumar spent more time interacting with the press and media friends for a long time. 


***

No comments:

Post a Comment