Featured post

Canada-based Tamil celebrity RJ Sai to produce 2 Tamil films simultaneously

 Canada-based Tamil celebrity RJ Sai to produce 2 Tamil films simultaneously* *RJ Sai announces two films - 'Brain' directed by Vija...

Tuesday, 16 May 2023

சக்தி மசாலாவின் சுயசக்தி விருதுகள் 2023, SSVM Institution மற்றும் மீனாட்சி மிஷன்

சக்தி மசாலாவின் சுயசக்தி விருதுகள் 2023, SSVM Institution மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகிய குழுமங்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்த விழாவை பற்றி பிராண்ட் அவதார் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமாகிய திரு.ஹேமசந்திரன்,  பேசும் பொழுது "பெண்கள் என்றுமே இந்த சமுதாயத்தில் முக்கிய பங்காக செயல்பட்டு வருகின்றனர். இல்லத்தில் தங்கள் கடமைகளையும் நிறைவேற்றி சிறு/குறு தொழில் செய்து வருமானம் ஈட்டி சாதனை செய்யும் இவர்களை போற்றுவது நம் கடமை. இவர்களை பாராட்டுவதோடு நில்லாமல் விருது வழங்கி கெளரவிப்பதின் மூலம் இவர்கள் மேல் வெற்றி வெளிச்சம் பட்டு மேலும் பிரபலமடைந்து தொழிலில் சிறக்கவும் இந்த விருதுகள் உதவுகிறது.பெருநிறுவன சாதனையாளர்களை விட சிறு /குறு தொழில் செய்யும் அதுவும் வீட்டில் இருந்து கொண்டே உலகை தன் வசமாக்க துடிக்கும் பெண்களை போற்றி வரவேற்று கௌரவிப்பதே சுயசக்தி விருதுகளின் சிறப்பாகும்.  2017-இல் தொடங்கி இன்று, வெற்றிகரமாக 5 பருவங்களை தாண்டியுள்ளது.

2023 வருடத்தின் சுயசக்தி விருதுகள் விழா தேசிய அளவில் அங்கீகாரம் பெறப்போகிறது. மேலும் பிராண்ட் அவதார் நிறுவனம் 2025 சுயசக்தி விருதுகள் விழாவை பிரம்மண்டமாக உலக அளவில் வெளிச்சதிற்கு கொண்டு செல்ல காத்துகொண்டு இருக்கிறது.




மாணவர்கள் மற்றும் வீட்டில் இருந்தபடி தொழில் முனையும் சாதனை பெண்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 16 2023. விண்ணப்பிக்க வேண்டிய தளம் https:/homepreneurawards.com அல்லது www.suyasakthiawards.com

ஆறாவது ஆண்டாக நேச்சுரல்ஸ் வழங்கும் சக்தி மசாலாவின் சுயசக்தி விருதுகள் 2023, SSVM Institution மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகிய குழுமங்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்த விருது வழங்கும் வீட்டில் இருந்தபடியே தொழில் முனையும் சாதனை இல்லத் தரசிகளை கெளரவிக்கும் ஓர் முயற்சி. வீட்டில் இருந்தே தொழில் முனையும் சாதனை பெண்மணிகளிடம் இருந்து 12 பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1.விவசாயம்
2.ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்.
3.இல்ல அளவில் செயல்படும் சிறு தொழில் விற்பனையாளர்கள்.
4.கலை மற்றும் கலாச்சாரம்
5.விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியாளர்கள்
6.உணவு மற்றும் பானங்கள்.
7.மின்வழி(டிஜிட்டல்) சுயசக்தி விருதுகள்
8.அழகியல் மற்றும் ஆரோக்கியம்
9. கல்வி மற்றும் இலக்கியம்
10.ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு
11.சமூக நலம் மற்றும் அரசு சாரா உதவி மையங்கள்.
12.வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.

உயரிய தேர்வு குழு உறுப்பினர்களை கொண்டே விருதுக்கான உரிய சாதனையாளர்களை தேர்வு செய்கிறார்கள். தேர்வு குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கி வெற்றி கண்டவர்கள்.

1. அருணா சுப்பிரமணியம் - மேலாண்மை ஆலோசகர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி -பூமிகா அறக்கட்டளை
2.அகிலா ராஜேஷ்வர் -நிர்வாக இயக்குனர்-TIE சென்னை
3.பிருந்தா சிவகுமார் -நிர்வாக இயக்குனர், தான்வி நகையகம்.
4.ஹேமா ருக்மணி - தலைமை நிர்வாக அதிகாரி, தேனாண்டால் என்டேர்டைன்மெண்ட்.
5. ஜெயஸ்ரீ உம்முடி -நிர்வாக இயக்குனர், தி லோட்டஸ் குரூப், தலைமை தாலாளர், ஜி ஆர் டி பள்ளி நிறுவனம்.
6.கிருத்திகா ராதாகிருஷ்னன் - ஆர்கே தயாரிப்பு நிறுவனம்.
7.லட்சுமி ரவிச்சந்தர் -நிறுவனர் ஈவென்ட் ஆர்ட்
8.லதா ராஜன் -நிறுவனர் மா போய் ஸ்ட்ராடேஜிக் கன்ஸல்டன்ஸ்
9.மருத்துவர்.மது சரண் நிறுவனர் -ரிவர் என் ஜி ஓ
10. மருத்துவர். மணிமேகலை மோகன் நிறுவனர் SSVM கல்வி குழுமம் கோவை
11. மீனா சாபிரியா -தெற்கு நிர்வாக தலைவர், பி வி ஆர் சினிமாஸ், வாழ்வியல் பயிற்சியாளர் 
12.நீனா ரெட்டி -கூடுதல் நிர்வாக இயக்குனர்
சவேரா ஹோட்டல்ஸ்
13.பிரசன்னா வசனடு -நிறுவனர்,தலைமை நிர்வாக இயக்குனர் வி ஆர் பிரைவேட் லிமிடெட்
14.மருத்துவர். ப்ரீத்தா கணேஷ், வேல்ஸ் கல்வி நிறுவங்களின் துணை தலைவர் வேல்ஸ் கல்வி நிறுவனங்கள்
15.பூர்ணிமா ராமசாமி -தேசிய விருது பெற்ற
ஆடை வடிவமைப்பாளர்,ஒப்பனையாளர்
16.ராதா சஞ்சீவ் -தலைமை நிர்வாக அதிகாரி
குளோசெல் குரூப் 
17.ராஜி ராஜு -தலைவர் FICCI FLO
18.ரத்னா சிவராமன் -தொழிலதிபர் மற்றும் ஊடகவியாளர் 
19.ராவூபா -ஊடகவியாளர்.
20.ரிங்கு மிச்சேரி - தொழில் முனைவோர் தலைவர், சென்னை வாலன்டீர்ஸ்
21.ருக்மினி தியாகராஜன் -இயக்குனர் சென்னை ஒன் ஐ டி எஸ் இ ஜீ
22.மருத்துவர். சரண்யா டி ஜெயக்குமார்,
கல்வி உளவியலாளர்
23.மருத்துவர். சௌந்தர்யா ராஜேஷ் -நிறுவனர் தலைவர் அவ்டார் காரீர்
24.சய்னி சுரேந்தர்,- அங்கீகாரம் பெற்ற விளையாட்டு உணவியல் நிபுணர் IOC மற்றும் SDA
25.ஷைலஜா செட்லூர் -கலைஞர், ஊடகவியலாளர், சினிமா
26.மருத்துவர் ஸ்ரீனிஷா மாறன் -நிர்வாக தலைவர், பரத் யூனிவர்சிட்டி மற்றும் ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரி
27.ஸ்வர்ணமுகி ரகுபதி -நிறுவனர் மற்றும் தலைவர், ஸ்வாதிக்கா உணவகம்
28.சுஷீலா ரவீந்திரநாத் -மூத்த பத்திரிகையாளர்
29.வீனா குமரவேல் -துணை நிறுவனர் நேட்டுரல்ஸ் சலோன்
30. மருத்துவர். விமலராணி பிரிட்டோ,
தொழில்முனைவோர்,கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி
31.பர்ஹானா சுஹைல் -நிறுவனர் மற்றும் ஊடகவியாளர் -நியூ டு சென்னை

No comments:

Post a Comment