Featured post

*#தளபதி-69 பத்திரிகை செய்தி!*

 *#தளபதி-69 பத்திரிகை செய்தி!* கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான 'தளபதி'விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தம...

Sunday 7 May 2023

திரை உலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் பேராதரவோடு

திரை உலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் பேராதரவோடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின்               "CD 23"                        23வது ஆண்டு விழா...*


தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் 23வது ஆண்டு விழா 

"CD 23"

வரும் ஜூன் 11ம் தேதி 11-6-2023 இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. 


திரை உலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் பேராதரவோடு நடைபெற உள்ள இந்த மாபெரும் விழாவில் மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை 6 மணி நேரத்திற்கு கண்கவர் மற்றும் கருத்தாழமிக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விருதுகள் வழங்கும் விழா நடை பெறும். 


"CD 23"

என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு 

மு. க ஸ்டாலின் அவர்கள்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 

மற்றும்  

செய்தி, மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மாண்புமிகு. மு.பெ.சாமிநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்க தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் திரு தளபதி, பொதுச் செயலாளர் 

திரு.சி.ஆர்.சி.ரங்கநாதன் மற்றும் பொருளாளர் 

திரு.ஆர்.அரவிந்தராஜ் ஆகியோர் தெரிவித்தனர். 


இந்த விழா குறித்து மேலும் பேசிய அவர்கள், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 

இதில் திரைப்பட மற்றும் சின்னத்திரை துறைகளை சார்ந்த கலைஞர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஆறு மணி நேரம் நடைபெற உள்ளதாகவும் கூறினர். 


ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பான முறையில் நடைபெற்று வருவதாக கூறிய அவர்கள், அனைவரின் ஆதரவோடு தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் 23வது ஆண்டு விழா வெற்றிகரமாக நடைபெறும் என்று தெரிவித்தனர். 


***


*

***

No comments:

Post a Comment