Featured post

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRIS...

Saturday, 6 May 2023

பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட்

பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ' ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு*


படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 





படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் 'ஹனு- மேன்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளதைப் போல் ' ஹனு-மேன்' படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும். 


இந்த திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாததால் படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்திருக்கிறது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் புதிய அனுபவத்தை அளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் டீசரில் சில காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் வி எஃப் எக்ஸ் ஹாலிவுட் தரங்களுக்கு இணையாக இருந்தது. மேலும் ஹனுமான் சாலிசா என்ற பாடலுக்கும் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 


இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில், '' ஹனு- மேன் படத்தின் டீசருக்கு நீங்கள் வழங்கிய அளப்பரிய வரவேற்பு எங்களது இதயத்தை தொட்டது. மேலும் முழுமையான சிறந்த படைப்பை வழங்குவதற்கான எங்களுடைய பொறுப்பையும் உயர்த்தி இருக்கிறது. நாங்கள் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான திரைப்படத்தை வழங்குவோம் என வாக்களிக்கிறோம். பகவான் ஹனுமானுக்கு சரியான ஒரு பாடலாக இருக்கும். அது நேசத்திற்குரியது. நீங்கள் பெரிய திரைகளில் அனுமானை அனுபவிக்க புதிய வெளியீட்டு திகதியை விரைவில் அறிவிக்க அறிவிக்கிறோம் ஜெய் ஸ்ரீ ராம்'' என குறிப்பிட்டனர்.


இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் 'ஹனு-மேன்' பான் வேர்ல்ட் வெளியீடாக இருக்கும்.


'ஹனு-மேன்' அடிப்படையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனையான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் ஹனுமானின் சக்திகளை பெற்று அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.


இந்தத் திரைப்படத்தின் தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா  ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஸ்ரீ நாகேந்திர தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment