Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Monday, 18 September 2023

ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி

 *ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு*




பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி இருக்கும் தலைசிறந்த படைப்பான 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்து டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அத்துடன் ரன்பீர் கபூர் நடிக்கும் இப்படத்தின் புதிய போஸ்டரையும் படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.‌ இந்த போஸ்டரில் ரன்பீர் கபூரின் தோற்றம்.. போஸ்டராக மட்டுமில்லாமல் ரன்பீர் கபூரின் கதாபாத்திரத்தின் தன்மை விவரிப்பதை உறுதியளிக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் சிறப்பாக இருக்கும் என்ற உறுதியையும் அளிக்கிறது.


'அனிமல்' என்பது இந்திய திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான பல்துறை ஆளுமையான நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் எழுத்தாளரும், இயக்குநருமான சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோரை ஒன்றிணைக்கும் ஒரு உன்னதமான கதை. இந்த பிரம்மாண்டமான முயற்சியின் பின்னணியில் சினிமாவுக்கு இணையாகவும், திறமையான தயாரிப்பாளருமான பூஷன் குமார் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அனில் கபூர், ரஷ்மிகா மந்தானா, பாபி தியோல், திரிப்தி டிம்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.


'அனிமல்' திரைப்படத்தை பூஷன் குமார் & கிரிஷன் குமாரின்  டீ சீரிஸ் நிறுவனம், முராத் கெடானியின் சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment