Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Thursday, 21 September 2023

ஷாருக்கானின் 'ஜவான்' படத்திலிருந்து 'பட்டாசா..' எனும் பாடலின்

 ஷாருக்கானின் 'ஜவான்' படத்திலிருந்து 'பட்டாசா..' எனும் பாடலின் காணொளி வெளியீடு



ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் திரை ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் - 'ஜவான்' படத்திலும் இவர்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒரு பாடலில் ஜொலித்திருக்கிறது. 'ஜவான்' படத்தில் இடம்பெற்ற 'பட்டாசா..' எனத் தொடங்கும் பாடலின் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் இயக்குநரான அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது..!


இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். இவர்கள் தங்களுடைய ஒருமித்த ஒத்துழைப்பால் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் வரலாற்றை தொடர்கிறார்கள். 'ஓம் சாந்தி ஓம்' மற்றும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' போன்ற படங்களில் இவர்களின் மாயாஜாலம் ரசிகர்களால் மறக்க இயலாது. 'லுங்கி டான்ஸ்..', 'டார்ட்-ஈ- டிஸ்கோ..' போன்ற தரவரிசையில் முன்னிலையில் பெற்ற பாடல்கள் - இவர்களின் மாயாஜால கெமிஸ்ட்ரியின் வரலாற்றுக்கு சான்றாகும். இது ரசிகர்களை தொடர்ந்து மயக்கி வருகிறது. 


பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'ஜவான்' திரைப்படத்தில் ஷாருக் கான் - தீபிகா படுகோன் இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். இவர்களின் தீவிர ஆதரவாளர்களை மகிழ்விக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் 'பட்டாசா..' எனத் தொடங்கும்.. இந்த ஜோடி திரையில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கும் பாடலின் காணொளியை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த டைனமிக் இரட்டையர்களின் மாயாஜாலத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்வையிடுவார்கள். 


'ஜவான்' திரைப்படம் இந்திய திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்தெறிந்திருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது. படத்தின் கதை, புத்திசாலித்தனமான திரைக்கதை, பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஷாருக்கான் -தீபிகா படுகோன் எனும் ஜோடியின் நிரந்தரமான மாயாஜால கெமிஸ்ட்ரி ஆகியவை... அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கி இருக்கிறது. இந்த வெற்றி தேரோட்டம் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து பயணிக்கிறது. 


'ஜவான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பட்டாசா..' எனத் தொடங்கும் பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் மாயாஜாலம் மிக்க நடனமும், நடிப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் கூடிய ஆதங்கத்தை அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டின் பொழுதுபோக்கு பாடல்கள் ஒன்றாக அமைந்த இந்தப் பாடல் வரிகளும் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதன் காட்சி அமைப்புகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர்கள் விவேக் மற்றும் அறிவு எழுதி இருக்க, பின்னணி பாடகர் நகாஷ் அஜீஸ், அறிவு மற்றும் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இதற்கு அனிருத் இசையமைக்க, ஃபாரா கான் நடனம் அமைத்துள்ளார். 


'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.


https://youtu.be/ANii-QZNCXo?si=9Vd0x94vbgpmhArT

No comments:

Post a Comment