Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Sunday 24 September 2023

பிரபலங்கள் வெளியிட்ட தீ - இவன் இசை இன்று முதல்.

 பிரபலங்கள் வெளியிட்ட தீ - இவன் இசை இன்று முதல்.


கார்த்திக்கின் சவாலான நடிப்பில், சமரசம் இல்லாத படைப்பு  

தீ-இவன் விரைவில் திரைக்கு வருகிறது.


பிரபலங்களின் பாராட்டு மழையில் " தீ - இவன் திரைப்படம் இன்று முதல் இசை 


மனிதன் சினி ஆட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்து, ஜெயமுருகன் T. M கதை, இயக்கத்தில் உருவாகி வரும் படம் தீ - இவன்.


இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹாலிவுட் குயின் சன்னி லியோன் கார்
























த்திகை தீபம் புகழ் அத்திகா, சுகன்யா, சேது அபிதா, மஸ்காரா அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி, சரவண சக்தி, சுமன்.து, ஹேமந்த்;, ஸ்ரீதர், சாரப்பாம்பு சுப்புராஜ், கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.


 தீ இவன் படம் குறித்து இயக்குனர் ஜெயமுருகன் கூறியது...


பராசக்தி மாமன்னன், விடுதலை படவரிசையில் சமூக பார்வை கொண்ட படம் தான் தீ-இவன் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நவரசங்களையும் கொட்டி இருக்கிறார். யார் பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம் ஆனால், நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் அந்த வித்தையை தீ-இவன் திரைப்படத்தில் பார்க்கலாம்.


அதே சமயம் ஆழமான கலாச்சாரத்தைச் சொல்லும் போது. ஆம்பள கெட்டா வாழ்கைபோச்சு பொம்பள கெட்டா வம்சமே போச்சு என்று சொல்வார்கள் அதன் படி ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆனோ, பொண்னோ கலாச்சாரம் மீறி படி தாண்டி விட்டால். அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல அவர்கள் சந்ததியையே சமாதி ஆக்கிவிடும் என்பதையும், தாலிகட்டாம தாயவாதும் தாலிகட்டாம தாரமா வாழ்வதும் தரங்க கெட்ட செயல் என்றும் சொல்வார்கள். அதுபோல முறையற்ற வாழ்கை வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வுமட்டு மல்ல அவர்களின் சந்ததிகளின் வாழ்வும் எப்படி சீரழிந்து சின்னா பின்னமாகிறது என்பதையும், ஆள்பவர்கள் மட்டுமல்ல வாழ்பவர்களும் நல்லவர்களா இருந்தால் தான் நல்ல சமூகம் படைக்க முடியும் என்ற சமூக நீதியையும் சொல்லும் சமூகப் பார்வை கொண்ட படைப்பு  தீ-இவன். 


இத்திரைப்படம் பற்றி சக்தி பிலிம்ஸ் திருப்பூர் சுப்பரமணியம் சொன்னது, நான் இந்தப் படம் பார்த்தேன் மிக அற்புதமான படம் இது பேமிலிஸ்டோரி கார்த்திக்கும், சுகண்யாவும் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ரொம்ப அருமையாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளை பிரம்மாண்டமா எடுத்துள்ளார்கள். கார்த்திக் மிரட்டி உள்ளார். திருப்பூரை சேர்ந்த தம்பி சுமன்.ஜெ, கதாபாத்திரமாகவே   வாழ்ந்திருக்கிறார். அதே போல் வில்லன் நடிகர் ஸ்ரீதர், அசத்தி இருக்கிறார். 


படத்தில் பாடல் அனைத்தும் அற்புதமாக உள்ளது பொதுவாகவே ஜெயமுருகன் அவர்கள் படம் என்றால் ரோஜா மலரே ஆகட்டும் அதற்க்கு முன் பின் வந்த படங்களாகட்டும் பாடல்கள் சிரப்பாக இருக்கும், மற்றொரு சிறப்பு அவரை பாட்டுக் காரர் என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்க்கு மிகச்சிறப்பா பாடல்கள் தருவார். ஒரு பாட்டிற்கு சன்னிலியோனை ஆடவைத்து மிக பெரிய செலவில் பிரம்மாண்டமாய் செட்டுப்போட்டு படமாக்கியுள்ளார்கள்.


எல்லாவற்றிக்கும் மேலாக இந்தபடத்தில் ஒரு பேமிலி செண்டி மெண்டு நெஞ்சை தொடும் அளவிற்க்கு நன்றாக எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் மிகப் பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்.


மேலும் சன்னி லியோனியின் மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் என்ற குஷியான பாடலும் நியூ ஸ்டார் சுமன்.ஜெ-யின் ரைட்டும் ஓடுது ஓன் வேயில் ராங்கும் ஓடுது என்ற ஸ்டைலான அலிமிர்சாவின் குரலிலான பாடலும், காலில் சலங்கைகட்டி காஞ்சிபுரம் பட்டுகட்டி என்ற செந்தில் ராஜலட்சுமியின் குத்துப்பாடலும், கண்ணுக்கு இதமாக காட்சி படுத்தப்பட்டு உள்ளது.



தமிழ் திரையுலகின்    மார்க்கண்டேயன் சிவகுமார் இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலரை பார்த்துவிட்டு நவரச நாயகன் கார்த்திக்,ராதாரவி, சன்னி லியோன், அத்திகா, சுகன்யா,  சுமன்ஜெ, உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

நம்  மண்ணின் கலாச்சாரத்தை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது அந்த வகையில் இந்த படமும்  உறுதியாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள் என்று பாராட்டினார்.


தரமான படமாக தீ-இவன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார் ஜெயமுருகன். T. M.

ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு  மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை A. J.அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை - M. அப்பு, மக்கள் தொடர்பு-  மணவை புவன். பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.


 இது அனைத்து தரப்பினரும் விரும்பும் படமாகவும், தமிழ்சினிமாவிற்க்கு நல்லதொருப் படைப்பாகவும் இருக்கும், நல்ல படைப்புகளை ரசிகர்கள் என்றைக்கும் அங்கிகரிக்கத் தவறியது கிடையாது. ரசிகர்கள் பேராதரவுடன் இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நம்புகிறோம் என்று ஜெயமுருகன் T. M தெரிவித்தார்.

No comments:

Post a Comment