Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Thursday, 21 September 2023

த்ரீ எக்ஸ் த்ரீ எனப்படும் கூடைப்பந்து தேசிய சீனியர் போட்டிகள்

 *த்ரீ எக்ஸ் த்ரீ எனப்படும் கூடைப்பந்து  தேசிய சீனியர் போட்டிகள் சென்னையில் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.*



இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா,  நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் அணிக்கு 3 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்றும்,  கூடைப்பந்து விளையாட்டின் அரை மைதானத்தில் விளையாடப்படும் இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து ரயில்வே அணி உட்பட 30 மாநில ஆடவர் அணிகளும், 25 மாநில பெண்கள் அணியினரும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.  


இந்த போட்டிகளில் முதல் 7 இடங்கள் பிடிக்கும் அணிகள் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி கோவாவில் நடைபெறும் 37 வது தேசிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 


மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதன் படி முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 3 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் ரூபாயும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.


 மேலும் இன்று முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளை இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்துடன் இணைந்து ஒருங்கிணைத்துள்ளது என்று கூறிய அவர் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு போதிய கட்டமைப்புகளை உருவாக்கியும், அகடமிகளை உருவாக்கி வீரர்களை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் என்றும் கிராமங்கள் முதல் அனைத்து இடங்களிலும் 3*3 போட்டிக்கான வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment