Featured post

Hotstar Specials Police Police to Stream from September 19 on JioHotstar

 Hotstar Specials Police Police to Stream from September 19 on JioHotstar New promo reveals launch date; introduces Shabana Shahjahan as law...

Wednesday, 27 September 2023

Ulagammai movie review

 வணக்கம் மக்களே..




இப்போ நாம பார்க்க போற படம் விஜய் பிரகாஷ் இயக்கத்துல, இசைஞானி இளையராஜா இசையில வந்துருக்குற, உலகம்மை.


 இந்த படத்துல மெயின் lead கேரக்டர் ல, 96 படத்துல ஜானு ஹ நடுச்சி நம்ம மனச வசியம் செஞ்ச கவுரி கிஷன் நடிச்சிருக்காங்க & வில்லன் கேரக்டர்ல சமீபத்துல காலமான மாரிமுத்துவும், சர்பேட்டை புகழ் ஜி.எம். சுந்தரும் நடிச்சிருக்காங்க..


படத்தோட மையக்கரு ஏன்னனா, ஒரு கல்யாணம் தடைப்பட்டாதால ஏற்பட்ட மாற்றங்களும், ஜாதி ஏற்றத் தாழ்வினால் உலகம்மை படும் கஷ்டங்களும் போராட்டமும் தான் இந்த கதை.. இந்த போராட்டத்தில் உலகம்மை வெற்றி அடைந்தால இல்லையா என்பதுதான் கதை.


இப்போ கதையை கொஞ்சம் elobrate ஹ பாக்கலாம்..   படத்தோட கதை 60s period ல நடக்கிது. கதையின் நாயகியா உலகம்மையா கவுரி கிஷன் நடிச்சிருக்காங்க.. உலகம்மாயோட அப்பா பனைமரம் ஏறி பாதநீர், நுங்கு விற்கும் தொழில் செய்பவர்.  மரம் ஏறும்போது ஏற்பட்ட விபதில் உலகம்மாயோட அப்பா உடல் செயலற்று படுத்த படுக்கையா இருக்கிறார்..


 மருத்துவ செலவுக்காக மாரிமுத்துவிடம் கடன் வாங்கி பண கஷ்டத்துல இருக்கிறது உலகம்மை குடும்பம்..


ஒருநாள் மாரிமுத்துவின் மகளுக்கு பெண் பாக்க மாப்பிள்ளை வந்திருந்தாரு ,  அப்போ உலகம்மாயும் மாரிமுத்துவின் பொண்ணு கூட இருந்ததால , உலகம்மைய மாப்பிள்ளைக்கு புடிச்சிடுச்சி.. உலகம்மையத்தான் கட்டுவேன்னு சொன்னதால, மாரிமுத்து மகளின் கல்யாண நின்னுடிச்சி...


அதனால, மாரிமுத்து உலகம்மைய கொச்சயா பேசி, பிரச்னைனைகள பல குடுத்து ஊற விட்டு வெளிய போக சதி பண்ணுறான்..


   இந்த நேரத்துல உலகம்மைக்கு ஒடுக்கப்பட்ட சாதிய சேந்த கீழதெருல இருக்கும் அருணா, உதவி செய்ய முன்வரான்..


இதை சாதி பிரச்சனையா மாத்தி, அதற்கு அப்பறம் நடக்குற பிரச்சனைகள் தான் மீதி கதை.. அதுல உலகமேமைக்கு நீதி கெடச்சுதா இல்லையான்றது தான் கிளைமாக்ஸ்..



படத்தோட கதை இந்த சமூகத்துக்கு தேவையானதுதான்.. ஆனா அத இன்னும் நேர்த்தியா  சொல்லிருக்கலாம்..


இளையராஜாவின் background music நல்லா இருந்துச்சு, அந்த music நம்மள 60s காலகட்டதுக்கு கூட்டி போகுது... 


நடிகர்களின் acting இன்னும் better ஹ இருந்துருக்கலாம்..


Budget ல சுருக்க பாத்தாதல சினிமாட்டோகிராபி ரொம்ப சுமாரா இருக்கு.. மத்தபடி concept நல்லா இருக்கு.. இன்னும் content-லையும், Budget-லையும்  concentrate பன்னிருந்த படம் better ஹ வந்திருக்கும்..

No comments:

Post a Comment