Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Friday 22 September 2023

சினிமாவில் கதாநாயகனாகும் திருநாவுக்கரசர் எம்.பி.யின்

 சினிமாவில் கதாநாயகனாகும் திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகன் சாய் விஷ்ணு.



உதவி இயக்குனராக இருந்து கதாநாயகனாக நடிக்கும் திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகன் சாய் விஷ்ணு.


காங்கிரஸ் கட்சியின் முன்னால் தமிழ்நாட்டின் தலைவராகவும், முன்னால் மத்திய, மாநில எம். பியும், தற்போது காங்கிரஸ் எம். பி யாக பதவிவகித்து வரும் திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு. இவர் லயோலா கல்லூரியில் பி. காம் முடித்ததோடு நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குனர் பா. ரஞ்சித்திடம் காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி சினிமாவை சிறப்பாக கற்றுக்கொண்டு தற்போது கதநாயகனாக அறிமுகமாகிறார்.

படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.


எனது குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. எனது அப்பா மருதுபாண்டி என்ற படத்தை தியாரித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம் அதனால் சினிமாவை நன்றாக அறிந்துகொண்டு தற்போது நாயகனாக நடிக்கவிருக்கிறேன் அனைவரும் எனக்கு ஆதரவு கொடுத்து எனது சினிமா பயணத்திற்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் சாய் விஷ்ணு.

No comments:

Post a Comment