Featured post

Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!

 *Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!* The release of Dunki Drop 4 has set the excitement at its peak to witne...

Wednesday 27 September 2023

தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்” ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால்

 *”தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்” ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டமான தயாரிப்பைப் பற்றிய ஒரு பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது*


நெஞ்சை பதறவைக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறது ஜவானின் "தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்". இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியை படமாக்க என்ன தேவை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரி, தைரியமாக இருங்கள், ஏனென்றால் 'ஜவான்' இப்போது உங்களுக்கு அதை காண்பிக்கப்போகிறது! 


இந்த காட்சிக்கு மூளையாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஹாலிவுட் ஆக்ஷன் மேஸ்ட்ரோ ஸ்பைரோ ரசாடோஸ் தான். ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான "தி ஃபாஸ்ட் அண்ட் த ஃபியூரியஸ்," "கேப்டன் அமெரிக்கா," "டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்ஜா டர்டில்ஸ்" போன்றவற்றிலும், இப்போது பிளாக்பஸ்டர் “ஜவான்” படத்திலும் கூட அவருடைய வேலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 


தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்ட மேக்கிங் காட்சியான பிரத்தியேக வீடியோவில், ஒரு மேஸ்ட்ரோவின் துல்லியத்துடன் செயலை ஒருங்கிணைக்கும் பணியில் ஸ்பைரோ ரசாடோஸ் தலைமை வகிக்கிறார். மனதைக் கவரும் அதிரடி ஆக்ஷன் காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்குவதற்கு, ஒரு காட்சியை வடிவமைக்கும் உன்னதமான திட்டமிடலும், அபாரமான அர்ப்பணிப்பும் தேவை என்பதற்கு ஜவானின் இந்த காட்சி தான் சாட்சி. 


'ஜவான்' சாதாரண திரைப்படமல்ல. இது உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு படமாகும். அனைவரின் சிறப்பான நடிப்பும் மற்றும் துடிப்புடன் கூடிய அதிரடியை வழங்கியதில் குழுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் ஒரு காரணம். 'ஜவான்' தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை உருவாக்கி பல சாதனைகளை முறியடித்து வருகிறது.

 

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கிய படம் தான் “ஜவான்”. இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார், கௌரி கான் தயாரித்துள்ளார், மேலும் கௌரவ் வர்மா இணைந்து தயாரித்துள்ளார். இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


https://www.instagram.com/reel/CxpXehZyWuJ/?igshid=MzRlODBiNWFlZA==

No comments:

Post a Comment