Featured post

Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!

 *Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!* The release of Dunki Drop 4 has set the excitement at its peak to witne...

Saturday 16 September 2023

நடிகர் மம்முட்டி நடிக்கும் 'பிரம்மயுகம்’ படத்தில் அவருக்கான படப்பிடிப்பு

 *நடிகர் மம்முட்டி நடிக்கும் 'பிரம்மயுகம்’ படத்தில் அவருக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!*




பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் 'பிரம்மயுகம்' படத்தில் நடிகர் மம்முட்டிக்கான போர்ஷன் இன்று வெற்றிகரமாக முடித்திருப்பதை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரம்மயுகம்’ 17 ஆகஸ்ட் 2023 அன்று கொச்சி & ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மீதமுள்ள ஷெட்யூல் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த்பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் தொடரும். மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும்.


சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் தயாரிக்கும் 'பிரம்மயுகம்' படத்தில்  ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால், தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜோதிஷ் சங்கர், எடிட்டராக ஷபீக் முகமது அலி, இசை கிறிஸ்டோ சேவியர், வசனம் TD ராமகிருஷ்ணன், மேக்கப் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் காஸ்ட்யூம்ஸ் மெல்வி ஜே ஆகியோர் பணிபுரிகின்றனர்.


மம்முட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பேனர் ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் ஆகும். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பிரம்மயுகம்’ 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

No comments:

Post a Comment