Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Monday, 8 April 2024

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான

 இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த  வாக்காளர்களுக்கான  விழிப்புணர்வு  குறும்படம்* 

https://youtu.be/EwW1sYPdrjw?si=jF2e9LBT-zr4s6Hd




நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு  வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம்  விழிப்புணர்வு குறும்படங்களை உருவாக்கி வருகிறது . அந்த வரிசையில்  பார்வையற்றவர்களுக்காக  இவி.கணேஷ்பாபு    எழுதி,இயக்கி, நடித்த குறும்படம் அனைவரையும் ஈர்த்துள்ளது. 

 இது பற்றி திரைப்பட இயக்குனர் 

இவி.கணேஷ்பாபு கூறியதாவது 

 பார்வையற்றவர்களுக்கான இந்த குறும்படத்தில் பார்வையற்ற   ஒரு பெண்மணியே என்னோடு இதில் நடித்திருக்கிறார். 

 மேலும் 

 பிரத்தியேகமாக திருநங்கைகளுக்கான வாக்குரிமை மற்றும் காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்காக  சைகை மொழியில் உருவாக்கிய  குறும்படங்களை தேர்தல் விழிப்புணர்வுக்காக நான் இயக்கியதில் பெருமை அடைகிறேன் என்றார்.

 செழியன் குமாரசாமி தயாரிப்பில்,  ராஜராஜன் ஒலிப்பதிவில், 

சுராஜ்கவி படத்தொகுப்பில் இந்தக் குறும்படங்கள்  உருவாகி இருக்கிறது

No comments:

Post a Comment