Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Wednesday, 3 April 2024

மோகன் ரீ‍-என்ட்ரி கொடுக்கும் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் 'ஹரா

 *மோகன் ரீ‍-என்ட்ரி கொடுக்கும் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் 'ஹரா' திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் 14 வெளியீடு*



*பரப்பரப்பான பான் இந்தியா ஆக்ஷன் படமான 'ஹரா' தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது*


இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி-யின் சமீபத்திய படைப்பான 'பவுடர்' ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான 'ஹரா'-வின் டீசர் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. 


பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். டீசரை தொடர்ந்து திரைப்படம் விரைவில் திரையரங்களில் வெளியாகவுள்ளது, அதுவும் பான் இந்தியா படமாக  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.


'ஹரா' திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடிக்கும் 'கோட்' திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 


'ஹரா' குறித்து பேசிய இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, "உலகெங்கும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள 'ஹரா', பான் இந்தியா படமாக நான்கு மொழிகளில் வெளியாகிறது. மோகனின் அதிரடி நடிப்பு மிகவும் பேசப்படும்," என்றார்.  சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரமும் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார். 'காலங்களில் அவள் வசந்தம்' புகழ் கௌஷிக் மற்றும் 'பவுடர்' நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.


மேலும் பேசிய அவர், "கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. விரைவில் திரையரங்குகளில் 'ஹரா' வெளியாகும்," என்று கூறினார். 


பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் 'ஹரா' திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிக்கிறார்.


'ஹரா' திரைப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, படத்தொகுப்பு: குணா.



***


*

No comments:

Post a Comment