Featured post

ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்

 “ஐந்தாம் வேதம்’’  சீரிஸ் ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து  சாதனை படைத்துள்ளது ! ZEE5 இல் 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங...

Thursday 11 July 2024

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் தியேட்டர் அல்லாத

 *ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது!*




ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் டிசம்பர் 6, 2024 அன்று வெளியாவதை இந்திய திரையுலகமும் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் பற்றிய சின்ன சின்ன அப்டேட் கூட ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா, 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரம் ரூ. 250 கோடிக்கு நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். இதில் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமம் ஆகியவையும் அடங்கும்.

 

சமீபகாலமாக தியேட்டர் வசூல் குறைந்துள்ள சூழ்நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் ‘கேஜிஎஃப்2’ திரைப்படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டித் தரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். ’புஷ்பா2’ வெளியாகி தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் பல புதிய ரெக்கார்ட் படைக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் ஞானவேல் ராஜா அந்தப் பேட்டியில் கூறியதாவது, "புஷ்பா: தி ரைஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் போன்ற நடிகருக்கு பெரிய வாய்ப்புகள் பல வந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்புகளை எல்லாம் விடுத்து இரண்டாம் பாகத்திற்காக அவர் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களை மிகுந்த நம்பிக்கையுடன் செலவிட்டிருக்கிறார். ’புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு இந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான நடிகராக அவர் வலம் வருவார்” என்றார்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் எழுதி, இயக்கியுள்ள 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment