Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Wednesday, 10 July 2024

ஒருத்தரை உண்மையாவே நேசிச்சா இதை மட்டும் பண்ணுங்க.. காதலின் அர்த்தத்தை

 ஒருத்தரை உண்மையாவே நேசிச்சா இதை மட்டும் பண்ணுங்க.. காதலின் அர்த்தத்தை புரிய வைத்த சன்னி லியோன்!














MTV Splitsvilla X5: ExSqueeze Me Please ரியாலிட்டி ஷோ தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த நிகழ்ச்சி பாலிவுட் ரசிகர்களை கவர்ந்ததை போலவே தமிழ் ரசிகர்களையும் கவர முக்கிய காரணம் நம்ம குயின் ஆஃப் ஹார்ட்ஸ் சன்னி லியோன் தான்.  காதல், துரோகம் மற்றும் வெறுப்பு உச்சம் அடையும் போது, என்ன செய்ய வேண்டும் என்கிற சூப்பரான டிப்ஸை புதிய எபிசோடில் சன்னி லியோன் கூறியுள்ளார். 


"ஒருவர் உங்களை விட்டு பிரிய வேண்டும் என நினைத்தால், விட்டு விடுங்கள்; அவர்களை நீங்கள் உண்மையாக நேசித்தால், பிரிந்து சென்றவரும் மீண்டும் உங்களைத் தேடி வந்து உன்னை தான் அதிகம் விரும்புகிறேன் எனச் சொல்வார்” என நடிகை சன்னி லியோன் ஸ்பிளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு காதலின் தத்துவத்தை கூறியுள்ளார். 


கடந்த வாரம் கடுமையான இரட்டை சவால்கள் முடிந்து போட்டியாளர்கள் வில்லாவிற்குத் திரும்பினர், கவர்ச்சியான டோம் அமர்வுக்கு தயாராக உள்ளனர். ஆனால் பளபளப்பு மற்றும் கவர்ச்சிக்கு முன், கூட்டணிகள், நண்பர்கள் மற்றும் புதிய எதிரிகளிடையே சூடான வாக்குவாதங்களால் வில்லாவில் பிரச்சனைகள் வெடித்தன. ஜாஷ்கிருதி ஜோடியை அனைவரும் அட்டாக் செய்யும் விதமாகவே சந்தர்ப்பங்கள் நிலவி வருகின்றன. அந்த ஜோடியினருக்கு வில்லாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. அதே நேரத்தில் அவர்களது போட்டியாளர்கள் பாதுகாப்பாக ஓய்வெடுக்கிறார்கள். டோம் அமர்வு யூகிக்கக்கூடியதாகத் தெரிகிறது, ஆனால் MTV Splitsvilla X5: ExSqueeze Me ப்ளீஸ், நிகழ்ச்சியில் வரும் திடீர் ட்விஸ்ட் நிகழ்ச்சியை புரட்டிப் போடுகிறது.


சூடான வாதங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள்:  கிங் ஆஃப் ஹார்ட்ஸ் தனுஜ் மற்றும் குயின் ஆஃப் ஹார்ட்ஸ் சன்னி லியோனால் தூண்டப்பட்ட அக்ரிதி மற்றும் அனிக்கா இடையே ஒரு உக்கிரமான வாக்குவாதத்துடன் டோம் தொடங்குகிறது. அவர்கள் இருவரும் முன்னதாக நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது எதிரிகளாக மாறியுள்ளனர்.  சுபியுடனான நட்பின் காரணமாக ஹர்ஷின் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் காஷிஷ் தேநீரைக் கொட்டினார். சுபியின் எந்த நண்பரையும் ஆதரிக்க மறுத்து, அவளுக்கு ஆதரவாக இருப்பவர்களைத் தூக்கி எறியவும் அவர் தயாராகிவிட்டார்.


இன்னொரு பக்கம் புதிய போட்டியில் சன்னி லியோன் மற்றும் தனுஜ் போட்டியாளர்களுக்கு பல ட்விஸ்ட்டுகளை கொடுத்து ஆட்டத்தை இன்னமும் சூடுபடுத்தி விட்டனர். பவர் இருக்கும் தம்பதிகள் அந்த சக்தியை வைத்து போட்டியாளர்களை காப்பாற்ற முடியாது என்கிற புதிய ட்விஸ்ட் உருவாகிறது. மேலும், வீக்கான போட்டியாளர்கள் வில்லாவில் இருந்து தங்களுக்கு பதில் வேறொருவரை அகற்ற களமிறங்குவார்கள் என்று தனுஜ் போட்ட போடு நிகழ்ச்சியை அதிர வைத்துள்ளது. 


அதிகாரப் போராட்டங்கள் மற்றும் புதிய கூட்டணிகள்: நண்பர்கள் எதிரிகளாக மாறும்போது, ​​இந்த முறை எலிமினேஷன் சூழல் கட்டுப்பாட்டை மீறுகிறது மற்றும் டோம் அமர்வு ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைகிறது. டீகிலா மற்றும் அனிகேட்டியிடமிருந்து பதவி மற்றும் அதிகாரத்தை போட்டியின் முடிவில் 

லக்ஷய் மற்றும் அனிக்கா தட்டித் தூக்கும் விதமாக நிகழ்ச்சி செல்ல, ரசிகர்கள் உற்சாகமடைந்து விட்டனர். 


மீண்டும் வில்லாவில், அனிக்காவும் திக்விஜய்யும் புதிய முடிவுகளை எடுக்கும்போது பதட்டங்கள் அதிகரித்தன, ஸ்வஸ்திகா துரோகத்திற்காக சுபியை எதிர்கொள்கிறார். கொந்தளிப்புகளுக்கு மத்தியில், ஜஷ்கிருதி ஜோடி புதிய போட்டியாளர்களுக்கு எதிராக வியூகம் வகுத்தது.கடைசியாக ஹர்ஷ் ருஷாலியிடம் மன்னிப்பு கேட்கிறான்.


டேர் டி தில் சவால்: மறுநாள் விடிந்ததும், 'டேர் டி தில்' சவாலுக்கு போட்டியாளர்கள் தயாராகின்றனர், அங்கு ஐடியல் ஜோடிகளுக்கு இடையேயான சமநிலையை ஊக்கப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றன. சன்னி லியோனின் பேச்சுக்கள் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமான உந்து சக்தியை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.  வரும் வாரங்களில் மேலும், ட்விச்ட்டுகள் மற்றும் சுவாரஸ்ய டேட்டிங் போட்டிகள் நடைபெற உள்ளதால் ஸ்ப்ளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியை மிஸ் பண்ணாம பாருங்க..


MTV Splitsvilla X5: ExSqueeze Me ப்ளீஸ் நிகழ்ச்சி, தமிழில் MTV மற்றும் JioCinema-இல் ஒரே நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

No comments:

Post a Comment