Featured post

Desiya Thalaivar Movie Review

Desiya Thalaivar Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம தேசிய தலைவர் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக...

Saturday, 13 July 2024

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்

 ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்' அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்  !! 


ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்  ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்'  பட ஃபர்ஸ்ட் லுக் !! 


ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்,  அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி  யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர் மற்றும்  லாஸ்லியா நடிப்பில், உருவாகி வரும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்'  படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 


தனித்துவமான படைப்புகள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடும் படங்களை வழங்கியதன் மூலம், மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றிருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தனது 101 வது படைப்பாக இந்த புதிய படத்தினை பெரும் பொருட்செலவில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படைப்பாக உருவாக்கி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 


யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர், இப்படம் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக ஒரு புதிய அவதாரத்தை எடுக்கிறார். இளம் நடிகையாக இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த  லாஸ்லியா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.



முழுக்க முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்கும்படியான கதைக்களத்தில்,  கலக்கலான கம்ர்ஷியல் படமாக,  அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இப்படத்தை உருவாக்குகிறார். 


இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்

No comments:

Post a Comment