Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Sunday, 21 July 2024

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின்

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து,  SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக,  அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !!*



நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம்,   “சூர்யா’ஸ் சாட்டர்டே”   படத்திலிருந்து,  SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !!


நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை  கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர்   வெளியிட்டுள்ளனர்.


வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி  வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அல்லது அதைவிட சக்தி வாய்ந்த நல்ல சக்தி உண்டாகும் எனும் ஒரு புதிரான குறிப்புடன் இந்த  வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவில் SJ சூர்யா ஒரு அதிரடியான காவலராக அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் அதிகாரமற்ற மக்கள் மீது தனது மேலாதிக்கத்தைக் காட்டுகிறார். இந்த கதையில் நமது பகவான் கிருஷ்ணர் (நானி), தனது சத்யபாமாவுடன் (பிரியங்கா மோகன்), ராவணாசுரனை (SJ சூர்யா) எதிர்கொள்கிறார்.


ஆரம்பம் முதல் இறுதி வரை,  பரபர பதட்டத்துடன், வீடியோ ரசிகர்களை முழுவதுமாக கவர்ந்திழுக்கிறது. இது உண்மையில் இரண்டு சக்திவாய்ந்த நபர்களுக்கு இடையிலான போரை காட்டுகிறது. SJ சூர்யா மிரட்டலாக பயமுறுத்தும் அதே நேரத்தில், நானி தனது வலுவான திரைப் ஆளுமையால் பிரமாதப்படுத்துகிறார். இருவரும் தங்கள் ஆற்றல்மிகு நடிப்பால் தீப்பிடிக்க வைக்கிறார்கள். 


விவேக் ஆத்ரேயாவின் தனித்துவமான கதை சொல்லல் நம்மை அசத்துகிறது.  நாட் எ டீஸர் எனும் இந்த வீடியோ சொல்லும் கதை மிக சுவாரஸ்யமாக உள்ளது. முரளி ஜியின் ஒளிப்பதிவு கண்களை கொள்ளை கொள்கிறது, அதேசமயம் ஜேக்ஸ் பெஜாய் தனது அழுத்தமான இசைக்கோர்வையில் காட்சிகளை அழகுபடுத்துகிறார். DVV என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பு பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்துள்ளது.


நாட் எ டீஸர் எனும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ,  வெகுஜன மக்களை ஈர்க்கும் மாஸ் தன்மையுடன் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் உண்மையான ஆடுபுலி ஆட்டத்தை காண, ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். 


இந்த பான் இந்தியா ஆக்சன் அதிரடி-சாகச திரைப்படத்திற்கு கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.


நடிகர்கள்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே. சூர்யா, சாய் குமார்


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து- இயக்கம் : விவேக் ஆத்ரேயா தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி 

பேனர்: டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் 

இசை: ஜேக்ஸ் பிஜாய் 

ஒளிப்பதிவு : முரளி ஜி 

எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ் 

சண்டைப்பயிற்சி : ராம்-லக்ஷ்மன் 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்

https://youtu.be/jVEE7mvg8Sc

*

No comments:

Post a Comment