Featured post

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!*

 *ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம்,  மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான...

Monday, 22 July 2024

தனது பிறந்தநாளை முதியோர் இல்ல

 *தனது பிறந்தநாளை முதியோர் இல்ல உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் சாக்ஷி அகர்வால்!* 



காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகிரா மற்றும் பல வெற்றிகரமான படங்களில் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகை சாக்ஷி அகர்வால் சனிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 


ஒரு தனிமை விரும்பியாக அறியப்பட்ட அவர், தனக்கான சிறப்பான நாளை ஓர் முதியோர் இல்லத்தின் உறுப்பினர்களுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் செலவிட்டார். அவர் சில சுவையான உணவுகளை தயாரித்து அவர்களுக்கு பரிமாறினார். பின்னர், அவர் வயதானவர்களுடன் சில விளையாட்டுகளை விளையாடி,  ஆடிப்பாடி மகிழ்ந்து இதயத்தை வருடும் தருணங்களை பகிர்ந்து கொண்டார்.


இந்த சிறப்பான நிகழ்வை தனது சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். நெட்டிசன்கள் 

தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் ஆதரவையும் சாக்ஷிக்கு அளித்தனர்.


சாக்ஷி அகர்வால், மலையாளத்தில் தான் அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பையும், முறையே கன்னடம் மற்றும் தமிழில் இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார்.

No comments:

Post a Comment