Featured post

Anali Movie Review

Anali Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anali  படத்தோட review அ தான் பாக்க போறோம். சக்தி வாசு தேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா...

Monday, 15 July 2024

நடிகர் தயாரிப்பாளர் ஆதித்தனின் ஒன்பதாவது மகன்

 நடிகர் தயாரிப்பாளர் ஆதித்தனின் ஒன்பதாவது மகன்  நடிகர் நிவாஸ் ஆதித்தன்.

ஆனால் ஒன்றும் சொகுசான வாழ்க்கையில்லை. தயாரிப்பில் அனைத்தயும் இழந்த பின்பு பிறந்து இளமையில் வறுமையில் வளர்ந்தார் நிவாஸ்.





வெள்ளித்திரையில் தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் சற்றும் தளராமல் இருபத்தி இரண்டு வருடங்களாக பயணித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் செல்வா இயக்கத்தில் நாங்க என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி காக்க முட்டையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கணவனாக  என, கதாநாயகனாக, வில்லனாக தோழனாக, முக்கிய பாத்திரமாக கிட்டத்தட்ட 25  படங்கள் முடித்து மேலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நிவாஸ் ஆதித்தன் தன் திரை முயற்சிகளில் ஒரு இயக்குனராக குமரேசன் கலட்டர் ( கலெக்டர்) என்ற குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இது முழுக்க முழுக்க ஐ போனில் படம்பிடிக்கப்பட்டது.


அது பல்வேறு நாடுகளில் பல விருதுகளை வென்று கொண்டிருக்கிறது. இளமையில் வறுமை, அந்த வறுமையிலும் சின்ன சின்ன விஷயங்களில் மகிழ்ச்சி காணும் கனவு காணும் ஒரு சிறுவனின் கதை.

எந்த பாசங்கும் இல்லாத இயல்பான ஒரு படம். இது மாதிரியான கதைகள் வழக்கமாக நம் மனதை உலுக்கும், கண்களில் கண்ணீர் வரச் செய்யும். ஆனால் 'குமரேசன் கலட்டர்'  படம் பார்க்கும் போது உதட்டில் லேசாக புன்னகை இருக்க கண்களிலோ நீர் கோர்க்கிறது.

No comments:

Post a Comment