Featured post

Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting

 *Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting with Grand Pooja Ceremony* KVN Productions, known for deliv...

Tuesday 24 September 2024

அக்டோபர் 6 முதல், “பிக்பாஸ் சீசன் 8”,

 அக்டோபர் 6 முதல், “பிக்பாஸ் சீசன் 8”, உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !! 




நடிகர் விஜய் சேதுபதி  களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகவுள்ளது !! 


"ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." பிக்பாஸ் சீசன் 8, அக்டோபர் 6 முதல் !! 


புத்தம் புதிய பல  ஆச்சரியங்களுடன், உங்கள் “பிக்பாஸ் சீசன் 8”, அக்டோபர் 6 முதல் !! 


தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. சமீபத்தில் மிகப்புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8ன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  மிகப்பெரும் புகழைப்பெற்று, மக்களின் மனங்களில் இடம்பிடித்த நிகழ்ச்சி, பிக்பாஸ்.  கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு,  மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன், கோலாகலமாக அறிவிக்கப்பட்டது.  இந்த முறை, நடிகர்  விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அசத்தலான ப்ரோமோ, வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய சீசன் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக இந்த புதிய சீசனின் ப்ரோமோ வெளியீட்டை, விஜய்  டிவி மிகப்புதுமையான முறையில் நடத்தியது. தமிழகம் முழுக்க, மக்கள் குழுமியிருக்கும், முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களில், பெரிய திரையில் மக்கள் முன்னிலையில் அவர்களையே வைத்து  சர்ப்ரைஸாக வெளியிட்டது. 


இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக்கேட்டுக்கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி, உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.., இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.."  எனும் டேக் லைனை சொல்லி முடிக்கும் டிரெய்லர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 


இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி களமிறங்குவது, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல புது ஆச்சரியங்களுடன், புதுப்பொலிவுடன் “பிக்பாஸ் சீசன் 8” வரும் அக்டோபர் 6 ஆம்தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட விழாவுடன் கோலாகலமாகத் துவங்கிறது. 


பிக்பாஸ் சீசன் 8 உங்கள் விஜய் தொலைக்காட்சியில், அக்டோபர் 6 முதல் கண்டுகளியுங்கள்.

https://youtu.be/2m4V2pqI4aQ?si=ivgv7poHHMEnAfYj

No comments:

Post a Comment