Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Friday, 27 September 2024

திரைமொழியில் பலவிதமான ஆயுதங்களை

 திரைமொழியில் பலவிதமான ஆயுதங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மெய்யழகனும் ஒரு ஆயுதம் ஏந்தி வருகிறது.. 

#Meiyazhagan dir C.Premkumar 

அன்பிற்குறிய என் மக்களுக்கு.

மெய்யழகன் இயக்குனர் பிரேம் குமார் எழுதும் கடிதம்.

 

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்  மறத்திற்கும் அஃதே துணை.

 அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது அல்ல வீரத்திற்கும் அஃதே துணை என்கிறார் வள்ளூவர்.  


பிரபஞ்சத்தின் பெருங்கருணையால்  உதித்தது மனிதகுலம் வீரமும் அன்புமே அதன் மகத்தான பக்கங்களை நிரப்பியது, அதை பேசும் பிரதான கருவியாக திரைப்படங்கள் மாறிவிட்டன. சமீபமாக திரைமொழியில் பலவிதமான ஆயுதங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மெய்யழகனும் ஒரு ஆயுதம் ஏந்தி வருகிறது  அன்பெனும் பேராயுதம் தாங்கி வருகிறது ஆயிரம் ரணங்கள்  தாங்கிய உங்களுக்கு வேர் தொட்டு ஆசுவாச  படுத்திக்கொள்ள நிழலாய் வருகிறது. இன்று திரையரங்குகளில்.. 

அன்பே இறை 

அன்பே நிறை 

அன்பே மறை 

அன்பே அருட்பெரும் மெய் 

பேரன்புடன் 

சு. பிரேம் குமார்

No comments:

Post a Comment