Featured post

டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா

 ’டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா சினிமா உலகம் வாழ்வது சிறு பட தயாரிப்பாளர்களால் தான் - ’டிரம்...

Thursday, 20 November 2025

டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா

 ’டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா

















சினிமா உலகம் வாழ்வது சிறு பட தயாரிப்பாளர்களால் தான் - ’டிரம்ப் கார்டு’, ‘சேரநாட்டு யானைதந்தம்’ பட அறிவிப்பு நிகழ்வில் நடிகர் பிளாக் பாண்டி பேச்சு


ஒரு படம் இயக்குவது என்பது மிகப்பெரிய கஷ்ட்டம் - ‘சேரநாட்டு யானைதந்தம்’ இயக்குநர் பூலோகம் ரவி உருக்கம்


அமெரிக்க அதிபர் சொல்வது சரி என்று சொல்வது தான் ‘டிரம்ப் கார்டு’ - இயக்குநர் ஜியோ ராஜகோபால்


பெற்றோர்களுக்கு உறுதுணையாக இல்லாதவர்கள் பிள்ளைகளே இல்லை - ’டிரம்ப் கார்டு’, ‘சேரநாட்டு யானைதந்தம்’ பட அறிமுக விழாவில் இயக்குநர் பேரரசு ஆதங்கம்




லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’. 


வெளிநாட்டில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வெளிநாட்டுக்கு படிக்க செல்ல விரும்புகிறவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களையும் மையமாக வைத்து உருவாகும் ‘டிரம்ப் கார்டு’ படத்தை ஜியோ ராஜகோபால் இயக்குகிறார். காதல் கதையாக உருவாகும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தை பூலோகம் ரவி இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்கிறார்.


‘டிரம்ப் கார்டு’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிலாக் பாண்டி நடிக்கிறார். இவருடன் ஜி.எம்.குமார், இ.வி.கணேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


இப்படங்களின் அறிமுக விழா நவம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.


நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபு பேசுகையில், “ஒரே தயாரிப்பாளரின், ஒரே நிறுவனத்தின் இரண்டு திரைப்படங்களின் அறிமுக விழா இது. லத்திகா புரொடக்‌ஷன்ஸ் சசிகுமார் பாலா தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள்,  ஒன்று ’டிரம்ப் கார்டு’. இதை ஜோ ராஜகோபால் இயக்குகிறார். மற்றொரு படம் பூலோகம் ரவி இயக்கும்  ’சேரநாட்டு யானைதந்தம்’. இந்த இரண்டு இயக்குநர்களும் மிகப்பெரிய ஆளுமைகள்.  இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவுக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களான இயக்குநர் பேரரசு சார், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோருக்கு நன்றி.


’டிரம்ப் கார்டு’ திரைப்படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதன்மை கதாபாத்திரத்தில் பாண்டி நடித்திருக்கிறார். நிறை இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்கள், அந்த ஆசையால் பெரிய நடைமுறை சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்கள் கூட வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டு, அதற்கான சரியான வழி தெரியாமல் தடுமாறுவதும், பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதையும் ‘டிரம்ப் கார்டு’ சொல்கிறது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை நேர்மையாக கொடுக்கப்படுகிறதா ?, அவர்களுக்கு ஊதியம் சரியாக கொடுக்கப்படுகிறதா ? என்பதையும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு படமாகவும் இந்த படம் இருக்கும்.


‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட பல பெரிய தமிழ்ப் படங்கள் மற்றும் இந்திய படங்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை வெளிநாட்டில் செய்து கொடுத்திருப்பவர் ராஜகோபால் சார். அவருக்கு தெரியாத பிரபலங்களே இல்லை. அடுத்தடுத்த நிகழ்வில், அந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள். 


’சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பூலோகம் ரவி, இயக்குநர் செந்தமிழனிடம் பணியாற்றியவர். ஷங்கர் சாரிடம் பணியாற்றிய செந்தமிழனிடம் பல வருடங்களாக பயணித்து பல அனுபவங்களை பெற்றிருக்கிறார். சசிகுமார் பாலா வெளிநாட்டில் இருந்து வந்து தயாரிக்கிறார். அவருக்கு சினிமா பற்றி சில சந்தேகங்கள், பயம் இருக்கிறது, அதை போக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. அவர்கள் ஒரு படத்தை தொடங்கும் போது அதை சரியான முறையில் முழுமையாக முடித்து திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே சில தவறான மனிதர்களால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அந்த சூழலில் இருந்து அவரை மீட்டு அவர் நினைத்தது போல் படத்தை முடிக்க நாம் ஒத்துழைக்க வேண்டும்.


ஒரு படம் தயாரித்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும், அல்லது போட்ட முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. தயாரிக்கும் படங்கள் சரியான முறையில் முடிவடைந்து திரைக்கு வந்தாலே போதும், என்று தான் நினைக்கிறார்கள். அது நடக்க நாம் ஒத்துழைக்க வேண்டும்.  


இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய கூடிய பார்த்திபன், மூத்த கலைஞர், அசோக் குமாரிடம் பணியாற்றியவர். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக இவர்கள் தயாரிக்கும் படத்தை பார்த்திபன் இயக்குகிறார். அதற்கு  ’தேங்காய் சீனிவாசன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி பட்மாக உருவாக உள்ளது. 


குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த பி.ஆர்.ஓ கார்த்திக்குக்கு படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். 


தயாரிப்பாளர் விஜயமுரளி பேசுகையில், “ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் எடுக்கிறார்கள், இதை உங்கள் படம் போல் நினைத்து ஊடகத்தினர் சவாலாக எடுத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதில் பெரிய நடிகர், நடிகைகள் இல்லை. பெரிய படங்களை பொறுத்தவரை ஒரு புகைப்படத்தை வைத்தே விளம்பரம் செய்யலாம். ஆனால், இதுபோன்ற படங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது பெரிய சவால், அதை ஊடகத்தினர் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். தலைப்பு மிக சிறப்பாக இருக்கிறது. தினமும் செய்தியாக வரும் தலைப்பு. இந்த இயக்குநருக்கு வாழ்த்துகள், பெரிய வெற்றியடைய வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.


இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பேசுகையில், “படக்குழுவினருக்கு வணக்கம், எங்கு சென்றாலும் நான் தமிழை மறக்க மாட்டேன் என்பது போல், தன்  தாய்மொழிக்காகவும், தாய்நாட்டுக்காகவும் வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் சசிக்கு என் வாழ்த்துகள். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாரிப்பது கூடுதல் சிறப்பு. இரண்டு படங்களின் இயக்குநர்களும் சிறப்பானவர்கள். தலைப்பும் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இதன் போஸ்டரை பார்க்கும் போதே படத்தில் ஏதோ விசயம் இருப்பது தெரிய வருகிறது. இதில் ஏதோ உலக அரசியல் பேசுகிறார்கள் என்பது புரிகிறது. அரசியல் படம் பண்ணும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நான் ஒரு படம் இயக்கி விட்டு இன்னமும், நீதிமன்றம், வழக்கு என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன். அதிலும் உலக அரசியலைப் பற்றி பேசும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.


சேரநாட்டு யானைதந்தம் இயக்குநர் பூலோகம் ரவி சிறப்பாக பண்ணியிருப்பார், அவரை எனக்கு நன்றாக தெரியும். இந்த இரண்டு படங்களும் சிறப்பாக வர வேண்டும், அதே போல் படத்தை வெளியிடும் போது சரியான நேரத்தில் வெளியிட வேண்டும், அது தான் இப்போது மிக முக்கியமானதாக இருக்கிறது. இரண்டு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.


இயக்குநர் பேரரசு பேசுகையில், “தயாரிப்பாளர் சசி அவர்கள் இன்று இரண்டு படங்களை அறிவித்துள்ளார். இன்று ஒரு படம் அறிவிப்பதே சவலாக இருக்கிறது. இது அவரது நம்பிக்கை, சினிமா மீதான காதல். இரண்டு படங்களின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. ஒன்று டிரம்ப் கார்டு, டிரம்ப் நம்மை வம்புக்கு இழுத்தது போல், அவரை நாம் வம்புக்கு இழுக்கிறோமா என்று படம் வெளியாகும் போது தான் தெரியும். மற்றொன்று சேரநாட்டு யானைதந்தம். இந்த தலைப்பே யோசிக்க வேண்டியது. இது முழுக்க முழுக்க காதல் கதை. இது சேர நாடு, டிரம்ப் கார்டு அயல் நாடு, இரண்டு நாடுகளை வைத்து எழுதியிருக்கிறார்கள்.


டிரம்ப் கார்டு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தேவைப்படுகிற விசயம், முன்பெல்லாம் இங்கு படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவது போதையாக இருந்தது, இப்போது வெளிநாட்டில் படிப்பதே போதையாகிவிட்டது. இது நல்லதா ஆபத்தானதா என்று யோசித்தால், இது ஆபத்து தான். உங்களுக்கு உலகளவில் அனைத்து நாடுகளிலும், விரும்புகிற ஆட்கள் இந்தியர்கள், அவர்கள் அறிவாளிகள். ஏழு எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்பு இந்தியாவில் படித்தவர்களை தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு அழைப்பார்கள். இன்று படிக்க செல்கிறார்கள், அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்று இயக்குநர் படத்தில் விரிவாக சொல்லியிருப்பார், என்று நினைக்கிறேன்.


ஒரு காலத்தில் துபாய்க்கு வேலைக்காக இந்தியர்களை தான் அதிகமாக அழைத்தார்கள். அங்கு அனைத்து வேலைகளுக்கும் நம் ஆட்கள் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது இந்தியர்களை துரத்துகிறார்கள், காரணம் அவர்களுக்கான வேலைகள் முடிந்து விட்டது. இனி இந்தியவர்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். சாலைகள் போடுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்தியர்கள், அத்தகைய பணிகள் முடிந்த உடன், விரட்டப்படுகிறார்கள்.  அமெரிக்காவிலும் தற்போது அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா - அப்பா என்று குடும்பத்துடன் வாழ்வது தான் வாழ்க்கை. வெளிநாட்டில் இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் தங்களை ஒரு அனாதையாக நினைக்கிறார்கள்.


குழந்தைகளை பிளே ஸ்கூலில் சேர்க்கிறார்கள், எந்த வயதில், அப்பா - அம்மா அரவணைப்பு இருக்க வேண்டுமோ அந்த வயதில் அவர்களை பிளே ஸ்கூலில் சேர்க்கிறார்கள். அதேபோல், எந்த வயதில் பிள்ளைகள் அப்பா - அம்மாவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமோ அந்த வயதில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறோம். பெற்றோருக்கு உறுதுணையாக இல்லாதவர்கள் பிள்ளைகளே இல்லை.


’சேரநாட்டு யானைதந்தம், வித்தியாசமான காதல் கதையாக இருக்கும். கதை பற்றி இயக்குநர் விரிவாக சொல்லவில்லை. ஆனால், கதையில் ஏதோ விசயம் இருக்கும் என்பது தெரிகிறது.  பூலோகம் ரவி நல்ல விசயம் வைத்திருப்பார் என்று தெரிகிறது. இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.


தயாரிப்பாளர் சசிகுமார் பாலா பேசுகையில், “குறுகிய காலத்தில் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ கார்த்திக் அவர்களுக்கு நன்றி. நான் கனடாவில் இருந்து வந்திருப்பதாக சொல்கிறார்கள், நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன், இலங்கை மலையக தமிழன். கனடா சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். இதற்கு முன்பு நான் ஒரு படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமானேன், அப்படத்தின் இயக்குநர் சுதாகரன் அண்னாவுக்கு நன்றி. அதன் மூலமாக ராஜகோபால் சார் அறிமுகம் கிடைத்து பிறகு பூலோகம் ரவியின் அறிமுகம் கிடைத்து, அவர்களிடம் கதை கேட்டு, வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இந்த இரண்டு படங்களை ஆரம்பித்திருக்கிறோம்.  இந்த இரண்டு படங்களும் மக்களுக்கான கமர்ஷியல் படங்களாக மட்டும் இன்றி, ஒரு விழிப்புணர்வு படங்களாக இருக்கும், நன்றி.” என்றார்.  


இயக்குநர் ஜியோ ராஜகோபால் பேசுகையில், “பெருமைக்காகவோ, பெயருக்காகவோ இங்கு நான் வரவில்லை, ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும், இயக்குநர் பேரரசு போல் ஒரு இயக்குநராக வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து படிக்க செல்லும் மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் செலவில் செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான பண தேவைக்காக அங்கு வேலை செய்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் காய்ககறி உள்ளிட்ட கடைகளை நடத்தும், நமது மக்களில் சிலர் அவர்களை அடிமைப்போல் நடத்துகிறார்கள். படிக்க வரும் போது நேர் வழியாக வர வேண்டும், டிரம்ப் கார்டு என்பது அது தான். டிரம்ப் என்ன சொல்கிறார், நேர் வழியாக வாருங்கள், கல்லத்தனமாக வந்தால் நீங்ட்கள் உங்கள் வாழ்க்கையை இழக்க  நேரிம், என்கிறார். அதை தான் டிரம்ப் கார்டு படமும் சொல்கிறது. அதேபோல், மொழி, ஜாதி கடந்து மக்கள் வாழும் நாடு கனடா, அங்கு அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகீறது. அதுபோல் உலகத்தின் அனைத்து நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். வல்லரசாக வேண்டும் என்ற பேரரசுவின் ஆசைப்படி, இந்தியா கல்வி மற்றும் செல்வத்தில் திளைத்து மேல் நாடுகள் போல் வளர்ந்து, மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே படிப்பை முடித்து, இந்த நாட்டுக்குள்ளேயே பணிகளை செய்து, ஆற்றலை வழங்க வவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை, நன்றி” என்றார்.


இயக்குநர் பூலோகம் ரவி பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த சசி சார் மற்றும் ராஜகோபால் சாருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மா பெயர் பூலோகம் அதனால் நான் பூலோகம் ரவி என்று பெயர் வைத்திருக்கிறேன். நான் பூலோகம் படத்தில் பணியாற்றவில்லை. அந்த படம் வெளியான பிறகு  அதன் இயக்குநர் நான் தான் என்று நினைத்தார்கள், அது நான் இல்லை, என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பல நாள் ஆசை திருநாளாச்சு...., அதற்கு காரணம் ராஜகோபால் சார், சசி சார் தான், அவர்கள் தான் என் கடவுள்கள், என்று கூறி தயாரிப்பாளர் காலி விழுந்தார்.


தொடர்ந்து பேசியவர், “எவ்வளவு வலி, கஷ்ட்டங்கள் இருந்தது, ஒரு படம் பண்ணுவது மிகவும் கஷ்ட்டம், அது எனக்கு கிடைத்தது இவர்களால் தான். வெளிநாட்டில் இருந்து வரும் தயாரிப்பாளர்கள் பலர், பத்து படங்கள் தயாரிப்போம், என்று அறிவிப்பார்கள். ஆனால், ஒன்று, இரண்டு படங்களோடு சென்று விடுவார்கள். ஆனால், சசி சார்,  தொடர்ந்து பல படங்களை தயாரிப்பார், பத்து படங்களுக்கு மேலாக படங்கள் தயாரிப்பார், என்று நான் சொல்கிறேன். காரணம், ‘சேரநாட்டு யானைதந்தம்’ மிகப்பெரிய ஹிட்டாகும். அதில் அவர் பணம் சம்பாதிப்பார், அதன் மூலம் அவர் அடுத்த படம் பண்ணுவார், என்னைப் போல் பல இயக்குநர்களை உருவாக்குவார். நன்றி.” என்றார்.


நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், “டிரம்ப் கார்டு படத்தில் நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஜியோ ராஜகோபால் சார், சசி சாருக்கு நன்றி. எங்கள் படக்குழுவினருக்கு நன்றி, உங்களுடன் பயணிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. உதவும் மனிதம் என்ற என்னுடைய அறக்கட்டளை சார்பில் இலங்கையை சேர்ந்த நான்கு மாணவிகளை, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறோம். இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் படிக்க வைத்திருக்கிறோம். சசி சாரும், ராஜகோபால் சாரும் இலங்கை தான். மலையகம் மக்கள் அங்கு மிகவும் கஷ்ட்டத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் அங்கு அடிமைகளாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவங்க பிள்ளைகள் படிப்புக்காக ஏங்குகிறார்கள். என்னிடம் பல பேர் கேட்டார்கள், இங்கே செய்யாமல் ஏன் இலங்கைக்கு செய்கிறாய், என்று. எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதனால் செய்கிறேன். இங்கு தான் செய்ய வேண்டும் அல்ல, கஷ்ட்டப்படுகிறவர்கள் எங்கிருந்தாலும் செய்யலாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்த அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சேர்மன் தேவானந்த் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 20 சீட் கொடுத்தார், இந்த முறை நான்கு தான் கிடைத்தது. அடுத்த முறை 20 சீட் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். கல்விக்கு நிகர் எதுவும் இல்லை. படிப்பு தான் ஒரு மனிதன் உயர்வுக்கு முதல்படி. நான் பத்தாம் வகுப்பு பெயிலானவன், அதனால் என் தங்கையை பொறியியல் படிக்க வைத்தேன். படிப்பு இல்லை என்றால் வாழ்க்கையில் பிடிப்பில் இல்லாமல், ஒருவித தோல்வி பயத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே கல்வி தொடர்பான எந்த விசயமாக இருந்தாலும் எனக்கு ஒரு ஏக்கம், ஆதங்கம் இருந்துக்கொண்டே இருக்கும். சமூகத்தில் இருந்து எடுக்கிறோம், சம்பாதிக்கிறோம், எனவே சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைப்பது உண்டு.


இன்று எங்களை போன்ற கலைஞர்களை வாழ வைப்பது சிறு படங்கள் தான், சினிமா உலகம் வாழ்வது சிறு பட தயாரிப்பாளர்களால் தான். நான் விஜய் அண்ணாவோ அல்லது அஜித் சாரோ கிடையாது. ஒரு படம் ஓடவில்லை என்றால் அனைவருக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. ஒவ்வொரு படைப்புக்காகவும் நாம் உணர்வுப்பூர்வமாக உழைத்திருப்போம், ஆனால் அது சரியாக போகவில்லை என்றால் அதற்கு நாம் பொறுப்பல்ல, சூழல் தான் பொறுப்பு. இங்கு குறைகள் நிறைய இருக்கு, ஆனால் அதை நிறையாக பார்க்க வேண்டும். இன்று இங்கு மைக் இல்லை, சரியான அரங்கம் இல்லை என்பது உண்மை தான், ஆனால் குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது ஒரு பெரிய விசயம் தானே, அதை செய்த பி.ஆர்.ஓ கார்த்திக் சாருக்கு நன்றி. இந்த உலகத்தில் குறை இல்லாமல் எதுவும் இல்லை, பிளஸ் மைனஸ் இருக்க தான் செய்யும், நாம் தான் அனைத்தையும் பாசிட்டிவாக பார்க்க வேண்டும்.


டிரம்ப் கார்டு தலைப்பை பார்த்த உடன் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அமெரிக்கா போனால் எதாவது பிரச்சனை வருமா ? என்று யோசித்தேன். ஆனால், அப்படி இல்லாமல் டிரம்ப் சொல்வது சரியானது, என்று சொல்வது தான் இந்த படம். இதில் நான் ஒரு மாணவனாக நடிக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த எனது உறவுகளுக்கு நன்றி. ஒரு படம் உருவாக வேண்டும், அதை சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உழைக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது அறிமுக நிகழ்ச்சி தான். அடுத்தடுத்த நிகழ்வில் படம் பற்றிய பல விசயங்களை சொல்வோம். நன்றி.” என்றார்.


ஒளிப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் பேசுகையில், “இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறேன். இரண்டும் வெவ்வேறு வண்ணங்கள். ஒரு படம் வெளிநாடு, மற்றொரு படம் கிராமம், இரண்டுமே வித்தியாசமாக இருக்கும். இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டு, படம் இயக்குவது என்பது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, எனக்கு கிடைத்திறுக்கிறது. அதற்கு சசி சாருக்கும், ராஜகோபால் சாருக்கும் நன்றி. எனது முதல் படம் காமெடி படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதன்படி தான் முதல் படத்தை இயக்க இருக்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன், இயக்குநர்களுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களும், நான் இயக்கும் படமும் என்று மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.


படத்தொகுப்பாளர் கணேஷ் குமார்.டி பேசுகையில், “இரண்டு படங்களுக்கும் படத்தொகுப்பாளராக என்னை தேர்வு செய்த, ராஜகோபால் சார் மற்றும் சசி சாருக்கு நன்றி. இந்த படத்தின் காட்சிகளை பார்த்த போதே படம் எப்படி வரப்போகிறது என்று  எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. முழுமையாக படத்தொகுப்பு செய்துவிட்டு, படம் எப்படி வந்திருக்கிறது, என்று அடுத்த சந்திப்பில் சொல்கிறேன். நன்றி.” என்றார்.


தலைப்பு மூலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு படங்களின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மேலும் பல தகவல்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’

 *திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!*







*மும்பை, நவம்பர் 20, 2025:* உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்'. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை 'ஸ்டீபன்' தர இருக்கிறது. 


தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் 'ஸ்டீபன்' இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர் பெற்றவர்களும் ஒரே தளத்தில் பார்வையாளர்களுக்கு தரமான கதைகளை கொடுப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு நெட்ஃபிலிக்ஸ் தளமாகும். 


நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் மாறுபட்ட கதைக்களங்களை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த கதைகளில் 'ஸ்டீபன்' படமும் ஒன்று. பல திருப்பங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர்தான் 'ஸ்டீபன்'. கதை தொடங்கியதில் இருந்து கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்களை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி மற்றும் கோமதி சங்கர் திறமைகளை எடுத்து சொல்லும் கதையாகவும் இது இருக்கும்.  தரமான கதைகளை பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நிலைப்பாட்டிற்கு இந்தக் கதை இன்னும் வலு சேர்க்கும்" என்றார். 


அறிமுக இயக்குநர் மிதுன் பகிர்ந்து கொண்டதாவது, “அமைதியான கால்குலேட்டட் சீரியல் கில்லர் பற்றிய கதைதான் 'ஸ்டீபன்'. அமைதியற்ற பல தனிப்பட்ட ரகசியங்களை தன்னுள் சுமந்து செல்கிறார். கோமதி சங்கர் தீவிரமாக, உண்மைக்கு நெருக்கமாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநராக நிறைய விஷயங்கள் இதில் கற்றுக்கொண்டேன். இந்த கதையை மிகுந்த கவனத்துடனும் நேர்மையுடனும் முயற்சித்திருக்கிறோம். இந்த கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. எங்கள் கதையை 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிலிக்ஸில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அவர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.  


தான் பார்க்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த உலகிற்குள் 'ஸ்டீபன்' பார்வையாளர்களையும் அழைக்கிறார். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸில் 'ஸ்டீபன்' ப்ரீமியர் ஆகிறது. 


*நடிகர்கள்:* கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட்


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்குநர்: மிதுன்,

தயாரிப்பாளர்கள்: ஜெயகுமார் & மோகன்,

எழுத்தாளர்கள்: மிதுன், கோமதி சங்கர்,

தயாரிப்பு நிறுவனம்: ஜேஎம் புரொடக்சன் ஹவுஸ்


*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*


நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

Netflix Presents ‘Stephen’, A Psychological Manipulation Where The Motive Is As Murky As The Murder

 Netflix Presents ‘Stephen’, A Psychological Manipulation Where The Motive Is As Murky As The Murder







Mumbai, Nov 20, 2025: What happens when your mind starts filling in the blanks — and gets it wrong? Premiering December 5, Netflix’s Tamil psychological thriller Stephen unfolds within walls that have seen too much and revealed too little. Directed and written by first-time filmmaker Mithun Balaji and starring Gomathi Shankar in a compelling performance, Stephen explores malicious motives, murder, and unsolved trauma through a whirlwind of plot twists and tension.


With its haunting score and simmering emotions, the film marks the arrival of a distinct new voice in Netflix’s Tamil slate, reinforcing our continued commitment to championing fresh perspectives and bold storytelling. It’s one of many examples of how emerging creators and established names can thrive side by side on the same platform. 


Monika Shergill, Vice-President, Content, Netflix India, shares, “Stephen is an exciting addition to our growing and diverse lineup of southern-language films and series. A twisted psychological thriller, Stephen follows a poised killer whose long-buried secrets unravel piece by piece, keeping audiences guessing until the very last frame. It marks an impressive directorial debut by Mithun Balaji and serves as a compelling showcase for rising talent Gomathi Shankar. As a story, it introduces an authentic new voice in suspense and underscores our passion for character-driven, rooted storytelling."


Speaking about his directorial debut, Mithun says, “Stephen is about a calm, calculated serial killer, who carries secrets which are unsettlingly personal. Gomathi Shankar plays the title role with a quiet intensity, making the character feel both reel and real. As a first-time filmmaker, this film means a lot to me. We tried to approach the subject with utmost care and honesty. I'm grateful to Netflix for giving us the opportunity and space to tell stories in such a distinct genre. The fact that our film will be available for the world to see across over 190 countries feels unreal, and I hope people enjoy this humble attempt at the craft.”


Rooted in emotion and laced with suspense, Stephen invites audiences to step into a world where nothing — and no one — is quite what they seem.


Stephen premieres December 5, only on Netflix.


CREDITS

Director : Mithun 

Cast : Gomathi Shankar, Michael Thangadurai, Smruthi Venkat

Producers : Jayakumar & Mohan

Writers : Mithun, Gomathi Shankar

Production Company: JM Production House



ABOUT NETFLIX:

Netflix is one of the world's leading entertainment services, with over 300 million paid memberships in over 190 countries enjoying TV series, films and games across a wide variety of genres and languages. Members can play, pause and resume watching as much as they want, anytime, anywhere, and can change their plans at any time.

Sarvam Maya" New Poster Unveiled; Biggest Christmas 2025 Release Confirmed!

 *"Sarvam Maya" New Poster Unveiled; Biggest Christmas 2025 Release Confirmed!*



"Sarvam Maya" have officially locked its release date, bringing joy to fans. The film, directed by Akhil Sathyan and starring Nivin Pauly, is set to hit theatres worldwide on December 25, 2025, as a grand Christmas release.


A new poster was released today with the date announcement, offering a glimpse into the film's world. The poster prominently features the stellar cast, including lead actor Nivin Pauly, Aju Varghese, and in a special highlight, the legendary actor Janardhanan.


The poster strongly hints that "Sarvam Maya" will be a full-fledged family entertainer, packed with humour and heart. The quirky expressions of the trio promise a laugh riot that will appeal to audiences of all ages This film features Nivin Pauly in his fan-favourite genre of comedy-dramas, where he has consistently delivered memorable performances


 The film is expected to be the perfect holiday treat, filled with moments of clean comedy and celebration. Helmed by Akhil Sathyan son of veteran director Sathyan Anthikad and produced by Firefly Films, "Sarvam Maya" is gearing up to be one of the biggest festive releases of 2025.

சர்வம் மாயா” புதிய போஸ்டர் வெளியானது !! கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு

 *“சர்வம் மாயா” புதிய போஸ்டர் வெளியானது !!  கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு !*



நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின்  வெளியீட்டு தேதி  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான  உலகை  அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.


“சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார் என்பதையும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது.


அட்டகாசமான காமெடியுடன், கொண்டாட்ட உணர்வை பதிவு செய்யும் இந்த படம், இந்த ஆண்டின் சிறந்த விடுமுறை கொண்டாட்ட படமாக இருக்கும். மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகனான அகில் சத்யன் இயக்கத்தில், ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “சர்வம் மாயா”, 2025-ன் மிகப்பெரிய பண்டிகை வெளியீடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.

தயாரிப்பாளர் முரளி பேசியதாவது..,

தயாரிப்பாளர் முரளி பேசியதாவது.., 

சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் என் அக்கா, அண்ணா, அவர்களால் இங்கு வரமுடியவில்லை, எங்கள் படத்தை வாழ்த்த வந்தவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் தேவா அவர்களுடன் பணிபுரிந்தது பெருமை. எங்களுக்கு என்ன தேவை என பார்த்துப் பார்த்து செய்து தந்தார். லியோ அருமையாக நடித்துள்ளார். விஜய் சுகுமாரிடம் பொறுமையும் அமைதியும் நிறைய உள்ளது. இணை தயாரிப்பாளர் நக்கீரன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எங்களுடைய மூன்று வருட கனவு, டிச்மபர் 12 படம் வருகிறது. எல்லோரும் திரையரங்கில் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.













இசையமைப்பாளர் தேவா பேசியதாவது.., 

இந்த விழா ஆரம்பத்திலேயே களைகட்டி விட்டது. எழில் குழுவினர் கலக்கிவிட்டனர். முனுசாமி ஐயா அசத்திவிட்டார். விஜய் சுகுமாருக்கு இது முதல் படம் போலவே இல்லை, அட்டகாசமாக எடுத்துள்ளார். எல்லா கலைஞர்களும் அத்தனை அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். முரளி எனக்கு என்ன வேண்டுமோ அனைத்தையும் செய்து தந்தார். சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள். லியோ முதல் படத்தில் அழகாக நடித்துள்ளார். லியோனி மகன் என்பது மகிழ்ச்சி. நாயகிக்கும் எனது வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியா அரசு என்னைக் கௌரவப்படுத்தியது. நான் அங்கு சென்று 25 பேருக்குப் பறை இசை சொல்லித்தந்தேன் அதற்காகத்தான் அந்த மரியாதை செய்தார்கள். இப்படி ஒரு படத்திற்கு இசையமைத்தது எனக்குப் பெருமை. பறை இசைக்கு ஆந்தம் செய்துள்ளேன் அந்த ஆந்தமாக எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும். நன்றி.


தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது..., 

மாண்புமிகு பறை இந்த தலைப்பே ரொம்ப அருமையான தலைப்பு. பறை இசைக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படத்தினுடைய தயாரிப்பாளர் சுபா அப்புறம் அவங்க சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள் இயக்குநர் இங்கும் பரபரப்பாகவே இருக்கிறார். படத்தை மிக அற்புதமாகவே உருவாக்கியுள்ளார். பாட்டுக்கு ஆடி இந்த விழாவைத் துவங்கி வைத்த எழில் குழுவுக்கு வாழ்த்துக்கள்,  ஒரு கலைஞர் கூட்டத்தில் இருக்க அவ்வளவு பேரையும் தன் பக்கம் கவர்ந்து தனக்காகக் கைதட்ட வச்ச ஒரு அற்புதமான ஒரு வாத்தியார் முனுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீகாந்த் தேவா ஒரு அருமையான இசையமைப்பாளர், தேசிய விருது வாங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி மிக அழகாகத் தமிழில் பேசி, பறை கலையின் அருமையைப் புரியவைத்தார். இசையமைப்பாளர் தேவா  அவர் தான் இப்படத்தின் பெரும் பலம். கர்நாடக சங்கீதத்திலும் மிகப்பெரிய வல்லமை உள்ளவர், இன்று  அவர் கர்நாடக சங்கீதத்துக்கு இணையாக படத்திற்கு இசையமைத்துள்ளார்,  இப்படம்   மிகப்பெரிய சங்கராபரணம் மாதிரி வெற்றி அடைய வேண்டும் வாழ்த்துக்கள்.  இந்த படத்துக்கு அவர்தான் உண்மையிலேயே ஹீரோ,  அதனால் அவருடைய பாட்டை பற்றி ஒரு தனி பட்டிமன்றம் போடலாம் என்று ஆசைப்படுகிறேன். படத்தில் டைட்டிலில் தன் பெயரைப்  போடுவதையே தனி ஸ்டைலாக்கி நம்மை ரசிக்க வைத்தவர் திரு பாக்யராஜ், ஒரு மாபெரும் திரைக்கதை மன்னன்  இந்த படத்துக்கு வாழ்த்து சொல்லியது பெரிய சந்தோஷம். சமூக நீதிக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய  நான் மிகவும் நேசிக்கக் கூடிய என் அருமை சகோதரர் எழுச்சி தமிழர் தொல் திருமா அவர்கள்,  இந்த இசை வெளியீட்டுக்கு வருகை தந்தது,  எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. இந்த மாண்புமிகு பறை என்ற படம் டிசம்பர் 12 ஆம் தேதி  ரிலீஸ் ஆகிற்து. சூப்பர் ஸ்டாரோட ரசிகன் எங்க ஐயா தேனிசை தென்றல் தேவா என்று சொன்னார்கள். நான் அதை மாற்றிச் சொல்கிறேன். சூப்பர் ஸ்டாரோட ரசிகன் ஐயா இல்லை. தேவாவோட ரசிகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  சிங்கப்பூர் அதிபர், தேவாதி தேவா அப்படிங்கிற  நிகழ்ச்சிக்கு  வருகை தந்து,  தஞ்சாவூர் மண்ணை எடுத்து என்கிற பாட்டை,  நான் சாகும்போது இந்த பாட்டை போட்டுட்டுதான் நான் என்னுடைய உடலை அடக்கம் செய்யனும்னு சொன்னார் என்றால், தேவா அவர்கள்  இந்த உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்களைச் சம்பாதித்து உள்ளார்.  இந்த படத்தில் என் மகனை விட,  அவர்தான் இந்த படத்தினுடைய கதாநாயகன். இப்படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது.., 

மாண்புமிகு பறை இசை வெளியீட்டு விழா என்பதை விட மாண்புமிகு பறை தமிழர் பண்பாட்டுக் கூடல் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு இனத்தின் பண்பாடு குறித்து

மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆற்றிய உரை நம்மை ஆழச் சிந்திக்க வைத்தது, சிலிர் பூட்டியது, இனி பேசுவதற்கு எதுவும் இல்லை நன்றி சொல்லி முடிக்கலாம் என்கிற அளவுக்கு, அண்ணன் லியோனி அவர்களின் பேச்சும், நம்முடைய தேனிசை தென்றல் அவர்களின் இசையுடன் கூடிய ஒரு இசையுரையும் இளம் இயக்குநர்களுக்கு நல்ல வழிகாட்டுதலைத் தந்து ஆணவக் கொலைக்கு எதிராக இப்படியும் சிந்திக்கலாம் திரைக்கதை அமைக்கலாம் என்று இங்கேயே ஒரு திரைக்கதை அமைக்கிற உரையை ஆற்றி அமர்ந்திருக்கிற அண்ணன் கே. பாக்ய ராஜ் அவர்களின் உரை, எல்லாவற்றையும் விடத் தம்பி சிவா அவர்களின் உரை, நம்முடைய கதாநாயகி அவர்களின் உரை எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம்மை ஆட்டி வைத்தது, வியப்புக்குள்ளாக்கியது. பறை குறித்து நம்முடைய தமிழர் பண்பாடு எவ்வாறு இருந்தது நாகரிகம் அடைந்தது என்ற உரையாக இது அமைந்தது ஒவ்வொருவரும் ஆற்றிய உரைகள் பறை என்பது இன்றைக்கு ஒரு இழிவான சொல்லாக மாறி இருக்கிறது. அதனால் அந்த கருவியும் இழிவாகப் பார்க்கப்படுகிற சூழல் அமைந்துவிட்டது. அந்த கருவியால் ஒரு இனம் இழிவாகக் கருதப்படுகிறதா? அல்லது ஒரு இனத்தால் ஒரு சமூகத்தால் அந்த கருவி குறைத்து மதிப்பிடப்படுகிறதா ? என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் இது ஆதி சிவன் அடித்த பறை என்று கவிஞர் சினேகன் அவர்களின் வரிகளில் அண்ணன் தேனிசை தென்றல் அவர்கள் அமைத்திருக்கிற இந்த பாடல் நம் கவனத்தை ஈர்த்தது.  மாண்புமிகு என்கிற பெருமைக்குரியது என்கிற வகையிலே இந்த திரைப்படத்திற்குப் பெயர் சூட்டி இருப்பது ஒரு துணிச்சலான செயல். போற்றுதலுக்குரிய செயல்.இயக்குநரின் துணிச்சலைக் கதை எழுதியவர்களின் துணிச்சலை நான் மனமாற பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் பறை என்பது ஒரு பொதுவான சொல் அனைத்து இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் மூலம் அதிலிருந்துதான் இசைக்கருவிகளின் வடிவங்கள் மாறி மாறி வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன.இந்த சமூகத்தின் மூலச்சமகம் தான் பறை என்கிற பெயரில் அழைக்கப்படுகிற சமூகம் இது ஒரு சமூக ஆய்வாளரின் கருத்து. ஒரு குலத்திலிருந்துதான் எல்லா குலமும் என்கிற போது தமிழ் சமூகத்தில் அந்த மூல சமூகம் ஆதி குளம் பறையர் குளம்தான் என்று அந்த வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள்.


பறை அடித்ததனால் பறையன் என்று பலரும் கருதுகிறார்கள் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை இன்றைக்கு நீங்கள் ஒரு கிராமத்திற்குப் போனால் பறையர் குடியிருப்புக்குப் போனால் 200 குடும்பங்கள் 300 குடும்பங்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பறை அடிப்பதில்லை, அவர்களுக்குப் பறை பற்றி தொடர்பும் இருப்பதில்லை அந்த கிராமத்தில் சிலர்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் பறையடிக்கிற ஒரு வழக்கத்தை வைத்திருப்பார்கள். எல்லா மக்களும் விவசாயத்தைச் செய்யக்கூடியவர்கள்தான். அவர்களுக்கு ஏரோட்ட தெரியும். நடவு நடத் தெரியும். அருப்புறுக்க தெரியும், தால் அடிக்க தெரியும். விவசாய பெருங்குடி மக்கள்தான். அந்த விவசாய பெருங்குடி மக்களை ஒட்டுமொத்தமாகப் பறையர் என்ற பெயரில் அழைத்து இழிவுபடுத்தி இருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் இது குறித்து பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள் அதற்கு ஒரே காரணம்தான் இது மூலச் சமூகம் ஆதிச் சமூகம் அதிலிருந்து தோன்றுகிற ஒவ்வொரு புதிய சமூகமும் அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி அந்நியப்படுத்தி பிரிவுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக அந்த ஆதிசமூகத்தை இழிவுபடுத்துவதை ஒரு பண்பாடாக இங்கே வளர்த்திருக்கிறார்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களை விட மேலானவர்கள் என்று சொல்லுகிற அந்த நிலை வளர்ந்திருக்கிறது இது சமூக ஆய்வாளர்களின் கருத்து. பறை என்பதிலிருந்து பறையன் என்கிற ஒரு சமூகம் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் பயன்படுத்துவதனாலேயே அது இழிவான கருவி இழிவான பொருள் என்று பார்க்கிற ஒரு உளவியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் மாற்ற வேண்டும் பொது உளவியலில் இந்த இழுக்கு இருக்கிறது அதைத் துடைத்தெறிய வேண்டும் என்று தான் பெரியார் கனவு கண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்டார் அதைத்தான் நாம் பேசுகிறோம். அந்த அரசியல் புரிதல் இருப்பதனால் தான் விஜய சுகுமாரன் இந்த படத்திற்கு மாண்புமிகு பறை என்று பெயர் சூட்டி இருக்கிறார்.


மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுவது போல் மாண்புமிகு பறை என்று சொல்லுகிற அந்த துணிச்சல் அது ஒரு அரசியல் புரிதலிலிருந்து மட்டும்தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு படத்தில் தம்பி சிவா போன்றவர்கள் இன்றைக்கு நடித்திருக்கிறார்கள் என்றால் அண்ணன் லியோனி அவர்களிடம் அவர் கற்றுக்கொண்ட அரசியலும் தான் அதற்கு அடிப்படை.  இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்து நடத்திய யுத்தத்தின் எச்சங்கள், பதிவுகள் நாம இன்றைக்கு புதுசா பேசவில்லை.  இதை ஐயன் திருவள்ளுவனே இந்த சாதி அமைப்பு கூடாது என்ற ஆதங்கத்தை  வெளிப்படுத்தி இருக்கிறார். இது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கு நாம் மைய நீரோட்டத்தில் இணைக்கிற முயற்சி தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. திரைப்படங்களில் இன்றைக்குப் புதிதாக இது வரவில்லை திரைப்படங்களில் நீண்ட காலமாகவே இதற்கு எதிரான படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன. பழைய படங்களில் நிறையப் பாடல்கள் கூட இருக்கின்றன. அந்த பாடல்களை எல்லாம் இப்போது எடுத்து சமூக ஊடகங்களில் தோழர்கள் பரப்புகிறார்கள். ஆகவே இது ஒரு நீண்ட இடிய போராட்டம், அந்த போராட்டத்திலே திரைக்கலை ஆளுமைகள் தங்களையும் இணைத்துக் கொள்வது, அதற்காக தம்முடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவது, இதுபோன்ற படைப்புகளைக் கொண்டு வருவது, இதன் மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் சுகுமாரன் அவர்களை நெஞ்சார பாராட்டுகிறேன். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிற தம்பி சிவா அவர்கள் மிக அற்புதமாக உரையாற்றினார். அவருடைய உரையில் நல்ல ஒரு தெளிவு இருந்தது. அந்த தெளிவு அரசியல் புரிதலாக ஒரு நீண்ட கால அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளதாக நான் புரிந்து கொள்கிறேன். இதுபோன்ற கலைஞர்கள் தான் திரைத்துறையைக் கையில் எடுக்க வேண்டும் பயன்படுத்த வேண்டும்.


இந்த திரைத்துறையை நாங்கள் முற்போக்கு சிந்தனை களமாகப் பயன்படுத்துவோம் என்கிற அந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்த திரைப்படத்தில் நாம் முழுமையாகப் பார்த்தால் தான் என்ன கதை கருப்பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த தலைப்பே நம்மை வியக்க வைக்கிறது. ஆழமா ஆள சிந்திக்க வைக்கிறது. அந்த வகையிலே இது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வைப்பதற்குத் தமிழ் சமூகம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே சொல்லி, எனக்கு இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் லியோனி அவர்களுக்கும் இயக்குநர் விஜய் சுகுமாரன் தம்பி சிவா போன்றவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்


எல்லா இசையும் ஒன்று தான், ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை, அந்தப் பறை இசையின் பின்னணியை, வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக “மாண்புமிகு பறை” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் உருவாகியுள்ளார். 


இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார், காயத்ரி ரெமா நாயகியாக  நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.    


இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக  இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு அருமையான இசையை வழங்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.                          


தொழில் நுட்ப குழு 

கதை, திரைக்கதை: சுபா &சுரேஷ் ராம்         

இயக்கம் :எஸ்.விஜய் சுகுமார்

ஒளிப்பதிவாளர் :ரா. கொளஞ்சி குமார்

படத்தொகுப்பு :சி. எஸ். பிரேம் குமார்

இசை :தேனிசை தென்றல் தேவா

நடன இயக்குனர் :ஜானி

பாடல்கள் :சினேகன்         

கலை :விஜய் ஐயப்பன் 

தயாரிப்பு :சியா புரடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர் :சுபா -சுரேஷ் ராம்

இணை தயாரிப்பு:ஜெ. எப். நக்கீரன் &கவிதா

நிர்வாக தயாரிப்பாளர் : த.முரளி

மக்கள் தொடர்பு - AIM  சதீஷ்.

மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

*“மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !*













சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை ". 


பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்.., 


இயக்குநர் விஜய் சுகுமார் பேசியதாவது.., 

எங்களை வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்புமிகு பறை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ் ராம் தான் எழுதியுள்ளார்கள். பறையிசை ஒரு பொதுவான இசை அதை எப்படி திரையில் கொண்டுவந்துள்ளோம் என டிரெய்லரில் பார்த்தீர்கள். இரண்டு பாகங்களாக இப்படத்தைத் திட்டமிட்டுள்ளோம், முதல் பாகத்தில் பறை இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும், இரண்டாம் பாகத்தில் பறை இசை எத்தனை வகைப்படும் என்பதையும் சொல்லத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் பறை இசையை உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் இப்படத்தை எங்கள் தயாரிப்பாளர்கள் தயாரித்தனர். இப்போது உலகம் முழுக்க பல விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு விருது வாங்கியுள்ளது.  எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது. தேவா சார் அற்புதமான இசையைத் தந்துள்ளார். சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி. 


இணை தயாரிப்பாளர் நக்கீரன் பேசியதாவது.., 

இவ்விழாவைச் சிறப்பிக்க வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. இது திரையிசை வெளியீட்டு நிகழ்வல்ல, நம் பாரம்பரிய இசையின் கொண்டாட்டம். இந்த பறை இசை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இந்த இசை வளர்ந்து வருகிறது. கலையைத் தாண்டி இந்த இசை ஒரு அடையாளச் சின்னம். ஆதி பறை என்பதை நாங்கள் நம்புகிறோம் இதை அனைவரும் கொண்டாடுவோம். இப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. 


கலை இயக்குநர் விஜய் ஐயப்பன் பேசியதாவது..,

இயக்குநர் கேட்டதை, கதைக்குத் தேவையான கலை இயக்கம் மூலம்  தந்துள்ளேன் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி. 


எடிட்டர் பிரேம் குமார் பேசியதாவது.., 

எல்லோரும் இப்படத்தில் கடினமாக உழைத்துள்ளோம். வெளிநாட்டிலிருந்து தயாரிப்புக்குப் பணம் வரும், ஆனாலும் இயக்குநர் அவ்வளவு உண்மையாக இருப்பார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி. 


ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் பேசியதாவது.., 

உள்ளூரின் பெருமையைப் பேசுவது தான் மிகச்சிறந்த உலக சினிமா. நாங்கள் நம் ஊரின் பெருமையை, உண்மையை இப்படைப்பில் கொண்டுவந்துள்ளோம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் பேசியதாவது.., 

வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய வெற்றியைத் தரட்டும். இசையமைப்பாளர் தேவா இசைக்கு வேலைபார்த்தது பெருமை.  அவர் இசையமைத்த சலோமியா பாடல் தான் என் அடையாளமாக இருக்கிறது. நாயகன் மிகக்கடினமாக உழைத்துள்ளார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் அற்புதமாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது.., 

இன்று இசையமைப்பாளர் தேவா சாரின் நாள், மாண்புமிகு பறை படத்திற்கு இசைக்கு அவரைத்தேர்ந்தெடுத்தது மிக மிக பொருத்தம். என் படங்களுக்குத் தேவா சாரும், ஶ்ரீகாந்த் தேவாவும் அதிகமாக இசையமைத்துள்ளார்கள், அவர்கள் இசையில் பறையை எப்போதும் பயன்படுத்துவார்கள், அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பது பொருத்தமாக அமைந்துள்ளது. பறை பற்றிய கதையைப் படம் சொல்வது  மகிழ்ச்சி. தொல் திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கோரிக்கை, உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் சினிமாவிலும் கொஞ்சம் நடியுங்கள், லியோனி சார் மகனுக்கு என் வாழ்த்துக்கள். இப்படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 


ஆழி பறையிசை கலைஞர் எழில் பேசியதாவது…, 

இயக்குநர் இப்படத்தில் எங்களை அழைத்துப் பறை இசையில் பயன்படுத்தினார். பறை இசை இசைப்பதால் எங்களைப் பல இடங்களில் தொட்டுக்கூடப் பேச மாட்டார்கள். இன்று பலர் நன்றாகப் படித்தும் இந்த மனநிலை மாறவில்லை. இந்த நிலை மாற வேண்டும் எனக் குழந்தைகளிடம் பறை இசையைக் கொண்டு சென்று பரப்பி வருகிறோம். எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. 


பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் பேசியதாவது..,  

பறை இசை தான் எனக்குத் தெரியும், பேசத் தெரியாது. மனிதன் பேசுவதற்கு முன் ஆரம்பித்த இசை பறை இசை. மனிதனின் அனைத்து விஷேசங்களிலும் இசைக்கப்படுவது பறை தான். மனிதனின் சந்தோசத்துக்கு இசைக்கும் இசை தான் பறை. பறை இசையை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. 


கலைமாமணி முனுசாமி பேசியதாவது.., 

நான் பறை இசைக் கலைஞன், என் தாத்தா, அப்பா எல்லோரும் பறை இசைக் கலைஞர்கள் தான். பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம். மேடை கச்சேரிகளில் பறை இசையைக் கொண்டு சென்று சேர்த்தேன், பறை இசை பெருமைப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. 


நடிகர் ஆரியன் பேசியதாவது.., 

இந்த மேடை எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படம் கிடைக்கக் காரணம் தயாரிப்பாளர்கள் தான், அவர்களுக்கு நன்றி. என்னை நம்பி எனக்கு இந்த கேரக்டர் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. டிசம்பர் 12 படம் திரைக்கு வருகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள். ஜானி மாஸ்டருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் கணேஷ் பாபு பேசியதாவது.., 

இயக்குநர் வெங்கடேஷ் திருமாவளவன் ஐயா நடிக்க வேண்டும் என்றார், அது ஏற்கனவே நடந்து வருகிறது அதை ஐயா அறிவிப்பார். எந்த ஒலி பெருக்கியும் இல்லாமல் மனித மனதை ஊடுருவும் இசை பறை இசை. பறைக்கும் எனக்கும் நிறையத் தொடர்பு உள்ளது. வேட்டையாட கண்டுபிடிக்கப்பட்ட  பறை, இன்று அடிமை விலங்குகளை உடைக்க பயன்படுகிறது. சாவுக்கு அடிக்கும் இசை அல்ல, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு சாவு பயத்தைக் காட்டும் இசை. இன்று சமூகத்திற்கு இந்த இசையின் பெருமை புரிந்துள்ளது. விஜய் சுகுமார் மாண்புமிகு பறை படத்தை உருவாக்கியதற்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தின் பெயருக்கே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் நன்றி 


இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது.., 

இயக்குநருக்காகத் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இயக்குநர் மிகக் கடினமான உழைப்பாளி. படத்தை அருமையாக எடுத்துள்ளார், அப்பாவின் விழாவிற்கு நான் வந்ததது மகிழ்ச்சியாக உள்ளது. பறை இசை இப்போது டிஜிட்டலிலும் வந்துவிட்டது. இந்த இசையை உலகம் முழுக்க வாசிக்கிறார்கள். பறை இசை நம் பெருமை. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி. 


இசையமைப்பாளர் சபேஷ் முரளி பேசியதாவது.., 

பறை இசைக்கு ரிதம் மிக முக்கியம், இந்த படத்திற்கு அண்ணனால் மட்டும் தான் இசை அமைக்க முடியும். அண்ணன் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி. 


நடிகை காயத்திரி பேசியதாவது.., 

பறை எல்லா இசைக்கருவிகளின் தாய் தான் பறை. எல்லா செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்க, திருவிழாவிற்கு, விஷேசத்திற்கு என எல்லாவற்றிற்கும் பறை தான் அடிப்படை. அந்த பறை இசை பெருமை பேசும் படத்தில் நானும் அங்கமாக இருப்பது எனக்குப் பெருமை. மீடியா நண்பர்கள் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


திரு அன்புச்செல்வன் பேசியதாவது.., 

தயாரிப்பாளர் சுபா மேடம் இப்படத்தை ஃபிரான்ஸிலிருந்து  எடுத்துள்ளார்கள். மிகப்பெரிய செலவு செய்து இப்படத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநரை முழுமையாக நம்பினார் அதை இயக்குநர் காப்பாற்றி அருமையாகப் படத்தை எடுத்துள்ளார். இப்படம் அதற்காகப் பெரிய வெற்றி பெற வேண்டும். 


லியோ சிவக்குமார் பேசியதாவது.., 

நான் திண்டுக்கல்லில் பிறந்து முதன் முதலில் கேட்ட இசை பறை இசை. இன்று நான் பறை இசை கலைஞனாக நடித்திருப்பது பெருமை. இந்த கதையை இயக்குநர் சொன்ன போதே இதன் பெருமை புரிந்தது, இதில் நடிக்கக் கண்டிப்பாகப் பறை கற்றுக்கொள்ள வேண்டுமென, சக்தி கலைக்குழுவில் பறை கற்றுக்கொண்டு இப்படத்தில் நடித்தேன். இணை தயாரிப்பாளர் முரளி இல்லாமல் இப்படம் இல்லை. இப்படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முனுசாமி அண்ணன் இசை கேட்டு நாடி நரம்பெல்லாம் துடித்தது விருதுக்குத் தகுதியானவர் அவர். இயக்குநருக்கு என்  நன்றி. இசையமைப்பாளர் தேவா இசை கேட்டுத் தான் வளர்ந்துள்ளேன். அவர் இசையில் நடித்தது எனக்குப் பெருமை. இந்த விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய ஆளுமைகளுக்கு நன்றி. டிசம்பர் 12 படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


இயக்குநர் பாக்யராஜ்  பேசியதாவது..,

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்கிறது என்பார்கள் இங்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஶ்ரீகாந்த்தேவா தேசிய விருது வாங்கி தேவாவைக் கௌரவப்படுத்தியுள்ளார். அதே போல  நாயகன் லியோ  அவர் அப்பா லியோனி போல அருமையாகப் பேசினார். பறை இசை நான் சின்ன வயதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் கேட்டுள்ளேன். அது சாவுக்காக அடிக்கும் பறை இல்லை, சாமிக்காக அடிக்கும் பறை. சாமியிடம் செல்வதால் அதை அடித்து வழியனுப்புகிறார்கள். ஆதி தமிழனின் முதல் இசை பறை.  ஃபாரினில் போய் நம் பாரம்பரியத்தைப் போற்றும் கதை எழுதி, அதைப் படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். லியோனி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆளுமை, அவர் பேச்சை நான் விரும்பிக் கேட்பேன். ஆணவக்கொலை என்பது எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்தே நடந்து வருகிறது. இன்னும் மாறவில்லை. அதனால் தான் ஆதரவு தரும் வகையில் திருமாவளவன் இந்த விழாவிற்கு வந்துள்ளார். எல்லோரும் மிகவும் கஷ்பட்டு இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

Wednesday, 19 November 2025

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும்

 *தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!*







தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.


அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார்.


இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார். சமூக நலத்திற்கான தனது பற்றும், மனிதநேயத்தை மையமாக கொண்ட செயல்பாடுகளும் வெளிப்படுத்திய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.