*தமிழின் சிறந்த உளவியல் த்ரில்லர் கதைகளில் ஒன்றாக வெளியாகியுள்ள ‘ஸ்டீபன்’ தற்போது நெட்ஃபிலிக்ஸின் உலகளாவிய டிரெண்ட்ஸ் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் உள்ளது!*
மும்பை: உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரைன், இலங்கை, மாலத்தீவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய முதல் 10 படங்கள் பட்டியலில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’ஸ்டீபன்’ இப்போது ஏழாவது இடத்தில் உள்ளது.
‘ஸ்டீபன்’ படத்தை சிலாகித்து சமூகவலைதளங்களில் பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, மற்ற க்ரைம்-த்ரில்லர் ரசிகர்களை ஈர்ப்பதோடு கோமதி சங்கரின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இது படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் கதையை சுற்றியுள்ள பரபரப்பு, பல அடுக்குகள் கொண்ட கதை என இந்த வாரம் வெளியான வெற்றி கதைகளில் ஒன்றாக ‘ஸ்டீபன்’ உள்ளது.
படத்தின் வரவேற்பு குறித்து இயக்குநரும் எழுத்தாளருமான மிதுன் பாலாஜி மற்றும் நடிகரும் இணை எழுத்தாளருமான கோமதி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “படத்திற்கு இந்த வாரம் கிடைத்துள்ள வரவேற்பு நம்பமுடியாத அளவும் மொத்த அணியினருக்குமே ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. மேலும் இந்தப் படத்தை உருவாக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுடைய நேர்மை, முயற்சி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு சரியான வெகுமதியை பார்வையாளர்கள் கொடுத்துள்ளனர். படத்தின் கதை, அதன் தீம், கதாபாத்திரங்கள் என பார்வையாளர்கள் பொதுவெளியில் இதைப்பற்றி பேசுவதும் விவாதிப்பதும் எங்களை அங்கீகரிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. *உலகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அனைத்து தரப்பு பார்வையாளர்களும் 'ஸ்டீபன்' படம் மீது செலுத்தும் அன்பு நெகிழ்ச்சியாக உள்ளது.* 'ஸ்டீபன்’ மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க களம் அமைத்து கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றனர்.
புதிய பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் கடைசி ஃபிரேம் வரை பரபரப்பான உளவியல் த்ரில்லர் கதையாக ‘ஸ்டீபன்’ வெளியாகியுள்ளது. இதுபோன்ற புதுமையான உளவியல் த்ரில்லர் கதைகளை கொடுத்து புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் களமாக நெட்ஃபிலிக்ஸ் உள்ளது.
‘ஸ்டீபன்’ படத்தை இப்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் பாருங்கள்!





No comments:
Post a Comment