Featured post

*The Undisputed Pan-India Rebel Star Prabhas Ignites Global Storytelling Revolution with The Script Craft International Short Film Festival

 *The Undisputed Pan-India Rebel Star Prabhas Ignites Global Storytelling Revolution with The Script Craft International Short Film Festival...

Saturday, 20 December 2025

Kombuseevi Movie Review

 Kombu Seevi Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kombu seevi படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல sarathkumar , sanmuga pandian , tharnika னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது ponram . இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு. 1996 ல வைகை அணை சம்பந்தமா நடந்த ஒரு சில உண்மை சம்பவங்களை தழுவி தான் இந்த படத்தை எடுத்துருக்காங்க னு சொல்லுறாங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



மதுரை ல தான் இந்த படத்தோட கதை நகருது. தேனீ பக்கத்துல இருக்கற சின்ன ஊர் ல தான் rokkapuli யா நடிச்சிருக்க sarathkumar இருக்காரு. அந்த ஊர் ல எந்த ஒரு நல்லது கெட்டது நடத்தலும் இவரை கேட்டுட்டு தான் முடிவு எடுக்கறாங்க. அந்தளவுக்கு ஒரு பெரிய மனுஷனா அந்த ஊர்மக்களுக்கு ஒரு காவல்காரனா இருந்துட்டு வராரு. இதே ஊர் ல அப்பா அம்மா இல்லாம ஒரு அனாதையா இருக்காரு kombuseevi pandiyan அ நடிச்சிருக்க sanmuga பாண்டியன். இப்போ வைகை அணை கட்டணும் ண்றதுக்காக பக்கத்துல இருக்கற ஊர் மக்களை அரசாங்கம் காலி பண்ண வைக்குது. இதுல இவங்க ஊர் யும் பாதிக்க படுது. அதுமட்டுமில்ல்ல இந்த ஊர் ஓட பொருளாதாரமும் கம்மி ஆயிடுது. அதுனால இந்த ஊர் மக்கள் ல ஒரு சிலவங்க கஞ்சா கடத்துற business அ பண்ண ஆரம்பிக்குறாங்க. 


ஒரு பிரச்சனை நடக்கும் போது kombuseevi pandiyan rokkapuli யா காப்பாத்துறாரு. அதுனால இவங்க ரெண்டு பேரும் நல்ல close ஆயிடுறாங்க. இவர்களுக்கும் வேற வழியில்லை கடத்தல் business அ பண்ண ஆரம்பிக்குறாங்க. இதுனால இவங்களுக்கு எதிரிகளும் அதிகமா ஆயிடுறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல police தந்திரமா கஞ்சா இருக்கும்போதே kombuseevi pandiyan அ arrest பண்ணிடுறாங்க. இதுனால கோபம் அடையுற rokkapuli police station அ எரிச்சு இவரை release பண்ணிடுறாரு. ஆனா இதுக்கு அப்புறம் நடக்கற பின்விளைவுகள் என்ன? இந்த பிரச்சனை ல இருந்து இவங்க ரெண்டு பேரும் தப்பிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படைத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sarathkumar ஓட acting அசத்தலா இருந்தது. கோபம் படுறது, ஊர் மக்களுக்காக நிக்குறது, sanmugapandiyan மேல பாசம் காமிக்கிறது, அங்க அங்க ஒரு சில எடத்துல comedy பண்ணுறது னு ரொம்ப perfect அ நடிச்சிருக்காரு. sanmuga pandiyan ஓட dialogue delivery , body language னு எல்லாமே super அ இருந்தது. அதுமட்டுமில்ல action scenes ளையும் நல்ல பண்ணிருந்தாரு. tharanika police character ல அழகா நடிச்சிருக்காங்க. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது ponram ஓட direction அ பத்தி சொல்லணும். என்னதான் வைகை அணை யா பத்தி கதை நடந்தாலும், ரொம்ப deep அ இந்த issue பத்தி focus பண்ணாம ஒரு commercial படத்துக்கு தேவையான எல்லா விஷயத்தையும் படத்துல கொண்டு வந்திருக்காரு. first half கொஞ்சம் slow அ போனாலும் கதையை விறுவிறுப்பை கொண்டு போயிருக்காங்க. அதே மாதிரி second half ல action scenes அ வச்சி ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காங்க. இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது yuvan shankar raja . இவரோட songs and bgm எல்லாமே இந்த கதைக்கு super அ பொருந்தி இருந்தது. bala subramaniam ஓட cinematography யும் super ஆவும் colourful ஆவும் இருந்தது. இந்த படத்தோட editing யும் sharp அ குடுத்திருக்காங்க. 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. so miss பண்ணாம இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment