Featured post

Pallichattambi unveils Kayadu Lohar’s vintage avatar in its latest poster

 Pallichattambi unveils Kayadu Lohar’s vintage avatar in its latest poster* Pallichattambi is the upcoming film directed by Dijo Jose Antony...

Tuesday, 3 February 2026

பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ் (vintage)தோற்றம் வெளியானது

 *பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ்  (vintage)தோற்றம் வெளியானது*



இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ்  கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ்  தோற்றத்தில் காட்சியளிக்கிறார். 


இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

கன்னட திரைப்படமான 'முகில்பேட் ' ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'டிராகன்' எனும் தமிழ் திரைப்படம் - அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 


பள்ளிச்சட்டம்பி - கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ எம் கேம்' படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. கயாடு லோஹர் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 


இதற்கிடையில் பள்ளிச்சட்டம்பி திரைப்படம்-  ஏப்ரல் மாதம் 9 தேதி வெளியாகிறது. வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் ( Worldwide Films) மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் ( C Qube Bros Entertainment) ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம்  ஒரு முழுமையான மாஸான ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோஷன் போஸ்டர் - டைட்டில் போஸ்டர் மற்றும் டொவினோ தாமஸ் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெறும் வீடியோக்கள்.. ஆகிய அனைத்தும் வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன.


இப்படத்தை வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh ), இவர்களுடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சானுக்யா - சைதன்யா-  மற்றும் சரண் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஷியாம் மற்றும் தன்சீர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். பள்ளிச்சட்டம்பி எனும் இந்த திரைப்படம் 1950-60 காலகட்டத்தில் கேரளாவில் நடக்கும் ஒரு கதையை சொல்கிறது. டொவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹர்ருடன் விஜயராகவன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment