Featured post

Maa Kauvery, Chennai’s New 120-Bed Exclusive Women and Children’s Hospital* Inaugurated by Tamil Nadu Health Minister

Maa Kauvery, Chennai’s New 120-Bed Exclusive Women and Children’s Hospital* Inaugurated by Tamil Nadu Health Minister   * Maa Kauvery brings...

Wednesday, 26 August 2026

சென்னையில் 'மா காவேரி' மகளிர் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை

 சென்னையில் 'மா காவேரி' மகளிர் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை




120 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்


மகப்பேறு மருத்துவம், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், கருத்தரிப்புச் சிகிச்சை, பச்சிளம் குழந்தை மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை ஆகிய சேவைகளை மா காவேரி மருத்துவமனை ஒரே அமைவிடத்தில் ஒருங்கிணைத்து வழங்குகிறது.


நிலை 3 பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU) மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (PICU) உள்ளிட்ட சிறார்களுக்கான உயர்சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கான அனைத்து நவீன வசதிகளும் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளன.


சென்னை, ஆகஸ்ட் 25, 2026: காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை, மகளிர் மற்றும் குழந்தைகளின் உடல்நலப் பராமரிப்பிற்காக பிரத்யேகமாக 120 படுக்கைகள் கொண்ட 'மா காவேரி' மருத்துவமனையைத் தொடங்கியுள்ளது. இம்மருத்துவமனை, மகப்பேறுகால பராமரிப்பு, மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், கருத்தரிப்புச் சிகிச்சை, பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை தொடர்பான விரிவான சேவைகளை வழங்குகிறது.


தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் மா காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி. செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மா காவேரி மருத்துவமனை கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மணி நேரமும் மகப்பேறு கால பராமரிப்பு மற்றும் இயல்பான மற்றும் அதிக இடர்வாய்ப்புள்ள கர்ப்ப நிலைகளில் சிறப்பு சிகிச்சை மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. கர்ப்ப காலம், பிரசவ வலி மற்றும் குழந்தை பிறப்பு என அனைத்து காலகட்டங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆதரவளிக்க பிரத்யேக மருத்துவக் குழுக்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றன. தாய்மைப்பேறு காலம் முழுவதிலும் அன்னையருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் ஒருங்கிணைந்த ஆதரவை உறுதி செய்யும் வகையில், விரிவான பராமரிப்பை இம்மருத்துவமனை வழங்குகிறது.


இந்த விரிவான மகப்பேறு பராமரிப்பு சேவையுடன், மேம்பட்ட லேபராஸ்கோபிக் பெண்ணோயியல் அறுவை சிகிச்சை மற்றும் வளர்கருவிற்கான மருத்துவச் சேவைகளும் வழங்கப்படும். இதன் மூலம் பெண்கள் கனிவான அக்கறையுடன் சிறப்புப் பராமரிப்பைப் பெறுவார்கள். மேலும், கருப்பைக்குள் விந்து செலுத்துதல் மற்றும் சோதனைக் குழாய் கருத்தரித்தல் உள்ளிட்ட உதவப்படும் கருத்தரித்தல் சேவைகளையும் இம்மருத்துவமனை வழங்குகிறது.

No comments:

Post a Comment