Featured post

Autograph Movie Review

 Autograph Review ஹாய் மக்களே nov 14 th அன்னிக்கு autograph படத்தை re release பண்ண போறாங்க. 2004 ல வெளி வந்த இந்த படம் ஒரு romanticmovie.  இ...

Friday, 9 October 2020

பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள்

 பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது  வணக்கங்கள் !

நான் இயக்குநர் திரு. செல்வா அவர்களிடம் துணை,இணை இயக்குநராக பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளேன். 

தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பில் KJR studios கோட்டப்பாடி J.ராஜேஷ் சார் அவர்களின் தயாரிப்பில் க/பெ ரணசிங்கம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளேன்.

இத்திரைப்படம் கடந்த 2 ஆம் தேதியன்று DTH தளத்தில்











ZEE PLEX லும் OTT தளத்தில் ZEE5 லும் வெளியாகி உலகமெங்கும் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து  தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட  மொழிகளில் இன்று (09-10-2020 ) வெளியாகவுள்ளது.

தமிழில் மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் எனது   மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த நெகிழ்வான தருணத்தில் எனது தந்தை கலைமாமணி பெரியகருப்பத்தேவர், தாயார் அன்னமயில், என் வாழ்வில் அத்தனை சோதனையான காலகட்டதிலும் என்னை தாங்கிப்பிடித்த என் மனைவி செல்விக்கும், என் உடன் பிறந்த சகோதரர்கள் 

கார்த்திக் ,பால்பாண்டி , கோபாலகிருஷ்ணன் மற்றும் எனது குடும்ப  உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் என்னுடன் பயணித்த பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் வசனகர்த்தா நண்பன் சண்முகம் முத்துசாமி,

இசையமைப்பாளர் ஜிப்ரான்,

பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து

ஒளிப்பதிவாளர் NK.ஏகாம்பரம்,

சண்டை பயிற்சியாளர்

பீட்டர் ஹெய்ன்,

படத்தொகுப்பு செய்த சிவாநந்தீஸ்வரன்,

கலை இயக்குநர் லால்குடி இளையராஜா,

நடன இயக்குநர் ராஜூ சுந்தரம்

மற்றும் நண்பன்

S.K.வெற்றிச் செல்வன், இயக்குனர் தம்பி தாஸ் ராமசாமி,

மற்றும் எனது இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கு நன்றி.

நீங்கள் சாத்தியப்படுத்திய வெற்றி சந்தோஷத்தை மட்டுமல்ல அடுத்த படத்திற்கான பொறுப்பையும் தந்துள்ளது.

இனிவரும் எனது படைப்புகளுக்கும் உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டமொழிகளில் 



No comments:

Post a Comment