Featured post

Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team

 Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team for 45-Day Action Marathon Shoot of Yash’s Toxic...

Friday, 9 October 2020

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் திரைஜாலம் நிகிழ்த்த பிரபாஸ்

 வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் திரைஜாலம் நிகிழ்த்த  பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுடன் வாழும் ஆளுமை அமிதாப் பச்சன் இணைகிறார்.

அனுபவமிக்க தயாரிப்பு நிறுவனம், தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு இயக்குநர், இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரக் குழு மற்றும் ஒரு அட்டகாசமான கதை, இவை யாவும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த சினிமா அனுபவத்துக்கான காரணிகளாகும்.

வரவிருக்கும் தங்களின் உலகளாவிய வெளியீட்டைக் கொண்ட மெகா பட்ஜெட், பலமொழித் திரைப்படத்துக்காக, முன்னணி தென்னிந்திய தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், ஆளுமை மிக்க அமிதாப் பச்சனை ஒரு முக்கிய பாத்திரத்துக்காக இப்படத்தில் இணைத்ததன் மூலம் இன்னொரு ஆச்சர்யகரமான நடிகர் தேர்வை நிகழ்த்தியுள்ளனர்.

50 சிறப்பான ஆண்டுகளாக, வைஜயந்தி மூவிஸ் இந்திய மொழிகளில் ஏராளமான மறக்கமுடியாத படங்களை உருவாக்கியதுடன், தெலுங்கு சினிமாவின் மகிமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியுள்ளது. அதன் சமீபத்திய படைப்பான, புகழ்பெற்ற நடிகை சாவித்திரியின் கதையான, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற  ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு பிறகு, வரவிருக்கும் அடுத்த படம் வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிறுவனருமான அஸ்வினி தத்தின் மனிதில் இருக்கும் கனவாகும்.

“ஸ்ரீ அமிதாப் பச்சன் அவர்கள் மறைந்த ஆளுமை ஸ்ரீ என்.டி.ஆர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான நடிகர். அவரது சில சூப்பர்ஹிட் பாலிவுட் படங்களின் தெலுங்கு ரீமேக்கிலும் அவர் நடித்துள்ளார். ஸ்ரீ என்.டி.ஆர் அவர்களும் நானும் க்ளாசிக் திரைப்படமான ‘ஷோலே’-யை பல முறை பார்த்துள்ளோம். என்.டி.ஆரின் ராமகிருஷ்ணா திரையரங்கில் அப்படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஓடியது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய சினிமாவின் மிகச்சிறந்த அடையாளமான ஸ்ரீ பச்சன் அவர்களை எங்கள்  வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த மதிப்புமிக்க திரைப்படத்தின் ஒரு அங்கமாக வரவேற்பது உண்மையில் எனக்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பெருமைமிகு தருணமாகும். இந்த தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ என்.டி.ஆர் அவர்களுடன் தன் பயணத்தை தொடங்கி அவராலேயே பெயரிடப்பட்டது.” என்று தயாரிப்பாளர் அஸ்வினி தத் கூறியுள்ளார்.

“எத்தனையோ படங்களுக்கு மத்தியில் பச்சன் சார் எங்கள் படத்தை தேர்ந்தெடுத்திருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டக்காரனாகவும், ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன். இது ஒரு முழு நீள கதாபாத்திரம், இதன் மூலம் நாங்கள் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்வோம் என்று நம்புகிறோம்” என்று இயக்குநர் நாக் அஸ்வின் மகிழ்ச்சியுடன் கூறினார்.

வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாவின் பல படங்களின் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த இணை தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோர் இந்த முக்கிய தருணத்தில் தங்களின் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

இன்றைய இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட கனவு நடிகர்களுடன், சினிமா ஜாலக்காரர் நாஜ் அஷ்வின் (நடிகையர் திலகம் புகழ்) இயக்கும் இப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கலாம். 

இப்படம் 2022-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment