Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Saturday 21 August 2021

அப்போலோ மருத்துவமனையில்

அப்போலோ மருத்துவமனையில்

குடலிறக்க அறுவை சிகிச்சை(Hernia Surgery) மற்றும்

வயிற்றுச் சுவர் (Abdominal Wall)  சீரமைப்பு மையம் ஆரம்பம்!

 ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான உடல்நல சிகிச்சை குழுமமான, அப்போலோ குழுமத்தின் ஒரு பகுதியான சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் குடலிறக்க அறுவை சிகிச்சை (Hernia Surgery) மற்றும் வயிற்றுச் சுவர் (Abdominal Wall) சீரமைப்பு மையம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை அப்போலோ மருத்துவனையில் நடைபெற்ற தொடக்க விழாவில், குடலிறக்க சிகிச்சைக்கான இச்சிறப்பு மையத்தை,  தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் தொடக்கி வைத்தார். குடலிறக்க சிகிச்சைக்கான இச் சிறப்பு மையத்தில் லேப்ரோஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் சர்ஜரி (laparoscopic and Robotic Surgery ) உள்ளிட்ட நவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்பது உடலுக்குள் பெரும்பாலும் வயிற்று பகுதியில் ஒரு உறுப்பில் அல்லது பருத்த திசுவில் ஏற்படும் வீக்கமானது அதை சுற்றிய தசை அல்லது திசுவின் மூலம் உடலின் பலவீனமான பகுதியின் வழியாக வெளியே தெரியும் ஒரு (மருத்துவ) நிலைமையாகும். இந்நிலையானது உறுப்புகள் பெருத்தல், வீங்குதல், கட்டி உருவாகுதல் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்பட காரணமாகிறது. அதுவே வலி, வீக்கம், அசெளகரியம் உள்ளிட்டவற்றால் உடல் பாதிக்கப்படும் நிலையையும் உருவாக்குகிறது. ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்னையில், இடுப்பு (குடல், தொடை எலும்பு ஆகிய) பகுதியில் ஏற்படும் குடலிறக்கம், தொப்புள் பகுதியில் ஏற்படும் குடலிறக்கம், முந்தைய அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட வடு காரணமாக உருவான பலவீனத்தைத் தொடர்ந்து ஏற்படும் வென்ட்ரல் அல்லது கீறல் எனப்படும் குடலிறக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான குடலிறக்க பிரச்னைகள் உள்ளன.

 பிறவிக் கோளாறு, பிறவியிலேயே ஏற்படும் தசைப் பலவீன கோளாறுகள், அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கம், நாள்பட்ட இருமல், வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அப்பகுதியில் போதிய பலம் இல்லாது போதல், அதிக எடையை தூக்குதல், கடுமையான உடல் உழைப்பு உள்ளிட்டவை இது போன்ற ஹெர்னியா பிரச்னைகள் உருவாக பிரதான காரணங்களாக அமைகின்றன.

 இதை சரி செய்வதற்கு வயிற்றை கிழித்து திறந்த நிலையிலான அறுவை சிகிச்சை செய்வதுதான் பொதுவான வழக்கம். வெளித் தள்ளி நீண்டிருக்கும் பகுதியை மீண்டும் அதன் இயல்பான இடத்துக்கு தள்ளி வைத்து விட்டு, பாதிக்கப்பட்ட பகுதி தையல் போட்டு மூடி சரி செய்யப்படும். குறைப்பாட்டை நீக்கி சரி செய்யவும், பாதிக்கப்பட்ட உறுப்பை வலுப்படுத்தவும் மெஷ் என்றழைக்கப்படும் செயற்கை உறுப்பும் பயன்படுத்தப்படுகிறது.

 இருந்த போதிலும், பெரிய கீறல் (வென்ட்ரல்) குடலிறக்க பிரச்னைகளில் முந்தைய கால கட்ட அறுவை சிகிச்சைகளின் போது தசைச் சுவர்கள் பலவீனமானதுடன், அதிக பாதிப்புகளும் காணப்பட்டன. மேலும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நோயுறும் தன்மை மற்றும் மீண்டும் பாதிக்கப்படும் கூறுகளும் அதிகம் காணப்பட்டன. மெஷ்ஷஸ் எனப்படும் செயற்கை உறுப்பு சிகிச்சையும் அதிக செலவீனம் கொண்டதும், அனைவராலும் மேற்கொள்ள இயலாத ஒன்றாகவும் காணப்பட்டது.

 




ஹெர்னியா சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அப்போலோ மருத்துவமனையின் ரத்தமிலா அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகரும், பேரியாட்ரிக் அன்ட் ரோபோடிக் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரேம்குமார் பாலச்சந்திரன் (Dr.Premkumar Balachandran, Senior consultant minimal access, bariatric and robotic surgeon, Apollo hospitals) கூறுகையில், ஹெர்னியா எனப்படும் குடலிறக்க கோளாறுகளுக்கான சிகிச்சை இன்றைய தினத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றத்தை அடைந்துள்ளது. இம்முறையில் காயமில்லா அறுவை சிகிச்சை அல்லது லேபரோஸ்கோபிக் சிகிச்சையின் வரவானது நோயாளிகள் மற்றும் மருத்துவர்களால் மிகப் பெரிய வரமாக பார்க்கப்படுகிறது. வென்ட்ரல் ஹெர்னியா மேனேஜ்மென்ட் என்று அழைக்கப்பட்ட கீறல் குடலிறக்க சிகிச்சையானது தற்காலங்களில் “வயிற்று சுவர் மறு சீரமைப்பு” என்று அழைக்கப்படலாயிற்று. சிக்கலான மறு சீரமைப்புகள், வயிற்றுச் சுவர் உள்பகுதி பிரிப்பு அறுவை சிகிச்சைகள், வழக்கமான குரோயின் மற்றும் வென்ட்ரல் ஹெர்னியா (groin and ventral hernia) பிரச்னைகள்  ஆகியனவற்றை நவீன லேபரோஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் சிகிச்சை முறைகள் மூலமாக மிிகவும் குறைவான குருதி சேதத்துடன் மிகவும் மேம்பட்ட முறையில் சிகிச்சை மேற்கொள்ள இயலும் என்றார்.

 “ஸ்கோலா  (Subcutaneous Onlay Mesh Repair), லேப்ரோஸ்கோபிக் இ டெப் மற்றும் டர்(Enhanced View Extra Peritoneal Repair with Transverses Abdominis Release), டார்ம், இபோம் மற்றும் இபோம் பிளஸ் (Intra Peritoneal Only Mesh)  சிகிச்சை முறைகள் [laparoscopic E TEP repair with TAR (Enhanced View Extra Peritoneal Repair with Transverses Abdominis Release), TARM (Trans Abdominal Retro Muscular), IPOM and IPOM plus (Intra Peritoneal Only Mesh) repairs, can be successfully performed in this centre.] உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் இந்த மையத்தில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன” என மேலும் அவர் தெரிவித்தார்.

 அனைத்து வகையான குடலிறக்கப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. தொழில் நுட்பம் மற்றும் நவீன உத்திகளுடன் கூடிய அனைத்து வகையான உபகரணங்களையும் முழுமையாக கையாண்டு மேற்கொள்வதால், நோயாளிகள் சிறப்பாக குணமடையும் வகையில் எங்களை தயார்படுத்தி வருகிறோம். இந்தியாவில் அது போன்ற மருத்துவமனைகள் ஒரு சிலவே உள்ளன, மேலும் குடலிறக்க பிரச்னை மற்றும் வயிற்று சுவர் மறு சீரமைப்பு சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனை ஒரு முன்னோடியாக திகழும், அதன் வளர்ச்சிக்கான ஆற்றலை மேலும் நாம் விரித்து கூறத் தேவையில்லை.


 

No comments:

Post a Comment