Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Tuesday, 31 August 2021

மகாபலிபுரத்தில் நடைபெற்ற, முதல் பீச் மல்யுத்த தேசிய

                          




































பத்திரிக்கைச் செய்தி


மகாபலிபுரத்தில் நடைபெற்ற, முதல் பீச் மல்யுத்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்புஷன் சரண் சிங் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் மல்யுத்தம் ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்களில் பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் ரவிக்குமார் தாஹியா மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் மல்யுத்தத்தில் பதக்கம் வென்று அசத்தினர். இந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சார்பில், இந்தியாவில் முதன்முறையாக பீச் மல்யுத்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. வழக்கமாக மல்யுத்தத்தில் தலா மூன்று நிமிடங்களுக்கு இரண்டு சுற்றுகள் நடைபெறும் நிலையில், பீச் மல்யுத்தத்தைப் பொறுத்த வரையில் மூன்று நிமிடங்களுக்கு ஒரேயொரு சுற்று மட்டுமே நடத்தப்படுகிறது.

 

 

 Click here for video:

https://www.youtube.com/watch?v=pNya2zdwWhY

மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை விடுதியில், கடந்த 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த போட்டிகளில், இந்தியா முழுவதிலும் இருந்து 23 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் மல்லுக்கட்டினர். மகளிர் பிரிவில் 50 கிலோ, 60 கிலோ, 70 கிலோ மற்றும் 70+ கிலோ என 4 எடைப்பிரிவுகள் மற்றும் ஆண்கள் பிரிவில் 70 கிலோ, 80 கிலோ, 90 கிலோ மற்றும் 90+ கிலோ என 4 எடைப்பிரிவுகள் என மொத்தம் 8 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

இதன் மாபெரும் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி வாகை சூடிய வீரர், வீராங்கனைகளுக்கு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், தெற்காசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தரப்பிரதேச  நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்புஷன் சரண் சிங் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும்
கேரள மல்யுத்த சங்கத்தின் தலைவருமான வி.என்.பிரசூத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.பி.தேஷ்வால், டெல்லி அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் தலைவர் ஜெய் பிரகாஷ் சிங், ஜார்க்கண்ட் மல்யுத்த சங்கத்தலைவர் போலநாத் சிங், தமிழ்நாடு மல்யுத்த சங்கத்தின் செயலாளர் எம்.லோகநாதன், தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் சி.லதா மற்றும் ஜெ.மனோகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment