Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Tuesday, 24 August 2021

கொரோனாவை விட ஒரு கொடிய நோய் நாட்டில் வேகமாக

             கொரோனாவை விட ஒரு  கொடிய நோய் நாட்டில் வேகமாக  பரவிக் கொண்டிறுக்கிறது " மெய்ப்பட செய் " படத்தின் இயக்குனர் வேலன்.


S R பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தயாரித்திருக்கும் படம் " மெய்ப்பட செய் " 
ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ. ஏ.கே.சுந்தர், பெஞ்சமின்,ஞான பிரகாசம் E G P,
சூப்பர் குட் சுப்ரமணி, விஜய கணேஷ்,  தவசி, அட்டு முத்து, சிவா , ராஜ மூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு - R.வேல்
இசை - பரணி
எடிட்டிங் - K.J.வெங்கட் ரமணன்
கலை - கிருஷ்ண மூர்த்தி
நடனம் - தீனா 
மக்கள் தொடர்பு - மணவை புவன்
இணை தயாரிப்பு - S.ரவிசந்திரன், ஞான பிரகாசம் E G P
தயாரிப்பு - தமிழ் ராஜ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வேலன் D.s.w, DFD 

படம் பற்றி இயக்குனர் வேலன் கூறியதாவது....

உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து பரவ ஆரம்பித்து  இன்று அனைத்து நாடுகளிலும், மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி கிடக்கிறது கொரொனா என்னும் கொடிய நோய். ஆனால் அதை விட வேகமாக  ஒரு மிகப்பெரிய கொடிய நோய் நாட்டில் அதிகரித்து வருகிறது, அதுதான் பாலியல் வன்கொடுமை. இந்த ஆழமான  கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் " மெய்ப்பட செய் " 
 






























 
 
நமது தலைமுறை நன்றாக வாழ பணம், நகை, சொத்து எல்லாவற்றையும் சேர்த்து வைக்க நினைக்கும் நாம், நமது தலைமுறை  நிம்மதியாக வாழ எதை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை.
தூரத்தில் யாரோ ஒருவருக்கு நடக்கும் சம்பவம் நாளை நம் வீட்டிலும் நடக்கலாம்.
 
அப்படி ஒரு கிராமத்தில் இருந்து தன்னலமற்ற நகர வாழ்க்கை பற்றி அனுபவமே இல்லாத நான்கு நண்பர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ சென்னைக்கு வருகிறார்கள். இங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து    வியக்கின்றனர். ஒன்றும் தெரியாமல் கிராமத்தில் வாழ்ந்த நாமளே  இதை தட்டிக் கேட்க வேண்டும் என்று துடிக்கையில் இங்கே இருக்கும் யாருமே அதை கண்டுகொள்ளாமல் சுயநலமாக  இருப்பது எதனால். அவர்களது சூழ்நிலை என்ன.. ஏன் தட்டி கேட்க மறுக்கிறார்கள் என்ற அவர்களது  கேள்விகளுக்கு விடைதான் இந்த " மெய்ப்பட செய் " படம்
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்கிறார் இயக்குனர் வேலன்.



No comments:

Post a Comment