Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Sunday 29 August 2021

புரட்சிதளபதி *விஷால்* மக்கள் நல இயக்கத்தின் செயலாளர்

 புரட்சிதளபதி *விஷால்* மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் *ஹரிகிருஷ்ணன்* அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை வரியாக உள்ள மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையிலும்


முதியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்குதல், 


பெண்களுக்கு தையல் மிஷின், தண்ணீர் குடம்,

அரிசி மூட்டைகள் வழங்குதல்














ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல்


சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற 

மக்களுக்கு உணவு வழங்குதல்


சாலையோரம் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்களை மீட்டு சுத்தப்படுத்தி முதியோர் மற்றும் மன நலம் குன்றியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற செயல்பாடுகளுடன்,


மக்களுக்கு பயனடையும் வகையில் நல திட்ட உதவிகளும்  வழங்கி வருகிறார்கள்


அதுமட்டுமின்றி நேற்று விஷால் பர்த்டே காமன் டிபி ( *Vishal birthday common DP* ) என்ற தலைப்பில் ஹாஷ்டேக் ( *Hashtag*) மற்றும் புகைப்படமும் இந்திய அளவில் 12 நிமிடங்களில் ட்விட்டரில் ( Twitter ) முதலிடம் பிடித்தது

நடிகர் விஷால் அவர்கள் தனது பிறந்த நாளில் சென்னை கீழ்பாக்கம் மெர்சி ஹோமில் உள்ள ஆதரவுற்ற  முதியோர்களுக்கு உணவு வழங்கியும், கெல்லீஸ் பகுதியில் உள்ள சுரபி இல்லத்தில் கேக்வெட்டி குழந்தைகளுடன் உணவு அருந்தியும் மகிழ்ந்தார் அவர்களுடன் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சீனு, தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா மற்றும் மக்கள் நல இயக்கத்தின் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்

No comments:

Post a Comment