Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Monday, 23 August 2021

அருண்விஜய் நடித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு ராமேஸ்வரத்தில்

 அருண்விஜய் நடித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 

ஹரி இயக்கி வருகிறார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற  பகுதிகளை தொடர்ந்து இப்பொழுது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. 

நேற்று தணுஷ்கோடியில் பரபரப்பான ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அனல் அரசின் ஸ்டண்ட் அமைப்பில் அருண்விஜய் நடித்த ஸ்டண்ட் காட்சியெய் பார்த்து அந்த ஊர் மக்கள் ஆச்சர்யமாக  பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் திடீரென அருண்விஜய் நுழைந்ததும் கடையில் இருந்தவர்கள் அவரை பார்த்து அதிர்ச்சியுற்றனர். நான் இங்கே சாப்பிடுகிறேன்.. என்ன இருக்கிறது என்று கேட்க... சூடா மீன் குழம்பு, மீன் வறுவல் இருக்கிறது என்று சொல்ல, அவருக்கு இலை போட்டு உணவு பரிமாரப்பட்டது. அவருடன் இன்னும் சிலரும் அமர்ந்து சாப்பிட்டனர். சுட சுட மீன் அருமையான சுவையுடன் இருந்ததினால், தனது டயட்டையும் மீறி நன்றாக சாப்பிட்டார். அந்த கடை நடத்தும் அம்மாவும் அவரை நன்றாக அம்மாவை போல் கவனித்து பறிமார.. அவரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது. கண் கலங்க வைத்தது.



சாப்பிட்டு விட்டு போகும் போது.. அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு.. அவருடன் புகை படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். அதை இன்று அவரது டிவிட்டர் பக்கத்தில்.. 


"ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!!

இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது..

#letsspreadlove #AV33🎬 .." 


என்று பதிவிட்டுள்ளார். 

அந்த பெண்மணியின் கவனிப்பு, என் தாயெய் போல இருந்தது.. என்ற

அருண் விஜய்யின் வார்த்தைகள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

 

#AV33 

Aunvijay, Priya Bhavanishankar, Radikaa, Yogi Babu, Garuda Ram, Thalaivaasal Vijay, Jayabalan, Pugazh, Bose Venkat, Imman Annachi, Aishwarya, Ram, and Ammu Abhirami in important roles.  

Music: GV.Prakash 

Dop: Gopinath

Editing: Antony

Stunt: Anl Arasu

Art: Micheal

PRO: Johnson

Co Producer: G.Arun Kumar

Production: Drumsticks Productions

S.Sakthivel

No comments:

Post a Comment