Featured post

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee

 டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங...

Monday, 30 August 2021

“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான்

 “நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற கருத்தை முன்னிருத்தும் ‘கதிர்’


கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி நிற்க்கிறான்.  அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே ‘கதிர்’ படத்தின் கதை.









“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற தத்துவத்தை முன்னிருத்தும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.


துவாரகா ஸ்டுடியோஸ் சார்பாக அறிமுக இயக்குனர் தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவான படம் ‘கதிர்’. வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபல மலையாள நடிகை ரஜினி சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்யா ட்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.பிரபல மலையாள இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் கையாண்டுள்ளார்.


தொழில்நுட்ப கலைஞர்கள்


தயாரிப்பு - துவாரகா ஸ்டுடியோஸ்

இயக்கம் - தினேஷ் பழனிவேல்

இசை - பிரஷாந்த் பிள்ளை

ஒளிப்பதிவு - ஜெயந்த் சேது மாதவன்

படத்தொகுப்பு - தீபக் த்வாரகநாத்

பாடல்கள் - கார்த்திக் நேத்தா, உமா தேவி

சண்டை பயிற்சி - ஸ்டன்னர் சாம்

சவுண்ட் டிசைன் & மிக்ஸிங் - ஸின்க் சினிமா

மக்கள் தொடர்பு - சதிஷ் (AIM)

No comments:

Post a Comment