Featured post

நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !

 நடிகர் 'பருத்திவீரன்' சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் ! ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபி...

Sunday, 29 August 2021

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர்

 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 


இன்று தனது 44வது பிறந்த நாளை  கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடிகர் விஷால் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இந்த இல்லம் 

புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும்




பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய விஷால்

ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும் அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்றார். 

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் உதயநிதி அவர்களால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என நம்புவதாகவும் நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருப்பதால்  கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவ முடியவில்லை எனவும் விஷால் கூறினார். ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வார் என்பதால் தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்ததாகவும் மேலும் சிறப்பாக அவர் செயல்படுவார் என நம்புவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment