Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Monday, 23 August 2021

இடிமுழக்கம் படபிடிப்பில் விஜய்சேதுபதி!!!

 இடிமுழக்கம் படபிடிப்பில் விஜய்சேதுபதி!!! வைரலாகும் புகைப்படம்.. 


Skyman Films International நிறுவனர்  கலைமகன்  முபாரக் தயாரிப்பில்  முகேன் சூரி பிரபு ஆகிய பல முன்னணி நடிகர்கள்  நடித்து இருக்குக்கும் படம் வேலன் . இப்படத்தின் Motion Poster  சமீபத்தில் Thinkmusic youtube  வெளியாகி 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும்  பெரும் வரவேற்பை பெற்று வருகிறது . 


இப்படி தனது முதல் தயாரிப்பில் பிசியாக இருக்கும் இந்நிறுவனம் தற்போது இரண்டாவது தயாரிப்பான இடி முழக்கம்  என்ற தலைப்பில் தேசிய விருது  இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் G.V .பிரகாஷ் குமார் & காயத்ரி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன் , மனோ பாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கவிபேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைக்கிறார்.  


இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக இயற்கை எழில் கொஞ்சும் தேனி  பகுதிகளில் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது . 


அப்போது பாண்டிச்சேரியில் இடிமுழக்கம் படப்பிடிப்பு நடந்து வருவதை அறிந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது படபிடிப்பு தளத்திலிருந்து எதிர்பாராத விதமாக #idiMuzhakkam shooting spot வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் , இயக்குனார் சீனு ராமசாமி , படத்தின் ஹீரோ G.V .பிரகாஷ் குமார்  ஆகியோர் இருந்தனர் . 


இந்த சந்திப்பில் விஜய் சேதுபதி அவர்கள்  தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் , இயக்குனார் சீனு ராமசாமி ஆகியவர்களோடு முக்கிய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது…. 


ஏதோ சம்பவம் இருக்கு……..

No comments:

Post a Comment