Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Wednesday, 25 August 2021

Kannan Ravi Group தயாரிப்பாளர் கண்ணன் ரவி வழங்க

 Kannan Ravi Group  தயாரிப்பாளர் கண்ணன் ரவி வழங்க, இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில்  சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம்  "இராவண கோட்டம்" !



இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக,  Netflix உடைய பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில்,  தனது சிறந்த  நடிப்பு திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார். 














தற்போது அவர்  நம்பிக்கை தரும், பல வித்தியாசமான திரைப்படங்களில் அடுததடுத்து நடித்து வருகிறார். இது அவரது திரை நட்சத்திர மதிப்பை பெருமளவில் கூட்டியுள்ளது. அவரது அடுத்த பிரமாண்டமான திரைப்படங்களில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று தான்  இராவண கோட்டம். லாக்டவுன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் சாந்தனு  ராமநாதபுரத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளிலும் விடுப்பு எடுத்துகொள்ளாமல் அவர் நடித்து வர, அவரது தந்தையும் முன்னணி இயக்குநருமான திரு  K  பாக்யராஜ் அவர்கள், சாந்தனு நண்பர்களுடன் இணைந்து, (ஆகஸ்ட் 24, 2021) சாந்தனு பிறந்தநாளில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.  நடிகர் சாந்தனு 'இராவண கோட்டம்' படத்தின்  நடிகர்கள் மற்றும் குழுவினருடன், தனது தந்தை கொண்டு வந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் வருகை இராவண கோட்டம் படத்தின் மொத்த படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. 



இயக்குநர் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கும் 'இராவண கோட்டம்'  படத்தினை Kannan Ravi Group  சார்பில்  தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.



சாந்தனு பாக்யராஜ் நடிப்பில்  "முருங்கைக்காய் சிப்ஸ்" திரைப்படம் வெளியீட்டுக்கு  தயாராகி வருகிறது, மேலும் இயக்குநர் சிம்பு தேவனின் இயக்கத்தில்  'கசட தபற' திரைப்படம் ஆகஸ்ட் 27, 2021  SONYLIV தளத்தில்  வெளியாகிறது.

No comments:

Post a Comment