Featured post

Indian National Cine Academy (INCA) announced as a Pan-India Institution for Indian Cinema, a monumental vision to unite India’s cinematic powerhouses

 *Indian National Cine Academy (INCA) announced as a Pan-India Institution for Indian Cinema, a monumental  vision to unite India’s cinemati...

Monday, 23 August 2021

நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் 'வெப்'..!*

 *நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் 'வெப்'..!*


 *'வெப்' திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு..!*


நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்திற்கு 'வெப்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'வேலன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும்  இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வி.எம். முனிவேலன் அவர்களின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.


4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.  


'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, 'முந்திரி காடு' & 'கண்ணை நம்பாதே' படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.


படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.


இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார். 


சண்டைப்பயிற்சி: ஃபயர் கார்த்திக்

ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய் 

நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா

No comments:

Post a Comment