Featured post

Filmmaker Bala’s directorial* *Arun Vijay starrer “Vanangaan

 *Filmmaker Bala’s directorial*   *Arun Vijay starrer “Vanangaan’ First Schedule Shoot wrapped up* The makers of Director Bala’s upcoming fi...

Monday, 6 September 2021

சென்னை திரும்பிய வெள்ளி வீரன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு

                சென்னை திரும்பிய வெள்ளி வீரன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு
                வேலம்மாள் குழுமமத்தின் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு                                                                          அளிக்கப்பட்டது


சமீபத்தில் நடந்த டோக்கியோ பாராலிம்பிக் -2020 போட்டிகளில் இந்தியாவுக்கான ஆண்கள் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் உயரம் தாண்டுதல் சாம்பியன்


மாரியப்பன் தங்கவேலுவுக்கு வேலம்மாள் நெக்ஸஸ்
குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீ .எம்.வி.எம் வேல்மோகன் அவர்களால் சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மிகப்பெரிய சாதனைக்களத்தில் வெள்ளி வென்று சென்னை திரும்பிய மாரியப்பன் தங்கவேலு அவர்களை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் எம்.வி.எம் வேல்மோகன் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் சந்தித்து சாம்பியனை வாழ்த்தினார்


மேலும் ஸ்ரீ எம் .வி. எம் வேல்மோகன் அவர்கள் மாரிமுத்து அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை மற்றும் மாலை அணிவித்தும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அர்ஜுனா விருது பெற்ற  மாரியப்பன் அவர்களை வேலம்மாள் மாணவர்கள் உற்சாகமாகக் கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தி வரவேற்றனர்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கில் தேசத்தைப் பெருமைப்படுத்தியமைக்காக  மாரியப்பன் தங்கவேலுவை அவர்களுக்கு வேலம்மாள் பள்ளி இத்தகைய சிறப்பான வரவேற்பினை அளித்துப் பாராட்டியது.

No comments:

Post a Comment