Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Monday, 18 October 2021

நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ தமிழ், தெலுங்கு

 நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது




'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இதுவரை சொல்லப்படாத கதைக் களத்தை தொட்டுள்ள இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன், உயர் தொழில்நுட்ப தரத்துடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் வெங்கட் பொயனப்பள்ளி கதையின் மீது முழு நம்பிக்கை வைத்து படத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கியுள்ளார். இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இதுவாகும்.  


சமீபத்தில், இப்படத்தில் நானியின் இரண்டாவது பரிமாணமான வாசுவின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. பெங்காலி பாய் என்ற முதல் பரிமாணத்தைப் போலவே, இதுவும் எல்லா இடங்களில் இருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கான நானியின் இரண்டு தோற்றங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன. 


இந்தப் படத்தின் மீதுள்ள பெரும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஷியாம் சிங்கா ராயை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு டிசம்பர் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளிவரும். நானிக்கு இது மிகப்பெரிய வெளியீடாக இருக்கும். இந்த அறிவிப்பை காதல் ததும்பும் போஸ்டர் ஒன்றின் மூலமாக வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர், நானி மற்றும் சாய் பல்லவிக்கு இடையேயான காதலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. 


நாயகிகளான சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோருக்கு மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் அது படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மேலும், நான் ஈ (தெலுங்கில் ஈகா) போன்ற படங்களின் காரணமாக நானி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்பட்டவர் ஆவார். சில நேரடி தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


திரைப்படம் தற்போது Post-production நிலையில் இருப்பதால், விளம்பர நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவிருப்பதாக  படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வி எஃப் எக்ஸ் காட்சிகள் படத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளன. 


நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் முதல் தயாரிப்பான ஷியாம் சிங்கா ராய் கதையை சத்யதேவ் ஜங்கா எழுதியுள்ளார். மெல்லிசை பாடல்களின் நிபுணர் மிக்கி ஜே மேயர் இசையமைக்க, சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பை கையாள்கிறார்.


தேசிய விருது வென்ற கிருதி மகேஷ் மற்றும் மிகவும் திறமையான யாஷ் மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளனர்.


ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமடம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


நடிப்பு: நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா, அபினவ் கோமடம், ஜிஷு சென் குப்தா, லீலா சாம்சன், மணீஷ் வாத்வா, பருண் சந்தா உள்ளிட்டோர்.


தொழில்நுட்ப குழு:

இயக்குநர்: ராகுல் சங்க்ரித்யன்

தயாரிப்பாளர்: வெங்கட் போயனப்பள்ளி

பேனர்: நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்

மூலக்கதை: சத்யதேவ் ஜங்கா

இசை: மிக்கி ஜே மேயர்

ஒளிப்பதிவு: சனு ஜான் வர்கீஸ்

தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா

நிர்வாக தயாரிப்பாளர்: எஸ் வெங்கட ரத்னம் (வெங்கட்)

படத்தொகுப்பு: நவீன் நூலி

சண்டை: ரவிவர்மா

நடனம்: கிருதி மகேஷ், யாஷ்

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

No comments:

Post a Comment