Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Thursday 28 October 2021

சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெற்றிகரமான மற்றும் அரிதான

 சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெற்றிகரமான மற்றும் அரிதான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் 34 வயது நோயாளிக்கு மறுவாழ்வு

 

* வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

* குறைவான பிஎம்ஐ, சிறு மார்புக் குழி மற்றும் நுரையீரலின் இரு பக்கங்களிலும் பல மார்புக் குழாய் செருகல்கள் உள்ளிட்ட பல இணை நோய்கள் மருத்துவ நிபுணர்களுக்கு சவாலாக விளங்கின

* அறுவை சிகிச்சை ஏழு மணி நேரம் நீடித்தது

வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் டாக்டர் கோவிந்த் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவர்கள் குழு 34 வயது நோயாளிக்கு மிக அரிதான நுரையீரல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது.  இந்த அரிதான மற்றும் சவாலான அறுவை சிகிச்சை ஏழு மணி நேரம் நீடித்தது.  குறைவான பிஎம்ஐ, சிறு மார்புக் குழி மற்றும் நுரையீரலின் இரு பக்கங்களிலும் பல மார்புக் குழாய் செருகல்கள் உள்ளிட்ட பல சவாலான சுகாதாரப் பிரச்சினைகள் நோயாளிக்கு இருந்த போதும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

 



பஞ்சாபைச் சேர்ந்த 34 வயது நோயாளி அரிதான குடும்ப ரீதியான சிறு இடைவெளி நுரையீரல் நோய்க்கான (ஐஎல்டி- தொடர்ந்து வளரும் நுரையீரல் திசுக்களின் வடு) சிகிச்சைகாக சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு வந்தார். இதே குடும்ப மரபு ரீதியான ஐஎல்டி நோய் காரணமாக நோயாளி தனது இரு குடும்ப உறவினர்களை இழந்துள்ளார். மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான அளவை விடவும் பிஎம்ஐ குறைவாக இருந்தது மிகப் பெரிய சவாலாக விளங்கியது.  சராசரி பிஎம்ஐ 18-32 வரை இருந்தால் மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி அடையும். கடந்த இரு ஆண்டுகளாக உயிர் பிழைக்க நோயாளி செயற்கை பிராணவாயு ஆதரவிலும், பல ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் என்ஓடிடிஓ (NOTTO) காத்திருப்பிலும் இருந்தார். மதுரையைச் சேர்ந்தவர் உறுப்பு தானமளிக்க முன்வந்த நிலையில் அவரது காத்திருப்பு முடிவுக்கு வந்தது. 

 

அரிதான அறுவை சிகிச்சை குறித்து வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை இதயம் & நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு, சிடிவிஎஸ், தலைவர் டாக்டர் கோவிந்த் பாலசுப்பிரமணி விளக்குகையில் ‘கடந்த இரு ஆண்டுகளாக செயற்கை பிராணவாயு ஆதரவில் நோயாளி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார்.  தினசரி 12 லிட்டர் செயற்கை பிராணவாயு சுவாசம் காரணமாக அவரால் இதன் துணையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை. பல்வேறு இணை நோய்கள் பாதிப்பு காரணமாக, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கடினமாகவும், சவாலாகவும் இருந்தது.  பொதுவாக நோயாளி வயதுக்கும், உயரத்துக்கும், பிஎம்ஐ அளவு 25 இருக்க வேண்டும்.  மேலும் அவரது மார்புக் குழி சிறிதாக இருந்ததால், நுரையீரலின் சரியான அளவை அடையாளம் காண்பதும் கடினமாக இருந்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிக்குக் குறைந்த மற்றும் அதிக பிஎம்ஐ இருந்தால், மாற்று உடலுறுப்பை உடல் ஏற்றுக் கொள்ளாது. இதன் காரணமாகப் பெரும்பாலும் இவ்வகை அறுவை சிகிச்சைகள் வெற்றி பெறுவதில்லை.  ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சரியான ஊட்டச் சத்து உணவு, இயன்முறை மருத்துவம், மற்றும் அவரது உடல்நிலைக்கு ஏற்ற மருந்துகளும் தரப்பட்டன’ என்றார்.

 

மருத்துவ சாதனை பற்றி வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை மண்டல இயக்குனர் டாக்டர் சஞ்சய் பாண்டே பேசுகையில் ‘தொடங்கப்பட்ட ஒரே ஆண்டுக்குள் வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியதற்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் கோவிந்த் பாலசுப்பிரமணி, டாக்டர் சிந்தூரா கொகாண்டி, தீவிர சிகிச்கை மற்றும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் மனோகர், தொற்று, சமச்சீர் உணவு, செவிலியர் உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவின் பல்துறை அணுகுமுறை இச்சாதனையைப் படைக்க காரணமானது. இவர்களின் ஒருங்கிணைந்த பணி இளம் நோயாளிக்குப் புதிய வாழ்வை அளிக்க உதவியது’ என்றார்.

 

வடபழநி, ஃபோர்டிஸ் மருத்துவமனை

நாட்டில் மிக வேகமாக வளரும் சுகாதாரப் பாதுகாப்பு குழுவான ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் சென்னையின் பரபரப்பான மையப் பகுதியான வடபழநி, ஆர்காடு சாலையில் அமைந்துள்ள இரண்டாவது மருத்துவமனை ஆகும். 250 படுக்கை வசதிகளுடன் நான்காம் நிலை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவனையில் இதயம், இதய அறுவை சிகிச்சை, நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், நீரிழிவு, முடநீக்கவியல், முதுகுத் தண்டுவட இயல், இரைப்பைக் குடலியல், கல்லீரலியல்,  பொது அறுவை சிகிச்சை மற்றும் ஏனைய சிறப்பு சிகிச்சைகளும் உண்டு.

 

மேலும் விவரங்களுக்கு

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர்

ஏவியான் மீடியா, சென்னை

ரோகேஷ் – 8667867754

rokesh.a@fortishealthcare.com

நிரூபா மெய்யழகன் 7810066466

nirupa.maiyalagan@fortishealthcare.com

கிருஷ்ணமூர்த்தி – 9442191717

ஹரிகுமார் - 9940408355

 

அஜய் மகராஜ் +91 9871798573

ajey.maharaj@fortishealthcare.com

தலைவர் – கார்பொரேட் கம்யூனிகேஷன்ஸ்

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment