Featured post

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா

 *புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்* ‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத...

Tuesday, 21 March 2023

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா

 *புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்*


‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து  'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.





கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் 'கார்த்திகேயா 2' . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் 'ஸ்பை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக  நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயா நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாதப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களை தவிர்த்து, மேலும் சில படங்களில் நடிகை ஐஸ்வர்யா மேனனை கதையின் நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக இயங்கி வரும் இவர் தற்போது முன்னணி நட்சத்திர கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால், ஓய்வின்றி ஹைதராபாத் -சென்னை என  பரபரப்பாகியிருக்கிறார். தமிழ் திரையுலகிலிருந்து பான் இந்திய நட்சத்திர நடிகையாக ஐஸ்வர்யா மேனன் உயர்ந்து, புதிய உச்சத்தை தொடுவார் என திரையுலகினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்

 இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட

'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' டீஸர்!

இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' 

குப்பத்து இளைஞர்கள் எல்லாம் பொறுப்பில்லாதவர்களா? இயக்குநர் வி .எம். ரத்தினவேல் கேள்வி!

புகை, குடி காட்சி இல்லாமல் ஒரு படம்:  'தலைக்கவசமும் 4 நண்பர்களும்'

இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்'  படத்தின் டீஸரை இன்று இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.

இயக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல்  ஒரு புதிய படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் 

 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' 

 






இந்தப் படத்தை

டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.


கதாநாயகனாக ஆனந்த்நாக் அவருடைய நண்பர்களாகப் புது முகம் ராஜேஷ், ஶ்ரீஜித்,விக்கிபீமா, ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஸ்வேதா டோரத்தி, ரேணுகா பதுளா, ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஓஏகே சுந்தர், தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், மணிமாறன், செந்தில் குமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.இயக்குனர் ரத்தினவேலும் ஒரு எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.


இப்படத்திற்கு ஒளிப்பதிவு சீனு ஆதித்யா, இசை ராஜ்பிரதாப், படத்தொகுப்பு சேதுரமணன், சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ், பாடல் அருண்பாரதி என ஆர்வமும் திறமையும் உள்ள  தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து கூட்டணி அமைத்துப் பணிபுரிந்துள்ளனர். 


இத்திரைப்படம் பற்றி இயக்குநர் வி.எம்.ரத்னவேல் கூறுகையில்,


"முதலில் நான் பாடம் கற்றுக்கொண்ட  இடத்தைப் பற்றிக் கூற வேண்டும் .சுந்தர் சி சாரிடம் 2008 முதல் 2018 வரை  பத்து ஆண்டுகள் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி இருக்கிறேன்.

அவரது அவ்னி மூவி மேக்கர்ஸ், அவ்னி மூவி மீடியா நிறுவனப் படங்களிலும் ,அவர்கள் தயாரிப்பில் இருந்த தொலைக்காட்சித் தொடர்களிலும் நான் பணியாற்றி இருக்கிறேன். அது எனக்கு மாபெரும் அனுபவமாக இருந்தது.

சினிமா பற்றி நான் கற்றதும் பெற்றதும் அங்கு தான் என்று சொல்வேன்.


இந்தப் படம் கிரவுட் ஃபண்டிங் மூலம் கொரோனாவுக்கு முன்பு தொடங்க ஆசைப்பட்டு 25 பேர் நண்பர்கள் இணைந்தார்கள். இடையில் கொரோனா வந்ததும் அவர்கள் மெல்ல மெல்ல விலகினார்கள்.எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.கடைசியில் அதிலிருந்து எனது உறவினர் சிலரை மட்டும் சேர்த்துக்கொண்டு ஆறு பேருடன் இணைந்து நானும் சேர்ந்து இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளேன்.


இந்தப் படத்தின் கதை என்ன என்றால், சென்னையிலுள்ள ஒரு குப்பத்திற்கு   அனாதைச் சிறுவர்கள் நான்கு பேர் வந்து இணைந்து கொள்கிறார்கள். அவர்கள் அந்த மக்களோடு ஒன்றாக கலக்கிறார்கள். நாலு பேரும் நாலு இடத்தில் வேலை பார்க்கிறார்கள்.

அதில் ஒருவன் முக்கோணக் காதலில் சிக்கிக் கொள்கிறான். அவனை ஒருத்தியும் அவன் இன்னொருத்தியையும் காதலிக்கும் சூழல் நேர்கிறது.


அந்த நான்கு பேரும் நான்கு வேலை பார்த்தாலும் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் தேவைக்குப போக மீதியை அந்தக் குப்பத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவச் செலவிற்கும் மாணவர்களுக்குப் படிப்பு செலவுக்கும் என உதவுகின்றனர் .


அப்படிப்பட்ட அவர்கள் கையில் தலைக்கவசம் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. அதை அவர்கள் எப்படிச் சரியாகப் பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்பதுதான் இந்தக் கதை.


ஹெல்மெட் என்று கூட நாங்கள்  சொல்லாமல் தலைக்கவசம் என்று படத்திற்குப் பெயர் வைத்துள்ளோம். இந்தப் படத்திற்கு தூய தமிழில் பெயர் வைத்துள்ளோம். அது மட்டுமல்ல சென்னைக் குப்பம் என்றாலே அங்கு வாழும்  இளைஞர்கள் பொறுப்பற்றுத் திரிபவர்கள் ,அவர்களின் நடவடிக்கைகள் மோசமாக இருக்கும் என்றுதான் படங்களில்  இதுவரை காட்டி வந்திருக்கிறார்கள்.

குப்பத்து இளைஞர்கள் என்றால் பொறுப்பில்லாதவர்களா?

 நான் இதில்  அவர்களைப் பொறுப்புள்ள இளைஞர்களாகக் காட்டியுள்ளேன். அது மட்டுமல்ல படத்தில் ஒரு ஃப்ரேமில் கூட  குடித்தல் புகைத்தல் காட்சி  இருக்காது. அந்த அளவிற்கு நாங்கள் நாகரிகமாக  இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.


இந்தக் கதை முழுக்க முழுக்க சென்னையில் நடப்பதால் சென்னை உதயம் திரையரங்கின் எதிரே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் தான் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்தது .அது மட்டுமல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையம் ,கே.கே. நகர் என்று சென்னைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். படத்தில் 2 பாடல்கள் ,2 சண்டைக் காட்சிகள் உண்டு. இதில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள், பிரபலங்களிடம் பணியாற்றியவர்கள் அல்லது சில படங்களில் பணியாற்றியவர்கள் என்று தகுதியுடன்  இருப்பவர்கள்.


படம் சொல்லும் கருத்து என்ன என்றால்,நமக்கு கிடைக்கும் வாய்ப்பை எந்தச் சூழ்நிலையிலும் சமாளித்து நமக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டால் நாம் நினைத்ததை அடையலாம் என்று இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தூண்டுதல் அமையும்படி   கமர்ஷியல் கலந்து சொல்லியிருக்கிறேன்.


நாங்கள் பட்ஜெட் படம் என்றாலும் திட்டமிட்டு  நியாயமான செலவில் தரமான விளைவை திரையில் காணும்படி எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தை நாங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் கையில் ஒப்படைக்கிறோம் .இதில் எங்களது முயற்சியும் உழைப்பும் நம்பிக்கையும் இருப்பதால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

" என்கிறார் இயக்குநர் வி. எம். ரத்தினவேல். இத்திரைப்படத்தை 9V ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது .


'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' படத்தின் டீஸரை இயக்குநர் கே. பாக்யராஜ் இன்று வெளியிட்டார் . டீஸரைப் பார்த்து ரசித்துப் பாராட்டிய அவர் , படக்குழுவினரை வாழ்த்தினார்.

Apsara Reddy's Humanitarian Awards-2023 , Nidhi Razdan, one of India's best journalists, said that

 Apsara Reddy's Humanitarian Awards-2023 , Nidhi Razdan, one of India's best journalists, said that children should be given the confidence that they don't have to hesitate to express any problem to their Parents


Apsara Reddy's Humanitarian function was grandly held at the HYATT REGENCY, Teynampet, Chennai.

The awards ceremony, now in its third year, recognized 13 different categories and one Lifetime Achievement Award.

This award ceremony is held to highlight those who have contributed to the education and progress of children.

Former Health Minister Vijayabaskar presented the award for education to Poovizhi. Gargi film director Gautham Ramachandran was presented with the award for cinematography. Dr. Srimathikesan was awarded in the science category, Malini Jeevaratnam for gender equality and Sri Vatsan Sankaran was awarded for development. 




Likewise, Lalitha Ramanujan in the confidence building category, Vinayak Vijayakumar in the medical category and Cyril Alexander in the best activist category were awarded.

 Dr. Sowmiya Anbumani given Award to Dr. Arul Raj for his excellent work in recovering children from drug addiction, Madhumita Gomathinayagam in the social activist category, Sharmila Arunagiri who excelled in providing rehabilitation, Dr. Ilanjezhiyan who excelled in providing education to rural students and Prof. Mohammad Abdul Kader in the literary category received awards.

All India Institute of Medical Sciences, Madurai, Dr. Nagarajan, who passed away, was honored with the Lifetime Achievement Award. It was received by his son-in-law and IAS officer Radhakrishnan Jaganathan along with his family.

Renowned journalist Nidhi Razdan, Bollywood actress Mrunal Thakur, Former Minister Vijayabaskar, IAS officer Radhakrishnan, Soumya Anbumani and many other celebrities attended the program as special guests.

Earlier, Mrunal Thakur who spoke on the program, said that children are our future and it is our duty to trust them and protect them if they report any problems.Noting that not only girls but also boys are affected, she said that children should be made to understand that they don't have to hesitate to reveal anything, said award-winning journalist Nidhi Razdan. 

When Soumya Anbumani addressed, She said that despite climate change and war, women and children are the most vulnerable and said that her daughter had recently given birth to a baby girl and that she was thinking of protecting and raising that child through this program.

Performances by The Bala Boys from the US were a super hit as top industrialists women walked the fashion ramp in support of children’s rights. 

Apsara Reddy, said, “Society needs to do more to protect children. Each one of us have a responsibility towards children. We must remember that scars that are not visible are the hardest to heal.”

Dr C Vijayabaskar said, “Sexual abuse is not gender specific. Boys also go through sexual crimes when young. We as parents and society must protect children and help them live secure lives.”

Actors Sham, playback singers Naresh Iyer, Vijay Jesudas, music director AR Rahman's daughter Khadija Rahman, legendary actor Gemini Ganesan's daughter and Dr. Kamala Selvaraj, former minister MC Sampath, North Chennai Joint Commissioner of Police Ramya Bharati, among others, were present at the award ceremony. Celebrities were the special guests.

அப்சரா ரெட்டியின் ஹூமானிடேரியன் விருதுகள் -2023 வழங்கும் விழாவில்

 அப்சரா ரெட்டியின் ஹூமானிடேரியன் விருதுகள் -2023 வழங்கும் விழாவில், இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான நிதி ரஸ்தான், குழந்தைகள் பெற்றோரிடம் எந்த பிரச்சனையையும் வெளிப்படுத்த தயங்க வேண்டியதில்லை என்கிற நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின்  மனிதாபிமான விருதுகள்  ( ஹூமானிடேரியன் அவார்ட்ஸ் ) விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ( HYATT REGENCY ) நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களின் உரிமைக்காகவும், பாதுகாப்பான வாழ்விற்காகவும் சேவை ஆற்றி வரும் நபர்களுக்கு,  13 பிரிவுகளிலும், ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.




கல்வி மேம்பாட்டிற்கான  விருதை பூவிழி என்பருக்கு முன்னாள் சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.   கார்கி திரைப்பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனுக்கு சினிமாவுக்கான விருது வழங்கப்பட்டது. முனைவர்  ஶ்ரீமதிகேசனுக்கு அறிவியல் பிரிவிலும்,  மாலினி ஜீவரத்தினம்  என்பவருக்கு பாலின சமத்துவத்துக்கும்,  ஶ்ரீ வத்சன் சங்கரனுக்கு மேபாட்டிற்கான விருதும் வழங்கப்பட்டது.அதேபோல,  நம்பிக்கையை மேம்படுத்துதல் பிரிவில் லலிதா ராமானுஜன், மருத்துவத்துறை பிரிவில் விநாயக் விஜயகுமார், சிறந்த செயற்பாட்டாளர் பிரிவில் சிரில் அலெக்சாண்டர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 
 
குழந்தைகளை போதை பழக்கத்தில் இருந்து மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர் அருள் ராஜுக்கு சௌமியா அன்புமணி விருது  வழங்கினார், சமூக செயற்பாட்டாளர் பிரிவில் மதுமிதா கோமதிநாயகம், மறுவாழ்வு அளிப்பதில் சிறந்து விளங்கிய சர்மிளா அருணகிரி, கிராமப்புற மாணவர்களின் கல்வி வழங்குவதில் சிறந்து விளங்கிய டாக்டர் இளஞ்செழியன், இலக்கியப் பிரிவில் பேராசிரியர் முகமத் அப்துல் காதர் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்.

ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், மதுரையில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் நாகராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இதனை அவரின் மருமகனும் ஐ ஏ எஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் ஜெகநாதன் குடும்பத்தினருடன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட,  NDTV யில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த  புகழ் பெற்ற பத்திரிகையாளர் நிதி ரஸ்தான், குழந்தைகள் பெற்றோரிடம் எந்த பிரச்சனையையும் வெளிப்படுத்த தயங்க வேண்டியதில்லை என்கிற நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றார். 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் நடிகை மிர்ணாளி தாகூர் ,குழந்தைகள் நம் எதிர்காலங்கள் என்றும்  குழந்தைகள் ஏதாவது பிரச்சினைகளை  தெரிவித்தால் அவர்களை நம்பி பாதுகாப்பு அளிப்பது நமது கடமை என்றார்.  ஒரு நடிகை என்கிற முறையில் குரளற்றவர்களின் குரலாக இயங்க சிறு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி எனவும், குழந்தைகள் நலனுக்கு பாடுபட்ட சூப்பர் ஹீரோக்களுக்கு இது போன்ற விருதுகள் வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்றும் அவர் தெரிவுத்தார்.

பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றும் அவர்களின் பாதுகாப்பான வாழ்விற்கு பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு பங்கு உண்டு என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சௌமியா அன்புமணி உரையாற்றும் போது,காலநிலை மாற்றம் என்றாலும், போர் என்றாலும் பாதிக்கபடகூடியவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்ததோடு, தன் மகளுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி மூலம் அக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான அப்சரா ரெட்டி குறிப்பிடும்போது,  குழந்தைகள் பாதுகாப்பில் இந்த சமூகம் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டும் என்றும், அது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறினார்.

இந்த விருது விழாவின்போது நடைபெற்ற இசைக்கச்சேரி மற்றும் ஃபேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த விருது விழாவில் நடிகர்கள் ஷாம், பின்னணி பாடகர்கள் நரேஷ் ஐயர், விஜய் ஜேசுதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் மகளும் மருத்துவருமான கமலா செல்வராஜ், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், வட சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி,  உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக லந்து கொண்டனர்.

Monday, 20 March 2023

அக நக முகநகையே வந்தியத்தேவன் , குந்தவையின்

 *"அக நக முகநகையே.."*


*வந்தியத்தேவன் , குந்தவையின்* *அழகான காதல் பாடல்* 

*வெளியானது*


லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் "பொன்னியின் செல்வன் - 2" திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.







பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர் 

மணி ரத்னத்தின் இயக்கத்தில்

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. 

“பொன்னியின் செல்வன் - 1”  கடந்த 

செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. 


இதன் அடுத்த கட்டமாக படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில், 

சக்திஶ்ரீகோபாலன் பாடிய..

வந்தியத்தேவன் (கார்த்தி), குந்தவை (திரிஷா) இவர்கள் இடம் பெறும் காதல் பாடலாக "அக நக முகநகையே" என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

ரவி வர்மன் ஒளிப்பதிவையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் மற்றும் பல நட்சத்திர தொழில்நுட்ப வல்லுநர்கள் 

மணி ரத்னத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். 


- ஜான்சன்

நடிகர் கார்த்தி - திரிஷா டிவிட்டரில் பதிலுக்கு பதில் கேள்வி.. சுவாரஸ்யம்

 நடிகர் கார்த்தி - திரிஷா டிவிட்டரில் பதிலுக்கு பதில் கேள்வி.. சுவாரஸ்யம்.. 


*Actor Karthi & Actress Trisha beautify the arrival of the First Single ‘Aga Naga’ from ‘Ponniyin Selvan 2’ with cute conversations!* 


The diehard fans of Mani Ratnam’s Ponniyin Selvan in cyberspace were endowed with a graceful scenario of a beautiful exchange of conversations between actor Karthi and actress Trisha as the characters of Vanthiyathevan and Kundavai. 


The conversations between the lead actors on their micro-blogging pages instantly stole the spotlight, keeping everyone curious and excited about the launch of the first single ‘Aga Naga’, from Ponniyin Selvan 2,  which will be out at 6 PM this evening. The melodious song is composed by AR Rahman, crooned by  Shakthisree Gopalan, and written by Ilango Krishnan. 


The transcript of their conversations is as follows: 


*Karthi - இளையபிராட்டி… hi*


*Karthi - என்ன பதிலே இல்லை*


*Trisha - என்ன வாணர்குல இளவரசே?*


*Karthi - தங்கள் தரிசனம் கிடைக்குமா ?*


*Trisha - ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்*


*Karthi - கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?*


*Trisha - வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ?*


*Karthi - ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….*


*Trisha - வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்*

Sunday, 19 March 2023

பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா!*

 *'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா!*


ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் 'பத்து தல' திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (18.03.2023) நடைபெற்றது. 






























நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.  மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, "'பத்து துல' படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக 'முன்பே வா என் அன்பே வா' பாடலை குறிப்பிடுவேன். இப்பொழுது வரைக்கும் பாடல் வெளியாகி பல வருடங்கள் கடந்தும்  அது பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் அந்த பாடலுக்கு இசையமைத்துவிட்டு, இது மிகவும் சோகமாக இருக்கிறது என்று இயக்குநரிடம் சொன்னேன். ஆனால், அது நிச்சயம் வெற்றியடையும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னார். அப்படியே நடந்தது. அதை சரியாக கணித்து அவர் என்னிடம் சொன்னார். அவருடைய பொறுமை,  இசைமேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என இது எல்லாமும் நான் இந்த படம் ஒத்துக் கொள்ள காரணங்கள். படத்தின் அனைத்து பாடல்களும் மாஸாக இருக்கும். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'அக்கரையில..' பாடல் சிம்பு பாட வேண்டியது. ஆனால் அவர் அந்த சமயத்தில் தாய்லாந்துக்கு சென்று விட்டதால் இந்த பாடலை நான் பாடினேன். டி.ஆர். சார் இங்கு இருக்கிறார். அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 'சேவ் லைட்மேன் ஃபண்ட்' என லைட்மேன்களுக்காக இணையதளம் ஒன்று ஆரம்பித்துள்ளோம். படத்திற்கு ஒளிபாய்ச்சுவது அவர்கள்தான். அவர்களுக்கு சரியான இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருக்கிறது. இந்த இணையதளத்தை சிம்பு லான்ச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்' என ரஹ்மான் வேண்டுகோளுக்கு இணங்க சிம்பு இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். 


அடுத்து மேடை ஏறியவர் இயக்குநர், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட டி. ராஜேந்திரன். அவர் பேசியதாவது, " இப்படி மேடை ஏறி உங்கள் அனைவரையும் நான் சந்திப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை. உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி வரவில்லை. நான் அமெரிக்கா சென்று என் உடல் ஆரோக்கியத்திற்காக சிகிச்சை எடுத்து வந்த பிறகு கூட்டம் இருக்கும் இடங்களுக்கு பெரிதாக நான் செல்வதில்லை. ஆனால் இங்கு இருப்பதும் திரளான கூட்டம். இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என்று என் மகனுக்கு ஒரு நாட்டம். நான் வரவில்லை என்றால் என் மகனுக்கு வந்து விடும்  வாட்டம். என்னை பார்த்ததும் எஸ் டி ஆர் ரசிகர்களுக்கு ஆனந்த நீரோட்டம். அதற்கு காரணம் இந்த 'பத்து தல' என்ற தேரோட்டம். என் மகனும் என்னை போல் தமிழில் பேசட்டும், இறைவன் அருளால் பல காலம் வாழட்டும். இப்படி நான் பேச ஆரம்பித்தால் விடியும் வரை பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் அதிகம் நான் பேசக்கூடாது என்று என் மனைவி உஷா அன்பு கட்டளை விதித்துள்ளார். சிம்பு என்னை மேலே ஏறக்கூடாது என்று சொல்வார். அப்படியே ஏறினாலும் அவரது ரசிகர்களை நான் திருப்தி படுத்தாமல் கீழே வரக்கூடாது என்று சொல்வார். கலைஞனாக அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வார். அமெரிக்கா போய் விட்டு நான் இங்கு வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகனின் அன்பு. அந்த அன்புக்காகவே இந்த இசை  வெளியீட்டு விழாவுக்கு வந்தேன்' என படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


அடுத்து இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, "நான் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த படத்தின் வாய்ப்பைக் கொடுத்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். ஆனால், சூழ்நிலை காரணமாக இந்த படத்தை கைவிட வேண்டிய நிலையில் இருந்தோம்.  கௌதம் கார்த்திக் உடைய போர்ஷன் அனைத்தையும் முடித்து விட்டோம். சிம்பு அடுத்த ஷெட்யூலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் நியாயமான காரணங்களால் படத்தை கைவிட வேண்டிய நிலையில் யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தில் இருந்தோம். ஏற்கனவே என்னுடைய இரண்டு படங்கள் கைவிடப்பட்டு விட்டது. அதேபோலவே இந்த படமும் கைவிட்டால் எனக்கும் மிகப்பெரிய இழப்புதான். சினிமாவில் அதிகம் சென்டிமென்ட் பார்ப்பார்கள். பிறகு ஞானவேல் ராஜாவிடம் நான் பேசினேன். ஒரு முடிவை எடுத்தால் அதை மாற்றாதவர் ஞானவேல் ராஜா. ஆனால் நான் பேசிய  பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் மனதை மாற்றியது எது என தெரியவில்லை. இது அனைத்தும் கடவுளின் அருள்தான். நேற்று கூட டிரைய்லரை முடித்து விட்டு ரஹ்மான் சாரிடம் இசை கேட்டேன். அவர் செய்துவிடலாம் என பாசிட்டிவாக பேசி செய்து கொடுத்திருக்கிறார். எஸ் டி ஆர்- ஐ பற்றி பேச வேண்டும் என்றால் அவருடைய நண்பராக நான் சொல்கிறேன். எனக்கும் அவருக்கும் 20 வருட பழக்கம். அவருடைய 'தம்' படத்திற்கு பிறகு நான் படம் இயக்க வேண்டியது. அது தள்ளி போய் இப்போது தான் நடந்திருக்கிறது. படப்பிடிப்பில் மிகவும் தயாராக இருப்பார். வசனங்களை முந்தின நாள் இரவே வாங்கி படித்துவிட்டு ஸ்பாட்டுக்கு வருவார். என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த விஷயம்தான் இந்தப் படத்தை நான் நினைத்ததுபோல எடுக்க வைத்தது. கெளதம் கார்த்திக்கை நான் நிறைய படுத்தி இருக்கிறேன். ஆனாலும் அவ்வளவு பொறுமையாக இருப்பார். ரஹ்மான் சார் பற்றி நான் பேச வேண்டும் என்றால் நிறைய கதைகள் இருக்கிறது. அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் நான் மாறி இருக்கிறேன். நன்றி சார்".


தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, " எனக்கும் சிம்புவுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அவரிடத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அவருக்கு இணையான எதிரி அவரை தவிர வேறு யாருமில்லை என்று நினைக்கும் பாசிட்டிவான எண்ணம் தான். நான் சிம்புவை முதல்முறை சந்தித்தபோது எத்தனை எளிமையாக இருந்தாரோ இத்தனை வருடங்கள் கழித்தும் அதேபோலத்தான் இருக்கிறார். அவருடைய நல்ல குணத்திற்காகவே இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை கடந்து இப்பொழுது நாங்கள் நிற்கிறோம். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு வேறொரு பெரிய இடம் காத்திருக்கிறது. அடுத்து கௌதம் கார்த்திக்! என்னுடைய மகனாகவே அவரைப் பார்க்கிறேன். என்னுடைய அடுத்த சினிமா வாரிசு அவர்தான். அவருடைய கடின உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் இன்னும் ஒன்று இரண்டு வருடங்களில் தவிர்க்க முடியாத ஒரு கதாநாயகனாக நிச்சயம் வருவார். அடுத்து கிருஷ்ணா! என்னுடைய சிறந்த நண்பர். இடையில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட என்னிடம் கதை சொல்கிறேன், படம் இயக்குகிறேன் என்று வாய்ப்பு கேட்டதே இல்லை. நானே தான் அவரிடம் எனக்கு படம் இயக்க வேண்டும் என்று கேட்டேன். இந்த படம் ஜெயித்து, தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாறுவதற்கான இடம் அவருக்கு இருக்கிறது என்பது எனக்கு பெருமையான ஒரு விஷயம். படத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி".


படத்தின் கதாநாயகி ப்ரியா பவானி ஷங்கர் பேசியதாவது, " விழா பிரம்மாண்டமாக நடக்கும் என்று தெரியும். ஆனால், இத்தனை பிரம்மாண்டமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இயக்குநர் கிருஷ்ணா மிகவும் பொறுமையான உறுதியான மனிதர். சிலம்பரசனில் இருந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை எல்லாரையும் ஒன்று போலவே மதித்து மரியாதையாக நடத்தினார். அதற்கு எப்பொழுதுமே அவருக்கு நன்றி சொல்கிறேன். அடுத்து கௌதம் மேனன் சார். அவர் நடித்து வெளியாகும் படங்களை பார்க்கும் பொழுது பயமாக இருக்கும். அவர் இயக்கத்தை கைவிட்டு விடுவாரோ என்று. கெளதம் சார் தயவு செய்து நிறைய படங்களை எங்களுக்காக இயக்குங்கள். மனுஷ்யபுத்திரன் சார் கவிதைகளை நிறைய படித்திருக்கிறேன். அவரது முதல் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் மிகப் பெரிய ரஹ்மான் சார் ரசிகை. கடவுள் எங்களுக்காகவே உங்களை ஸ்பெஷலாக படைத்து அனுப்பி இருக்கிறார் என்று தான் சொல்வேன். அப்படி இருக்கும் பொழுது உங்கள் இசையில் என்னுடைய முகம் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அடுத்து கௌதம் கார்த்திக்! என்னுடைய தோழியின் கணவர். உங்கள் இரண்டு பேருக்குமே என்னுடைய அன்பு. அடுத்து சிலம்பரசன் சார், அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு அங்கு கிடைக்கவில்லை. இத்தனை பேருடைய அன்பு அவருக்கு கிடைத்திருக்கிறது என்பது அவருடைய ஆசீர்வாதம் என்றுதான் சொல்வேன். இந்த படப்பிடிப்பை எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றி தந்த அனைவருக்கும் நன்றி".


நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, "அனைவருக்கும் வணக்கம்! 'பத்து தல' என் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு படம். படத்தில் உழைத்த அனைவருக்காகவும் நிச்சயம் படம் வெற்றியடைய வேண்டும். என்னை நம்பி மிகப்பெரிய ஒரு கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா சாருக்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்‌ஷன் காட்சிகள்தான். ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன் சார் அதை அற்புதமாக செய்திருக்கிறார். அஜய், சாண்டி, பிருந்தா மாஸ்டருடன் வேலை பார்த்தது எனக்கு 'கடல்' படத்தின் நினைவுகளைக் கொண்டு வந்தது. கெளதம் மேனன் சாருடன் இந்தப் படத்தில் எனக்கு காட்சிகள் இல்லாதது வருத்தம்தான். அறிமுக நடிகராக எனக்கு முதல் படத்தில் ரஹ்மான் சாருடைய இசை மிகப்பெரிய கனவாக இருந்தது. இப்பொழுது 10 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறேன். படத்தின் பாடல்களை கேட்கும் பொழுது சில இடங்களில்  கண் கலங்கினேன். அடுத்து எஸ் டி ஆர் அண்ணன்! முதன்முதலில் அவரை 2013 இல் லண்டனில் தான் சந்தித்தேன். என்னை அவருக்கு தெரியாது என்று நினைத்தேன். ஆனால் அவரே வந்து என்னிடம் பேசி லண்டனை முழுவதும் சுற்றிக்காட்டி பாதுகாப்பாக கூட்டிச் சென்றார்.  அப்போதே அவர் மீது மிகப்பெரிய மரியாதை வந்தது. அப்பொழுது அவர் என்னிடம் ஆன்மீக பயணம் குறித்து சொல்லியிருந்தார். அந்த சமயத்தில் எனக்கு அது சரியாக புரியவில்லை. இப்பொழுது அதை பின்பற்றி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகி வந்திருக்கும் பொழுது அது மிகப்பெரிய பிரமிப்பை தருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அவர் வந்து நின்றாலே அத்தனை தலையும் அவரை தான் திரும்பி பார்க்கும். கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டால் அவரது தலையில் இருந்து கால் வரை அத்தனையும் நடிக்கும். அவர் போல ஒரு நடிகராக மாற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஏ.ஜி.ஆர்ரின் பவரை நீங்கள் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வந்து பார்த்து ரசியுங்கள்".


நடிகர் சிலம்பரசன் பேசியதாவது, " அனைவருக்கும் வணக்கம். நான் இங்கு வரும்போது எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான். அது நான் அழக்கூடாது என்பதுதான். நான் மிகவும் எமோஷனலான ஒரு நபர். அப்படி இருக்கும்பொழுது ஏன் அழக்கூடாது என்று நினைத்தேன் என்றால் உங்களுக்காக தான். இவ்வளவு நாள் எல்லா கஷ்டத்தையும் பார்த்தாகி விட்டது. அந்த கஷ்டத்தை எல்லாம் எனக்காக பார்த்த நீங்கள் இனிமேல் சந்தோஷமாக இருக்க வேண்டும். அந்த சோகம் எல்லாம் முடிந்து விட்டது. இந்த நேரு ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு நிறைய முறை வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் மற்றவர்களுக்காக கூடிய கூட்டத்தை பார்த்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக என்னை நேசிக்கும் ரசிகர்களை நேரில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு நான்  மனதளவில் மிகவும் அமைதியாக இருந்தேன். சினிமா எல்லாம் வேண்டாம் ஆன்மீகம் பக்கம் போகலாம் என்று வீட்டிற்குள்ளேயே இருந்தேன். அப்பொழுதுதான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்தார். கன்னட படமான 'மஃப்டி' படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். இந்த படத்தை அங்கு சூப்பர் ஸ்டார் சிவராஜ் அண்ணா நடித்திருப்பார். அவரை போல் எப்படி நடிக்க முடியும் என்று யோசித்தேன். பிறகு இந்த படம் நான் ஒத்துக் கொள்ள  முக்கிய காரணம் கௌதம்தான். இங்கு தட்டிக் கொடுப்பதற்கு தான் ஆள் இல்லை, தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு தட்டி கொடுக்க இத்தனை நாள் வரை இருந்தது ரசிகர்கள் மட்டும்தான். கௌதம் கார்த்திக் ஒரு திறமையான நல்ல மனிதர். எனக்கு இந்த படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அவருடைய உழைப்புக்கு நிச்சயம் மிகப்பெரிய இடத்தை இது வாங்கி கொடுக்கும். இந்த படம் நான் ஒத்துக்கொண்ட பொழுது மிகவும் குண்டாக இருந்தேன். அது அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்தது. பின்புதான் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் நடந்தது. 'மாநாடு' படம் வெளியானது. பிறகு மீண்டும் 'பத்துதல' படத்துக்கு செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது நான் நினைத்திருந்தால் தயாரிப்பாளரை கூப்பிட்டு பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் இப்பொழுது வேறு லைனில் போய்க்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் அப்பொழுதும் என் நினைவுக்கு வந்தது கௌதம் தான். அவருக்காக இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் உள்ளே வந்தேன். அப்பொழுது இயக்குநர் என்னிடம் மீண்டும் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று சொன்னார். நான் அதை செய்து விடுவேன்! ஆனால் பார்ப்பவர்கள் சிம்பு மீண்டும் உடல் எடை அதிகரித்து ஷூட்டிங் வராமல் போய்விடுவான் என்று எழுதி விடுவார்கள், என்ன செய்யலாம் என்று யோசித்தேன். போட்டோ ஷூட் எல்லாம் எடுத்து பார்த்த பொழுது அது செட்டாகவில்லை. பின்பு 108 கிலோ உடல் எடை அதிகரித்து இப்பொழுது குறைத்தேன். 'மீண்டும் உன்னை ரசிகர்கள் திரையில் எதிர்பார்த்து இருக்கும்பொழுது, ரசிகர்களுக்காக மீண்டும் அதிகரித்த உடல் எடையை உன்னால் குறைக்க முடியாதா' என்று எனக்கு தோன்றியது. பிறகு உடல் எடை அதிகரிக்க கிருஷ்ணாவிடம் சம்மதம் தெரிவித்தேன். என்னுடைய வயதுக்கு இது மெச்சூர்டான ஒரு கதாபாத்திரம்தான். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை கொடுத்திருக்கிறேன். நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்து 'சூர்யா 42', 'தங்கலான்' ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். என்னுடைய ரசிகர்களை பார்ப்பதற்கு இவ்வளவு பெரிய விழாவை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்திலேயும் எனக்கு துணை கிடையாது. நிஜ வாழ்க்கையிலும் துணை இல்லை. அது பிரச்சனை இல்லை! எனக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. 'தம்' படத்திற்கு பிறகு கிருஷ்ணா என்னுடன் ஒரு படம் இயக்க வேண்டி இருந்தது. அப்பொழுது அது நடக்கவில்லை. அப்பொழுது கிடைத்திருந்தாலும் அவருக்கு ஒத்ததல தான் கிடைத்திருக்கும். இப்பொழுது, 'பத்து தல' கிடைத்து இருக்கிறது. அடுத்தது என்னுடைய காட்ஃபாதர் ரஹ்மான் சார். அவர் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் நிச்சயம் நடந்து கொள்வேன். இதுவரை 50 படங்கள் நடித்து முடித்து இருக்கிறேன். ஆனால் எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கும் வராத என் அம்மா அப்பா இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய ரசிகர்கள் தான். அதற்கான ஏற்பாடுகளை அத்தனை சிரத்தை எடுத்து செய்து  கொடுத்தவர்களுக்கு நன்றி. முன்பெல்லாம் அதிரடியாக எனர்ஜியாக பேசுவேன். அது இப்பொழுது என்னுடைய பேச்சில் இல்லை அமைதியாக பேசுகிறேன் என்று பலரும் கேட்கிறார்கள். அது உண்மைதான்! அதற்கு காரணம் என்னவென்றால்,  அந்த நேரத்தில் எனக்கு தட்டிக் கொடுப்பதற்கு யாரும் இல்லை. என்னுடைய ரசிகர்களை தவிர வேறு யாரும் அப்பொழுது இல்லை, எனக்கு நானே துணை நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனால்தான் அப்படி கத்தி பேசினேன். அது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஊக்கம் தான். அதனால்தான் 39 கிலோ என்னால் குறைக்க முடிந்தது.  பிறகு 'மாநாடு' படம் வெளியாகி வெற்றியடைந்து, 'வெந்து தணிந்தது காடு' வந்து, இப்பொழுது 'பத்து தல' படத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமாக ரசிகர்கள் முன்னிலையில் என்னை நிறுத்தி இருக்கும்பொழுது எப்படி நான் கத்த முடியும் பணிந்து தான் பேச முடியும். என்னுடைய ரசிகர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக தான் படத்தை முடித்துவிட்டு மூன்று மாதம் சென்று மறுபடியும் உடல் எடை குறைத்து இப்பொழுது வந்து நிற்கிறேன். இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை செயல் மட்டும் தான். ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்பது எனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே தான். ஒவ்வொரு நாளும் நம்மை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வளவு நாட்கள் ரசிகர்கள் எனக்காக கஷ்டப்பட்டது போதும். கூலாக ஏசி அறையில் உட்கார்ந்து  கொண்டு இனிமேல் என்னை ரசியுங்கள். நான் திரும்ப வந்துவிட்டேன். வேற மாதிரி வந்திருக்கிறேன். விடவே மாட்டேன். நம் தமிழ் சினிமாவை உலக அளவில் பெருமை பட வைக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அது எனக்கும் நிச்சயம் உண்டு. உங்களுடைய தனித்துவத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் நீங்களாகவே இருங்கள். இதுதான் என் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது" என்று கூறிய சிம்பு மேடையில் 'லூசுப்பெண்ணே' பாடலைப் பாடி நடனம் ஆடினார். 


பின்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டோடு விழா நிறைவடைந்தது.

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா

 ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !


ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது


தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது "செங்களம்" இணையத் தொடர். Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.







இந்நிகழ்வினில்..


ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது...

எஸ் ஆர் பிரபாகரன் உடன் ஒரு மிகப்பெரிய பயணம், செங்களம். விருதுநகரில் நடக்கும் ஒரு கதை. தமிழில் நீங்கள் பார்க்காத பொலிடிகல் கதை. கண்டிப்பாக ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். அயலிக்கு நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது அதே போல் செங்கலமும் உங்களுக்குப் பிடிக்கும். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள்


ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன்  பேசியதாவது...

அயலிக்கு நீங்கள் தந்த ஆதரவு பெரிது. அது வேறு உலகம் இது வேறொரு உலகம். இதுவும் உங்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும். இத்தொடரை மிக உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ள குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முன் இப்படைப்பைக் கொண்டு வரவுள்ளோம். பார்த்து ஆதரவளியுங்கள்


இசையமைப்பாளர் தரண் பேசியதாவது...

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் என் நண்பர், அவர் தான் என்னை இப்படைப்பிற்குள் கொண்டு வந்தார். மிகச்சிறந்த ஒரு படைப்பாக இது இருக்கும். இயக்குநர் என்னிடம் மிகச் சிறப்பான இசையை வாங்கியுள்ளார். நடிகர்கள் அனைவருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன்  பேசியதாவது...

என்னுடைய முதல் வெப் சீரிஸ் பிரபாகரன் சாருடன் என்னுடைய முதல் படம், அமீர் சாரின் ரசிகன் அவர் என் விஷுவல் பார்த்துப் பாராட்டுவது மகிழ்ச்சி. செங்களம் ஒரு நல்ல படைப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.


எடிட்டர் டான் பாஸ்கோ  பேசியதாவது...

எஸ் ஆர் பிரபாகரன் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தக்கதையைச் சொன்னார். அப்போது இதை இரண்டு பாகங்களாகப் படமாக எடுக்க நினைத்தோம், மிக மிக கனமான கதை. மாபெரும் வெற்றிபெறக்கூடிய கதை. எல்லோருக்கும் நல்ல பெயர் பெற்றுத்தரும் எனும் நம்பிக்கை உள்ளது. நன்றி.


நடிகர் டேனியல்  பேசியதாவது...

சென்னைத் தமிழ் பேசுகிறேன் என்று எனக்கு, கிராமத்துக் கதைகளில் வாய்ப்பே தருவதில்லை. ஆனால் இப்படைப்பின் இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என்று நம்புகிறேன். செங்களம் தமிழ்த் திரையில் மிகச்சிறந்த படைப்பாக இருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகர் பிரேம் பேசியதாவது...

செங்களம் மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக இருக்கும். அனைத்து நடிகர்களும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். எஸ் ஆர் பிரபாகரனின் திரைக்கதை வசனம் அட்டகாசமாக இருந்தது. அவர் நினைத்ததை உருவாக்கியுள்ளோம். விரைவில் திரையில் காண நானும் ஆவலோடு உள்ளேன் நன்றி. 


நடிகை ஷாலி  பேசியதாவது...

நான் ஓடிடியில் முதல் முறையாக நடிக்கும் படைப்பு. இதில் கதை தான் நாயகன். இப்படைப்பில் வாய்ப்பளித்த இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சார் மற்றும் படக்குழுவிற்கு, ZEE5 நிறுவனத்திற்கு நன்றி. படைப்பைப் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி. 


நடிகர் கண்ணன்  பேசியதாவது...

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் நீண்ட கால நண்பர். அவருடன் இப்போது நடிகராக இணைவேன் நினைக்கவில்லை. நான் ஒரு ஒளிப்பதிவாளர். இப்போது நடிகராக மாறியுள்ளேன் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகை விஜி சந்திரசேகர்  பேசியதாவது...

ZEE5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் அத்தனை சிறப்பாக உள்ளது. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் மிகச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். படக்குழுவினர் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் நல்லதொரு கதாப்பத்திரம் செய்துள்ளேன். பார்த்து ஆதரவளியுங்கள். 


நடிகை வாணி போஜன்  பேசியதாவது...

ZEE5 லிருந்து எந்தக் கதை வந்தாலும் நான் ஒப்புக்கொள்வேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை மட்டுமே தருகிறார்கள். ZEE5  கௌஷிக் தான் முதலில் இந்தக்கதாபாத்திரம் பற்றிச் சொன்னார். இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன், எனக்குப் பிடித்திருந்தது ஆனால் இடையில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் செய்யவில்லை என்றேன். ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவளித்து என்னை இந்த கதாபாத்திரம் செய்ய வைத்துள்ளார்கள். எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும் போது நான் ஒரு நல்ல படைப்பில் பங்கேற்றிருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சாருக்கு நன்றி. செங்களம் படைப்பிற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன்  பேசியதாவது...

அமீர் சாரை இரண்டு நாளுக்கு முன்பு தான் அழைத்தேன் அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன். கௌஷிக் சாரிடம் இந்தக் கதையைச் சொன்ன போது வெப் சீரிஸாக பண்ணலாம் என்றனர். எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள், ZEE5 ஆல் தான் இந்தப்படைப்பு உருவானது அவர்களுக்கு என் நன்றிகள். இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். கலையரசன் எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக்கூடியவர் இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். என் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப்பெரும் பலம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளனர். விரைவில் உங்களுக்குத் திரையிடவுள்ளோம். பார்த்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி. 


இயக்குநர் அமீர்  பேசியதாவது...

இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிரெய்லர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே,  அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரெய்லரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ZEE5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப்படைப்பாக அமையும். அனைவருக்கும் நன்றி.


ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது


நடிகர்கள் :

நடிப்பு: வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி பைரவி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன்.


தொழில் நுட்ப குழு 

இயக்கம் மற்றும் திரைக்கதை: எஸ்.ஆர்.பிரபாகரன்

தயாரிப்பு: அபினேஷ் இளங்கோவன் (Abi & Abi Entertainment PVT LTD)இணை தயாரிப்பு - இர்பான் மாலிக்

இசை: தரண்

எடிட்டிங்: பிஜு. V. டான் போஸ்கோ

ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்

A ZEE5 Original “Sengalam” Trailer Launch Event!

 A ZEE5 Original “Sengalam” Trailer Launch Event!


ZEE5 has been consistently delivering laudable content based on different genres, which has garnered a tremendous response from the audiences. The reputed OTT platform is now ready with its next Original titled ‘Sengalam’, produced by Abinesh Elangovan (Abi & Abi Entertainment PVT LTD), and directed by SR Prabhakaran. This is the first-ever Tamil web series based on a political thriller and is set against the backdrop of Southern Tamil Nadu. It features Kalaiyarasan and Vani Bhojan as the titular characters. The trailer launch of this series was held in Chennai. “Sengalam” is set to premiere on ZEE5 on 24th March


Siju Prabhakaran, Chief Cluster Office, ZEE5, South said, “Sengalam has been a long journey with SR Prabhakaran. This will be a never-seen-before political story. It will appeal to the interests of all audiences. We are overwhelmed with the lovely response you all gave for Ayali, and we request you the same for Sengalam as well. I wish the entire team, great success. Thank you.”







Kaushik Narasimhan, Senior Vice-President, ZEE5 Tamil said, “The support you all extended for Ayali was immense. Sengalam belongs to a different world from Ayali. I am happy to see that the entire team has worked a lot for the finest output, and wish them all success. We are happy and exhilarated to present you Sengalam soon. I request you all to watch and support it.”


Music Director Dharan Kumar said, “Producer Abhinesh is my close friend, and he got me onboard for this project. This will be a best creation that you will all enjoy watching. Director has extracted the best out of me. All the actors have delivered a promising performance. My heartiest wishes to everyone in the team for a great success.”


Cinematographer Vetrivel Mahendran said, “ This is my first web series and my first project with SR Prabhakaran sir. I am a huge fan of Ameer sir, and I am so glad to hear him appreciate my work. Sengalam has come out very well, and will definitely impress the audiences. Thank You.”


Editor Don Bosco said, “I thank SR Prabhakaran, sir. He narrated the script a couple of years ago, and we decided to make it into 2 part movie. The film has an intense story, and we believe it will bring a reputation to everyone on the team. Thank you.”


 Actor Daniel said, “Many times, I would be rejected for the rural-based roles, as many have found me familiar speaking in Tamil with Chennai linguistics. In contrast, the director trusted me and gave me this opportunity to me. I believe I have not disappointed him. Sengalam will be a benchmark in the Tamil industry. I request you all to support this web series.”


 Actor Prem said, “Sengalam will be a successful project. All the actors performed with utmost dedication. SR Prabhakaran’s screenplay and dialogues will be one of the intriguing elements in this movie. We are happy to materialize his vision. I am curiously waiting to see the series on the screens soon.”


 Actress Shali Nivekas said, “This is my debut in the OTT platform. The story is the hero of this series. I thank SR Prabhakaran sir, ZEE5, and the entire team for giving me this opportunity to me. I request you all support our efforts. Thank you.”


Actor Kannan said, “I am a long time friend of SR Prabhakaran, and I never imagined that I would be acting under his direction. I am a cinematographer, and am debuting as actor. I request you all to support us.”


Actress Viji Chandrashekar said, “ZEE5 has created such a great platform for actors that they can blindly get into their projects. Their choice of scripts and execution is best. Director SR Prabhakaran has created wonderful work. The entire team has worked a lot to deliver good content. I have performed a riveting character in this series. I request you all to support Sengalam.” Actress Vani Bhojan said, “I will openhandedly accept any projects from ZEE5. It’s because of their sheer proficiency in choosing the best works. ZEE5 Kaushik was the first one to describe my character to me. When SR Prabhakaran narrated the script, I was engrossed, but I couldn’t take up the project during that time due to my father’s health issues. However, everyone on the team gave complete support and confidence and made me perform. I feel all such gestures are beautiful blessings for me. I am glad now for having been a part of a wonderful project. I thank SR Prabhakaran, sir. I request you all to support Sengalam.”


Director SR Prabhakaran said, “I invited Ameer sir for this occasion, only a couple of days ago, and I thank him for being here to wish us. I am standing before you all with the same nervousness and aspirations that were prevalent during my debut film. After the narration, Kaushik sir told me that it can be made as a web series, but I was doubtful. However, his encouragement and motivation instilled confidence in me. This was possible only because of ZEE5 alone. Sengalam is a political thriller that will offer many surprises. Kalaiyarasan will outshine in any given role, and he has done remarkable work in this series. Vani Bhojan has been amazing. Viji Madam, Shali, Kannan, and everyone in the cast have done a good job. Both the cinematographer and music director have been a great support for me. All the technicians relentlessly worked without any expectations. We will be soon screening you Sengalam. Requesting you all support our work. Thank You.”


Director Ameer said, “Most of the crewmembers of this series are very close to me. I am happy to see them deliver beautiful content. When I saw the trailer, I got slightly jealous that I couldn’t do such a project. Generally, when an artist or technician gets envy of others' works, it would be a good project. In this manner, I can assure you all that SR Prabhakaran has already won. Music was the first intriguing element to capture my interest in this trailer. Visuals are beautifully captured, and all the actors have done colossal work. ZEE5 has been continuously creating good content, and Sengalam will be yet another feather to its cap. Thank you all.”


Cast and Crew: Vani Bhojan, Kalaiyarasan, Sharath Lohistashwa, Viji Bhairavi Chandrasekhar, Shali Nivekas, Manasha Radhakrishnan, Vela Ramamoorthy Bucks, Muthu Kumar, Daniel Annie Pope, Arjai, Pawan, Prem, Gajaraj, Pooja Vaidhyanathan.


Direction & Screenplay: S. R. Prabhakaran

Produced by: Abinesh Elangovan (Abi & Abi Entertainment PVT LTD)

Co Producer - Irfan Malik

Music: Dharan

Editing: Biju. V. Don Bosco

Cinematography: Vetrivel Mahendran


“Sengalam” is set to premiere on ZEE5 on 24th March