Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Friday 22 December 2023

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர்

 *ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது!*




தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ரேவா ஹங்கேரியில் நம்பிக்கைக்குரிய இசைக்கலைஞர்கள் குழுவுடன் உருவாக்கியுள்ளார். 


இது குறித்து இசையமைப்பாளர் ரேவா கூறும்போது, “அற்புதமான பல திறமைசாலிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் டில்லி பாபு சார், பிவி ஷங்கர் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா சார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசையமைப்பது மிகவும் சவாலானது. இந்தப் படத்தின் கதை மூலம் இசையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார். 


ஜி.வி.பிரகாஷ்குமார் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ‘கள்வன்’ படத்தின் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. வர இருக்கும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் இன்னும் சில நடிகர்கள் நட்சத்திரக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.


*தொழில்நுட்ப குழு*:


தயாரிப்பாளர் - ஜி.டில்லி பாபு

தயாரிப்பு இல்லம் - ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி

ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் - பிவி ஷங்கர்

இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்

எடிட்டிங் - சான் லோகேஷ்

கலை - என்.கே. ராகுல்

ஸ்டண்ட் - திலிப் சுப்பராயன்

கதை - ரமேஷ் ஐயப்பன் | பிவி சங்கர்

திரைக்கதை - பிவி ஷங்கர் | ரமேஷ் ஐயப்பன்

வசனங்கள் - ரமேஷ் ஐயப்பன் | ராஜேஷ் கண்ணா | பிவி சங்கர்

கூடுதல் திரைக்கதை - SJ அர்ஜுன் | சிவகுமார் முருகேசன்

நிர்வாக தயாரிப்பாளர் - பூரணேஷ்

தயாரிப்பு நிர்வாகி - எஸ்.எஸ்.ஸ்ரீதர்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - கே.வி. துரை

பாடல் வரிகள் - சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம்

ஆடை வடிவமைப்பாளர் - கிருஷ்ண பிரபு

ஸ்டில்ஸ் - இ.ராஜேந்திரன் காஸ்ட்யூமர் - சுபியர்

ஒப்பனை - வினோத் சுகுமாரன்

PRO - சுரேஷ் சந்திரா | ரேகா டி'ஒன்

விளம்பர வடிவமைப்பாளர் - வின்சி ராஜ்

No comments:

Post a Comment