Featured post

Pavan Wadeyar joins hands with Hattrick Hero Shivanna for the first time

 Pavan Wadeyar joins hands with Hattrick Hero Shivanna for the first time: Produced by KVN and Wadeyar Movies *A film in the combination of ...

Thursday, 14 December 2023

லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு': போதை மருந்துகள் பயன்பாட்டுக்கு

 *'லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு': போதை மருந்துகள் பயன்பாட்டுக்கு எதிராக ஏஐ அனிமேஷன் மூலம் உருவாகியுள்ள ஒரு புது இசை முயற்சி!*



போதைப்பொருள் பழக்கத்தினால் விளையும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்  முயற்சியாக, எங்கள் சமீபத்திய திட்டமான 'லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு' என்ற பாடலை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இசை முயற்சியை  வைசாக் எழுதி, பாடியுள்ளார் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் இந்தப் பாடல் நோக்கமாக கொண்டுள்ளது.


போதைப் பொருள் மூலம் நடக்கும் குற்றங்களைத் குறைக்கவும் சமூகத்தின் பாதுகாப்பை வளர்ப்பதிலும் தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத் துறையின் பங்கு (டிஎன் சிஐடி) போற்றுதலுக்கு உரியது. சமூகத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த முயற்சியை TN CIDக்கு மிகுந்த மரியாதையுடன் அர்ப்பணிக்கிறோம்.


'லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு' என்பது வெறும் பாடல் என்பதையும் தாண்டி, இதனை செயல்படுத்த வேண்டும் என்பதற்கான உணர்ச்சிமிக்க அழைப்பு. அழுத்தமான பாடல் வரிகள், உற்சாகமூட்டும் இசை மற்றும் ஏஐ அனிமேஷனைப்

பயன்படுத்தி புதிய அணுகுமுறையில், போதைப்பொருள் விளைவிக்கும் தீங்கைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிக்க முயற்சி செய்கிறோம். இந்தப் பாடல் மூலம் உரையாடல்களைத் தொடங்குவதும், இதன் நோக்கத்தை செயல்படுத்த வைப்பதும், இறுதியில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் பிடியிலிருந்து விடுபட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பதே எங்கள் குறிக்கோள்.


இசையின் சக்தி மற்றும் ஏஐ அனிமேஷனின் இந்த புதுமையான பயன்பாடு மூலம் அதிக அளவிலான பார்வையாளர்களை இந்தப் பாடல் சென்றடைந்து நம்பிக்கை தரும் செய்தியை வழங்குவோம் என்று நம்புகிறோம். எதிர்கால தலைமுறையினருக்கு போதைப் பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் கைகோர்ப்போம்.

No comments:

Post a Comment