Featured post

BOONIE BEARS: GUARDIAN CODE

 *BOONIE BEARS: GUARDIAN CODE* இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் த...

Monday 18 December 2023

தீதும் சூதும் விமர்சனம்

 தீதும் சூதும் விமர்சனம்

கதையின் நாயகனாக ஸ்ரீ மற்றும் ஸ்ரீனிவாசன் இருவரும் கதையின் நாயகியான அங்கனாவை கடத்தி நிர்வாணமாக படம் பிடிக்கின்றனர்.


இந்த படத்தை செல்வந்தரான அங்கனாவின் தந்தையான அவினாஷுக்கு அனுப்பி சில கோடிகளை கேட்கின்றனர். பணத்தை கொடுத்தால் மட்டுமே மகளை விடுவிப்பதாகவும் கூறுகின்றனர்.


கடத்திய இருவரில் ஒருவரான ஸ்ரீ, அங்கனாவின் காதலன் என்பது அங்கனாவிற்கு தெரிய வருகிறது.


அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை. ஸ்ரீ யார்.?? ஸ்ரீனிவாசனின் பின்னணி என்ன என்பதற்கும் படத்தின் பிற்பாதியில் விடை இருக்கிறது.


கதையின் நாயகனான ஸ்ரீ முதலில் அமைதியான ஒரு ஓட்டத்தை கொடுத்தாலும், சிறிது நேரத்தில் அவரது அவதாரத்தை காட்டியது ப்ளஸ்ஸாக இருந்தது. பார்த்தை கதையாக இருக்கிறதே என்று எண்ணும் நேரத்தில் கதையின் போக்கையே மாற்றி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.


ஸ்ரீனிவாசன் தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார். அங்கனாவின் நடிப்பும் அற்புதம் தான்.


பிரணவ் கிரிதரனின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்தது. பராந்தகனின் ஒளிப்பதிவு கவனம் பெறுகிறது.


ஒரு சில சினிமாத்தனமான காட்சிகளை தவிர்த்திருந்திருக்கலாம்.


தீதும் சூதும் – திருப்பம்…


தயாரிப்பாளர்கள் – ஸ்ரீ, எஸ். ஆர். ஜெ.

இணை தயாரிப்பாளர்கள் – ஜெயந்தி. பா, மணிகண்டன். பா, பாலாஜி.பா

இயக்கம் – ஜித்தா மோகன்

ஒளிப்பதிவு – பராந்தகன். இ (ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் உதவியாளர்)

இசை – பிரணவ் கிரிதரன்

படதொகுப்பு – புவனேஷ் மணிவண்ணன்

சண்டை பயிற்சி – ஜி

நடனம் – லலிதா ஷோபி

கலை – எஸ். எஸ். சுசீ தேவராஜ்

பாடல்கள் – ஜெ, மனோஜ் பிரபாகர். எம்

திரைக்கதை, வசனம் – ஸ்ரீ

மக்கள் தொடர்பு – சி. என். குமார்

No comments:

Post a Comment