Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Friday, 29 December 2023

இந்தியாவில் 150 கோடியைத் தாண்டி, பாக்ஸ் ஆபிஸில் களைகட்டும்

 *இந்தியாவில் 150 கோடியைத் தாண்டி, பாக்ஸ் ஆபிஸில் களைகட்டும்  ராஜ்குமார் ஹிரானியின் டங்கி!  7 நாட்களில் உலகளவில்  300 கோடியைத் தாண்டி சாதனை !!*

இதயம் வருடும் ஆழமான கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பால், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் வாழ்வியலைச் சொல்வதில் அவர்களுக்கு நெருக்கமான படைப்பாக அமைந்திருக்கிறது 

திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது டங்கி. இப்படம் இந்தியாவில் மட்டும் 150 கோடியைத் தாண்டியுள்ளது மேலும்  உலக பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை வெறும்   7 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது. 

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியானது

No comments:

Post a Comment