Featured post

டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம்

 *'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!* 'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த  ...

Wednesday, 27 December 2023

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா*




டி10 தொடர் இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில்  சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.


அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர். 


இந்நிலையில், சென்னை அணியின் உரிமையை தமிழின் முன்னணி நடிகரான சூர்யா பெற்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக இந்த ஐஎஸ்பிஎல் தொடர் நடத்தப்படும். இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ் நாட்டின் தெருக்களில் இருந்து விளையாட்டு வீர்ர்களை ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்வதே இந்த ஐ.எஸ்.பி.எல் - இந்தியன் ஸ்ட்றீட் ப்ரீமியர் லீகின் நோக்கம்.

No comments:

Post a Comment